Tuesday, June 19, 2018

கோசார கிரக பலன்கள்



ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –


         கோசார சூரியன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு பிரபலமான, மதிப்பு மிக்க மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும். பண்பட்ட நபர்களின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சமூகத்தில் ஜாதகரின் அந்தஸ்து, மதிப்பு மரியாதையும் மேலும் உயரும்.
         கோசார சந்திரன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு பெண்களுடன் தொடர்பு, தீடீர் பயணங்கள், இரவு உணவு பார்ட்டிகள் ஆகியவை ஏற்படும்.
         கோசார செவ்வாய் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு சிறிது இரத்த அழுத்தம் கூடும். இரத்த உறவுகளை சந்திப்பார். ஜாதகருக்கு பிடிவாத குணமும், வேகமான செயல்பாடுகளும் அதிகரிக்கும். தொழிலில் அஜாக்கிரதை உணர்வோடு திகழ்வார். சரியாக வேலை பார்க்கமாட்டர். இச்சமயம் இவரின் நண்பர்களின் பிடியில் உள்ள இவரின் எதிரிகள் இவருக்கு தொல்லை கொடுக்க சரியான நேரத்தை எதிர் நோக்கியிருப்பர். ஜாதகருக்கு உடலில் அதிகப்படியான உஷ்ணமா இருக்கும். அக்னி மூலமான ஆபத்துக்கள் ஏற்படலாம். ஜாதகியானால், அவளின் கணவர் வசிக்கும் இருப்பிடத்தை மாற்றுவார். புதிய வீடு அவருக்கு அனுகூலமானதாகவும், நன்மை தருவதாகவும் அமையும்.
         கோசார புதன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகரின் ஆன்மிக அறிவு அதிகரித்து ஒரு புதிய அனுபவத்தை பெறுவார். அவருள் ஒரு மேதாவித்தனம் உதிக்கும். வேதங்களைக் கற்றுத் தேர்வார். ஜாதகியானால், தன் கணவனைத் தவிர மற்றவர்கள் மிகச் சிறப்பானவர்கள் என்பதை உணரத் தொடங்குவதோடு, அவரை கணவனை விட அதிகமாக விரும்புவாள். அவள் தன் மனதைக் கவர்ந்த கௌரவம் மிக்க நண்பர்களுடனும் மற்றும் தன் நலம் விரும்பிகளுடனும் அதிக நேரத்தைச் செலவிடுவாள். குடும்பத்தில் உள்ள இளம் வயதினர் வேறு இடங்களில் சந்தோஷத்தை பெறுவர்.
         கோசார சுக்கிரன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எழும். ஜாதகரின் பொருளாதார நிலை மதிப்பு மிக்க நிலையில் உயரும். ஜாதகருக்கு அழகிய பொருட்கள் கிடைக்கும். ஜாதகரின் மனைவி புனிதமான பெரியவர்களை சந்தித்து மத சம்பந்தமான விழாக்களை நடந்த திட்டமிடுவாள்.
         கோசார சனி - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு நன்மை அளிக்கும் வகையில் அவருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். அவருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்து, மதிப்பும் மரியாதையும் கூடும். பணியிடத்தில் உள்ள மிகப் பெரிய மதிப்புமிக்க மனிதர்களின் கூட்டு ஏற்பட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். ஜாதகர் வயிற்றில் வாயுத் தொல்லையால் கஷ்டப்படுவார். 
         கோசார இராகு - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகர் மனப் பிரமையால் கஷ்டப்படுவார். மேலும், வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதென  பய உணர்வு ஏற்படும். அவர் கும்இருட்டில் குடியிருப்பது போன்ற உணர்வில் இருப்பார். அவர் மூட்டுவலியால் கஷ்டப்படுவார்.
         கோசார கேது - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகர் தெய்வீக சிந்தனைகளில் ஈடுபட்டு, சிறப்பான ஆன்மிக விழாக்களைக் கொண்டாட நினைப்பார். இந்த பூலோக வாழ்க்கை நிலையற்றது என்ற எண்ணத்திலே வாழ்வார். துறவரம் பூணும் எண்ணம் எழும். ஜாதகருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். தெய்வபக்தியுள்ள மனிதர்களை சந்திப்பார்.
ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார சூரியன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகரின் மனைவி ஆரோக்கயக் குறைவால் கஷ்டப்படுவார்.  ஜாதகர் பொருளாதார விஷயங்களில் கஷ்டங்களை அனுபவிப்பார்.
         கோசார சந்திரன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகர் பொருளாதார நிலை குறைவதாலும், கடன்களாலும் அவதிப்படுவார். பொருளாதார விஷயங்களால் ஜாதகர் சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்களில் ஈடுபட நேரும். ஜாதகரின் மனைவிக்கு இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்படும் கோளாறு காரணமாக இன்னலுறுவார். அதன் காரணமாக அவருக்கு ஆரோக்கியக் குறைவு தொடர்ந்து இருக்கும். ஜாதருக்கு சூது நிறைந்த மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும்.
         கோசார செவ்வாய் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகியானால், அவரின் கணவனுக்கு பலவழிகளிலும் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஜாதகர் இரத்த பந்தங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் சந்திப்பை எதிர்பார்க்கலாம்.  
         கோசார புதன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு புதையல் கிடைக்கும். நில பரிவர்த்தனை மூலமான பணவரவுகள் இருக்கும். வீடு வாசல் சேரும். நெருங்கிய நண்பர்கள் சந்திப்பு, கேளிக்கை, இனிய விழாக்கள் போன்றவற்றால் சந்தோஷம் பெருகும்.
         கோசார சனி - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகர் மனைவியை எதிர்பார்க்கலாம். ஒரு தோழியையும், செல்வ நிலையையும் எதிர்பார்க்கலாம். ஜாகரின் மனைவி தனது குடும்பக் கடமைகளை சீராக, அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வார்.
         கோசார இராகு - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு பொருளாதார வரவுகள் தடைப்படும். வீடு போன்ற சொத்துக்களில் வழக்கு விவகாரங்கள் ஏற்படும். ஜாதகரின் மனைவிக்கு உடல் ஆரோக்கியம் குறையும். குடுப்பத்தாரிடையே சண்டை சச்சரவுகள் இருக்கும்.
         கோசார கேது - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு புதிய, அழகிய, நவீன நான்கு சக்கர (கார்) வாகனத்தை வாங்குவார். ஜாதகர் கபட நாடகமாடும் பெண்ணின் சதிவலைக்குள் மாட்டிக்கொள்ள நேரலாம்.

Saturday, June 16, 2018

கோசார செவ்வாய், புதன்








ஜனன ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
          கோசார சூரியன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தையின் சகோதரர்கள் 6 பேருக்குத் தடைகள் ஏற்படும். ஜாதகருக்கு சிறித் இரத்த சம்பந்தமான கௌளாறுகள் ஏற்படும்.
         கோசார சந்திரன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் தாய்க்கு சிறிது பிடிவாதகுணம் ஏற்படும். அத்துடன் மனவருத்தங்களும், மன அமைதியின்மையும் ஏற்படும். ஜாதகரின் சகோதரர்களுக்கு பயண வாய்ப்புகள் ஏற்படும். பெண்ணானால் ஜாதகியின் கணவனுக்குப் பயண வாய்ப்புகள் ஏற்படும்.
         கோசார புதன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகருக்கு நண்பர்களுடனோ அல்லது சகோதரர்களுடனோ வழக்கு விவகாரங்கள் ஏற்படும். ஜாதகரின் நெருங்கிய நண்பர்களே பகைவர்கள் ஆவர். ஜாதகருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள், எலும்புக் கோளாறிகள் ஏற்படலாம். மேலும், மாமனார் மற்றும் தாய் மாமன் ஆகியோருடன் வாக்குவாதம், சண்டை, தர்க்கம் ஆகியவை ஏற்படும். ஜாதகியானால் அவரின் கணவர் அவரது தோழி மற்றும் நண்பனை சந்திக்கும் நிலை ஏற்படும்.
         கோசார குரு - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகர் தனக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்வார். அவசரமாக, வேகமாகச் செய்யும் குணம் மற்றும் பிடிவாதமான குணத்தால் நெருங்கியவர்களிடம் விரோதம் பண்ணிக் கொள்ளுவார். ஜாதகரின் சகோதரர்களில் ஒருவருக்கு சமூகத்தில் உயர்ந்த பதவி கிடைத்து மதிப்பு மரியாதையுடன் வாழ்வார். ஜாதகியானால், அந்த வாய்ப்பு அவள் கணவனுக்குக் கிடைக்கும். ஜாதகருக்கு இரத்த அழுத்தம் ஏற்படும்.
         கோசார சுக்கிரன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் சகோதரருக்கு பொருளாதார இலாபங்கள் அதிகரிக்கும், ஆனால், ஜாதகருக்கு மத்தியஸ்தம் செய்பவர்கள் அல்லது நடுவில் உள்ளவர்களால் பொருளாதார விஷயங்களில் தடைகள் ஏற்படும். ஜாதகியானால், அவளுக்குக் கணவனிடம் இருந்து பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். கணவனுக்கும் பொருளாதார இலாபம், உயர்வு இருக்கும்.
        கோசார சனி - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது அல்லது செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 1, 5, 9 ஆம் இடங்களில் நகரும்போது, தொழில், வேலைகளில் அவரின் உயர் அதிகாரிகளின் தொந்திரவு தாங்காமல், ஓய்வற்ற நிலை ஏற்படும். உயர்அதிகாரிகளுடன், முதலாளியுடன் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும். ஜாதகியானால், அவள் கணவருக்கு மேற் சொன்ன நிலைகள் ஏற்படும்.
        கோசார இராகு - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகருக்கு இரத்த சம்பந்தமான பிரச்சனைகள், சில ஆபத்துகள் ஏற்படும். அவரின் சகோதரர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிப்பார். ஜாதகியானால், அவளின் கணவர் எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பார். அத்துடன் வாகனங்கள் தொடர்பான கஷ்டங்களை, சிக்கல்களை அனுபவிப்பார்.
         கோசார கேது - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் சகோத்தரர் ஒருவர் கவலைகளும், கஷ்டங்களும் ஏற்பட்டி அல்லல் படுவார். ஜாதகருக்கு நரம்புத் தளர்ச்சியும், பொதுவாக உடல் பல மின்மையும் ஏற்படும். ஜாதகியானால், அவள் கணவருக்கு பணியிடத்தில் மோசமான, விவகாரமான நிலைகள் ஏற்பட்டு, மிகுந்த கஷ்டங்களை, தொல்லைகளை அனுபவிப்பார்.  
ஜனன ஜாதகத்தில் புதன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார சூரியன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு பூமி இலாபமும், வர்த்தகத் துறையில் வெற்றிகளும் கிடைப்தோடு, நெருங்கிய இனியவர்களுடன் சந்திப்பும் நிகழும். ஜாதகியாகி, புதன் வக்ரநிலையில் இருந்தால் அவளுக்கு ஆண் நண்பருடன் சேர்க்கை ஏற்படும்.
        கோசார சந்திரன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு வாணிபத்தில் பண நஷ்டம் ஏற்படும். கோள் சொல்பவர்களால் கஷ்டங்களை அனுபவிப்பார். உச்ச புதன் ஆகில் உயர்ந்த சமூகத்தில் உள்ள பெண்ணின் நட்பு  ஏற்பட்டு ஜாதகர் கஷ்டப்படுவார். புதன் விருச்சிகத்தில் இடம் பெற்றால் கீழான நபர்களின் கூட்டால் ஜாதகர் இன்னலுறுவார். மேலும், வஞ்சகம், சூதுகளால் நில விஷயத்திலோ அல்லது மனை ஆகியவற்றில் பிரச்சனைகளை சந்திப்பார், ஜாதகியானல் அவர் யூட்ரின் பிரச்சனையால் பாதிப்பு அடைவார்.
        கோசார செவ்வாய் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகர் எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட்டு துன்புறுவார். அமைதியின்மை, இரத்த உறவுகளுடன் வாக்குவாதம், சண்டை ஆகியவை ஏற்படும். மன அமைதியின்மை, இரத்த உறவுகளுடன் சண்டை சச்சரவு, வாக்குவாதம் ஆகியவையும் ஏற்படும். அவரின் இனிய நண்பர்களே எதிரியாவர். ஜாதகியானால், அவளின் கணவன் தனது நெருங்கிய நண்பர்களை சந்திப்பார். ஜாதகத்தில் புதனுடன் சூரியன் இருந்தால் இந்த பலன்களில் சிறிது மாறுபாடுகள் இருக்கும்.
        கோசார குரு - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகர் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வார். ஜாதகரின் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். கல்வி தொடர்பான நிலைகளில் கௌரவமும், புகழும் கூடும். அறிஞர்களின் மற்றும் அறிவார்ந்த ஆசிரியர்களின், குருவின் ஒத்துழைப்புகளும் கிடைக்கும். ஆன்மிகத் தலங்கள் ஆலயங்கள் ஆகியவற்றுக்கான புனித பயணங்கள் ஏற்படும்.  
         கோசார சுக்கிரன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு புதையல் கிடைக்கும். இனிய சுற்றுலாப் பயணங்கள் செல்வார். பூமி, வீடு ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும்.  இது போன்ற அனுகூலமான, சந்தோஷ நிகழ்வுகளும் நிகழ்வதோடு ஜாதகரின் மனைவிக்கு பூமி இலாபம், சொத்துக்கள் சேர்க்கை ஆகியவை ஏற்படும். 
         கோசார சனி - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு பூமி இலாபம் ஏற்படும். புதிய வணிக நிறுவனத்தை ஆரம்பிப்பார். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினரால் அனுகூலமான நிலை உருவாக்கப்படும். தொழில் விஷயத்தில் சுலபமான, எளிதான வழிகளில் செல்ல முடியும்.   
         கோசார இராகு - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு மனப்பிரமை மற்றும் மனோபயத்துடன் கூடிய கூடுதல் அறிவு உருவாகும்.  வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு சிறிதளவு உடல் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படலாம். தோல் வியாதி ஏற்படும். சில காலத்துக்கு வீட்டை துக்க மேகங்கள் சூழும். ஜாதகருக்கு விலைமதிப்பு மிக்க கார் போன்ற வாகனங்கள் வாங்கும் நிலை ஏற்படும்.
         கோசார கேது - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு எதையும் கிரகிக்கும் தன்மைகளில் சிறிது தடைகள் ஏற்படும். தன்னை உணருதல் மற்றும் சட்டபூர்வமான விஞ்ஞானம் போன்ற விஷயங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். ஜாதகரின் இளைய சகோதரி தனது உடலில் சிறிது ஆரோக்கியமற்ற நிலையை உணர்வார். இவரது நிலங்கள் வேலி போட்டு அடைக்கப்பட்டிருக்கும். இவர் எழுதிய புத்தகங்களும் வெளியிடாமல் தடைபட்டிருக்கும்.


Tuesday, June 5, 2018

திருமணம்




திருமணம்



ஜாதகம் – 2
         7 ஆம் பாவம் 7 ஆம் வீடான கும்பத்தில் வர்கோத்தமமான கேது அமர்ந்துள்ளார். கேதுவை, 7 ஆம் அதிபதி சனி, சுபரான குரு, சுக, பாக்கியாதிபதியும், யோக காரகருமான செவ்வாய் ஆகியோரால் பார்க்கப்படுகிறார். 7 ஆம் அதிபதி சனி, 7 ஆம் பாவமான தனது வீட்டையே பார்ப்பது ஒரு ஸ்திரமான நிலையாகும். குரு, மற்றும் செவ்வாய் தற்காலிக சுபர்கள் ஆதலால், அவர்களின் பார்வை 7 ஆம் இடத்தை பலப்படுத்துகிறது. கேது, செவ்வாயின் பலனையோ அல்லது இடம் கொடுத்தவரான சனியின் பலனையோ தரவல்லது. எனவே, 7 ஆம் இடத்தைப் பொருத்தவரை எந்தவித பாதிப்பும் இல்லை.
         7 ஆம் அதிபதி 7 ஆம் அதிபதி  சனி, சுப இராசியான ரிஷபத்தில், தசம கேந்திரத்தில் சுபகர்த்தாரி யோகத்தில், ஒரு புறம் சந்திரனும், மறுபுறம் குரு, சுக்கிரன் என, நடுவில் அமர்ந்துள்ளது. எனவே, 7 ஆம் அதிபதியின் நிலையும் சிறப்பு.
         களத்திரகாரகன் நட்பு இராசியில் சுக்கிரன், குருவுடன் இணைந்து உள்ளார். அவர் சனி மற்றும் சூரியன் இருவருக்கிடையே பாபகர்த்தாரியில் இருந்தாலும், குருவின் இணைவு சமன் செய்து விடுகிறது. மேலும், சூரியனும் சனியும், முறையே இலக்னம் மற்றும் 7 ஆம் அதிபதிகளாகி பாவத்துக்கும், காரகருக்கும் நல்ல பலனையே அளிக்கிறார்கள்.
        7 ஆம் அதிபதி சுப இராசியில் இடம் பெற்று நன்நிலையில் இருப்பதால் ஜாதகருக்கு அழகிய மனைவி அமைவாள். 7 ஆம் இடமும் நன்னிலையில் இருப்பதால், மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும். 7 இல் கேது நன்மை செய்தாலும், மனைவியின் நுண்வுணர்வு காரணமாக இருவருக்கும் இடையே சில நேரங்களில், சிற்சில எண்ண பேதங்களை உருவாக்கத்தான் செய்யும்.
       

சந்
சனி
குரு,
சுக்


குரு
சுக்
லக்
செவ்,
சந்,சனி
கேது
ஜாதகம் - 2
இராசி
03-8-1942-
காலை 7-23 -13°வ 00’,77° கி 35’
சூரி
புத
கேது


   நவாம்சம்


லக்,
செவ்
ராகு

இராகு




சூரி,புத





கேது தசா இருப்பு – 2 வ – 0 – 7 மா.
       இவருக்குத் திருமணம் 1972 ஆம் வருடம் சந்திர திசை, சந்திர புத்தியில் நடந்தது. 1). 7 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்த இராசி, நவாம்சாதிபதி – சுக்கிரன், புதன்.  2). சுக்கிரன் 3). சந்திரன். 4). 2 ஆம் அதிபதி இடம்பெற்ற இராசி அதிபதி = சந்திரன் 5). கர்மாதிபதி = சுக்கிரன். பாக்கியாதிபதி = செவ்வாய் 7) 7 ஆம் அதிபதி, 7 இல் உள்ள கிரகம் மற்றும் 7 ஆம் வீட்டைப் பார்வை செய்யும் கிரகங்கள் = சனி, கேது, செவ்வாய், குரு ஆகிய தசா காலங்கள் திருமணத்தைத் தரவல்லன. புதன் தசை நடக்காது. செவ்வாய். சனி காலங்கள் மிகவும் தாமதமாகும். சனி 7 ஆம் அதிபதி ஆவதால் திருமணத்தைத் தாமதப்படுத்தமாட்டார். எனவே, ஜாதகருக்கு சந்திர தசை சுயபுத்தி திருமணத்திற்கு சாதகமானது.
ஜாதகம் – 3
        7 ஆம் வீடு – அதன் அதிபதி சுக்கிரன் மற்றும் பாக்கியாதிபதி சூரியனால் பார்வை பெறுகிறது. 7 இல் எந்த ஒரு கிரமும் இல்லை.
        7 ஆம் அதிபதி7 ஆம் அதிபதி சுக்கிரன் இலக்னத்தில் பாக்கியாதிபதி சூரியனுடன் உள்ளார். சூரியன் அசுபரானாலும், ஆட்சி வீடான தசம கேந்திராதிபதியாகி தற்காலிக சுபராகிவிடுகிறார்.
        களத்திரகாரகன் – இயற்கை சுபரான சுக்கிரன் பூர்வ புண்யாதிபதி மட்டுமன்றி, களத்திர பாவாதிபதியும் ஆகிறார்.
         சந்திர இராசியில் இருந்து பார்க்கும் போது – 7 ஆம் இடம் மேஷம், 10 ஆம் இடத்து அதிபதி சந்திரனாலும், 9 ஆம் மற்றும் 12 ஆம் அதிபதி புதன், யோக காரகன் உச்ச சனி மற்றும் 7 ஆம் அதிபதி செவ்வாயால் பார்க்கப்படுகிறது. களத்திராதிபதி செவ்வாயின் பார்வை நல்லது என்றாலும் விரய பாவத்துக்கும் அதிபதியாகி சில பாதிப்ப தந்தாலும், 9 ஆம் அதிபதி மற்றும் உச்ச சனி ஆகியோரின் கூட்டுப் பார்வை சக்தி மிக்கதாகி பாதிப்பினை சரி செய்துவிடுகிறது.
         ஆய்வுக் கருத்து இந்த ஜாதகர் காமவுணர்வும், அர்பணிப்பு உணர்வும் உடைய பெண்ணை மனைவியாகப் பெற்றார். இது 7 ஆம் அதிபதியும், காரகனுமான சுக்கிரன், தனது பாவத்தைப் பார்வையிடுவதால் உறுதியாகிறது அல்லவா ?
        இந்த ஜாதகருக்கு மே - 1977 இல் திருமணம் நடந்தது. கீழ்கண்ட                                       கிரகங்கள் திருமணத்துக்கு சாதக நிலைகளை தரக் கூடியவை ஆகும். 1). இராசி மற்றும் நவாம்சத்திலும் 7 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவர்கள் = செவ், சூரியன். 2). சுக்கிரன் 3) சந்திரன் 4) 2 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவன் = புதன் 5). கர்மாதிபதி = சூரியன். 6). பாக்கியாதிபதி – சந்திரன். 7) 7 ஆம் அதிபதி சுக்கிரன், 7 இல் கிரகம் இல்லை, 7 ஆம் இடத்தைப் பார்க்கும் கிரகங்கள் = சூரியன்.




குரு



சந்


புத

ஜாதகம் -3
இராசி
03-4-12-1953-
காலை 5-17 –
13° 00’,77° கி 35’
கேது
இராகு


   நவாம்சம்
லக்
இராகு

சனி
சுக்,
கேது

லக்,சுக்
சூரி
சனி,சந்
புத
செவ்
சூரி,


குரு
செவ்
       
குரு தசா இருப்பு – 14 வ – 1 மா – 20 நாட்கள்
 
        மேலே கண்டவற்றில், புதன் திசை சரியான காலமாக இருந்தாலும் அது மிகவும் தாமதமாக 33 வது வயதில் வருகிறது. இந்த ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கான காரணிகள் ஏதுமில்லை. எனவே, புதனுடன் தொடர்புடைய கிரகங்களான, சந்திரன், சனியை அடுத்ததாக எடுத்துக் கொண்டாலும், சந்திர திசை தாமதமாகவும், சனி திசை இளமையிலும் வந்துவிடுகின்றன. எனவே, 7 ஆம் வீட்டு அதிபதி மற்றும் களத்திரகாரகன், 7 ஆம் இடத்தை பார்வை செய்பவனான சுக்கிர புத்தியில் பழம் பழுக்கலாம். ஆம், ஜாதகருக்கு சனிதிசை, சுக்கிர புத்தியில் திருமணம் ஆனது.


கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக







         கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக



சூரியன் – தந்தை, அரசாங்கம், மகன், ஒளிமிகுந்த, அரசியல்வாதி, அரசன்,
சந்திரன் – தாய், தண்ணீர், தோழி, அசைவு, வெள்ளை, பெண், வஞ்சகம், மோசம்,            பால், கலை, பெண்ணின் மாமியார்,
செவ்வாய் – சகோதரன், எதிரி, அம்பு, கூர்மையான ஆயுதம், தீ, ஆண், சிகப்பு,               படைவீரர், பிடிவாத குணம்.
புதன் – சகோதரி, சகோதரன், பெண், நண்பன், தாய் மாமன், விஷ்ணு, கல்வி,                புத்திசாலித்தனம், நிலம் சொத்து, பச்சை.
குரு – ஆசிரியர், குரு, கௌரவம், மதிப்பு மிக்க, வாழ்க்கை , ஜீவன், இரக்கம்,                அந்தஸ்தை அளிப்பவர், மதபோதகர்.
சுக்கிரன்- பெண் கிரகம், மனைவி, சகோதரி, பொருளாதாரம், வசிப்பிடம், அழகான           உருவம், இனிய குரல்,
சனி – தொழில், புரஃபஷன், மூத்த சகோதரன், கருப்பு,
சனி + இராகு – இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகள்.
சனி – கேது – பட்டாபிஷேகம். பதவியேற்பு, கடமையாற்றும் போது விலகுதல்               பிரிதல்.
இராகு – வாய், முகமதியர், கோபுரம், முட்டை வடிவம், தனித்த அல்லது பாழான            பகுதி, அகன்ற பாதை, வட்டம், வட்ட வடிவம், தந்தை வழி பாட்டனார்,              படுக்கை, தலை, இருட்டு, மனத்தோற்றம், விஸ்தாரமான,                           காலபுருஷனின் வாய்.
கேது – ஜெனரேட்டிவ் ஆர்கன், மயிர், கிருத்துவர், சந்து, நூல், நரம்பு தளர்ச்சி, வக்கீல், தடைகள், வேர், வால், விடுதலை, கயிறு, ஜலதாரை, சாக்கடை, அழிந்த, பாழான, இடிந்த, வயதான, சிறிய, குளியலறை, செயின், நீதிமன்றம், வெப் அல்லது நெட்டில் சிக்குதல்.
         உதாரணம் – ஒரு ஜாதகத்தில் புதன் + கேது இணைவு ஜாதகர் இளமையில் காதலித்து இருப்பார் என்பதைக் குறிகாட்டுகிறது. அடுத்து ஜாதகரின் நண்பன் பிரச்சனையில் இருக்கிறான் என்பதையும் குறிகாட்டும். ஜாதகர் பூமி விஷயமான வழக்கு விவகாரங்களில் சிக்கி இருப்பதையும் குறிகாட்டுகிறது.
ஜனன ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார செவ்வாய், ஜனன சூரியனைக் கடக்கும் போது மனதில்        கோசார சந்திரன், ஜனன சூரியனைக் கடக்கும்போது ஜாதகரின் தந்தைக்கு ஏற்படும் பொருளாதார இலாபத்தையும், அவருக்குப் பயணம் ஏற்படும் என்பதையும் குறிகாட்டுகிறது.
படபடப்பு, பிடிவாதம், கோபத்தால் ஏற்படும் கஷ்டங்கள், தொழிலில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள்  ஆகியவை ஏற்படும். பெண் ஜாதகமானால் கடக்கும் போது அவள் கணவன் கர்வம் மிக்கவனாக நடந்து கொள்வான். ஆண் ஜாதகம் எனில் ஜனன சூரியனை கோசார செவ்வாய் கடக்கும் போது ஜாதகரின் மகனுக்கு கூர்மையான ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
         கோசார புதன் - ஜனன சூரியனைக் கடக்கும் போது நண்பனின் உதவி தந்தைக்குக் கிடைக்கும். அத்துடன் பூமி வகையிஅல் முன்னேற்றங்கள் இருக்கும்.
         கோசார குரு - ஜனன சூரியனைக் கடக்கும் போது மத குருமார்களை சந்திக்கும் வாய்ப்பு தந்தைக்கு ஏற்படும்.  மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் மதிப்பு மிக்க மனிதர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
         கோசார சுக்கிரன் - ஜனன சூரியனைக் கடக்கும் போது தந்தைக்கு பொருளாதார வகையில் இலாபங்கள் கிடைக்கும். மேலும், நுண்ணிய, அழகிய  உருவமுடைய அழகுப் பொருட்களும் கிடைப்பதோடு, ஒரு பெண்ணின் சந்திப்பும் ஏற்படும்.
        கோசார சனி - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு மனவருத்தம், சஞ்சலம், அமைதியின்மை ஏற்படும். தொழில் இடத்தில் ஆபத்துக்கள் ஏற்படும். தந்தை மற்றும் மகனுக்கிடையே வழக்கு விவகாரங்கள் ஏற்படும் முன்னறிவிக்கிறது. மேலும், ஜாதகரின் தந்தைக்கு தொழில் இடத்தில் புதிதாக வந்தவர் மூலமாக ஏற்படும், ஆபத்துக்களை குறிகாட்டுகிறேன்.
           கோசார இராகு - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு                      சோம்பேறித்தனத்தைக் கொடுக்கிறது. மேலும், தந்தைக்கு கண் ஒளி மங்குவதோடு, தீயசெய்திகள் அவரின் காதில் விழும்.
         கோசார கேது - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகர் ஆன்மிக விஷயங்களைப் படிப்பதோடு, புனிதமான பெரிய மனிதர்களை சந்திப்பதைக் குறிகாட்டுவதோடு, ஜாதகரின் தந்தை தெய்வீகத் தன்மை கொண்ட சிந்தனைகளை மேற்கொள்வதோடு துறவு பூணவும் நினைப்பார்.
ஜனன ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார சூரியன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தை தேவையற்ற பழியைச் சுமப்பதோடு, பயணங்களையும் எதிர்பார்க்கலாம்.
         கோசார செவ்வாய் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். சகோதரனுக்கு பயண வாய்ப்புகள் வரும். ஜாதகருக்கு மனக்கவலைகள் ஏற்படும். ஜாதகர் விரைவான மற்றும் அடிக்கடி மாறுகின்ற, சலனப்புத்தி உடையவராக இருப்பார்.
         கோசார புதன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகர் குற்றம் சாட்டப்படுவார். அவருக்குப் பெண்களால், தோழிகளால்  மன அமைதியின்மை, வருத்தம் ஆகியவை ஏற்படும். சிறு பயணங்களும், கலைத்துறை மூலமான இலாபங்களும் ஏற்படும்.
         கோசார குரு - ஜனன சந்திரனைக் கடக்கும் போது இருப்பிட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மறைமுக எதிரிகளின் மூலமாக குற்றம் சாட்டப்படுவார். தெய்வீக தனமையுடைய சிந்தனைகள் ஜாதகரின் தாய்க்கு ஏற்படும். சளி, இருமல் காரணமாக ஆரோக்கியக் குறைவும் ஏற்படும்.
         கோசார சுக்கிரன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் மனைவிக்கோ, மகளுக்கோ ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்கள் ஆகியவை ஏற்பட்டு அதன் காரணமாக மனமைதியும் குறையும். ஜாதகருக்கு தேவையற்ற செலவீனங்களும், பண இழப்புகளும் ஏற்படும்.
         கோசார சனி - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு தொழில், பணி மாற்றங்கள் ஏற்படும். மனதைப் புண்படுத்துகிற நிகழ்வுகளும் ஏற்படும்.
          கோசார இராகு - ஜனன சந்திரனைக் கடக்கும் போது தாய்க்கு ஆபத்துகள் ஏற்படும். ஜாதகருக்கு மன பிரமை மற்றும் பயம் ஏற்படுத்தும் அளவுக்கான நிகழ்வுகள் ஏற்படும்.
          கோசார கேது - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு தெய்வீக சிந்தனைகள் ஏற்படும். புனித நீராடல்கள் ஏற்படும். ஜாதகரின் தாய்க்கு உடலில் உபாதைகள், அசௌகரியங்கள் ஆகியவை ஏற்படும்.