Tuesday, April 8, 2014

2014 Transit effects of Guru., 2014, மூர்த்தி நிர்ணயப்படி -குருப் பெயர்ச்சி பலன்கள்

2014 – மூர்த்தி நிர்ணயப்படி குருப்பெயர்ச்சி பலன்கள்.

    ஒரு கிரகமானது, ஒரு இராசியினின்று மற்றோரு இராசிக்குப் பெயர்ச்சியாகும் போது, ஜன்ம இராசிக்கு எத்தனையாவது இராசியில் வருகிறதோ , அந்தக் கணக்குப்படி அக் கிரகம் சுவர்ணம் (தங்கம்) ரஜதம் (வெள்ளி), தாமிரம்  (செம்பு) மற்றும் உலோகம் ( இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார்கள்

   கிரகப் பெயர்ச்சியன்று -

    ஜென்ம இராசிக்கு 1,6,11 இல் கிரகமிருக்க அது சுவர்ண மூர்த்தி என்றும், 2, 5, 9 இல் இருக்க ரஜத மூர்த்தி என்றும், 3, 7, 10 இல் தாமிர மூர்த்தி என்றும், 4,8,12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் ஆகி பலன் தருவர்.

இராசி
சுப/அசுபத்
தன்மை
பொது
விதி
அளவு
1
சிறப்பு விதி
மூர்த்தி
நிர்ணயம்
அளவு


2
மொத்த
அளவு
1 + 2
பலன்
அளவு
பலன்
மேஷம்
குரு 4 இல் அசுபர்
0
ரஜத
மூர்த்தி
0.250
0.250
¼
அசுப பலன்
குறையும்
ரிஷபம்
3 இல்
அசுபர்
0
உலோக
மூர்த்தி
0.625
0.0625
1/16
தீமை
மிதுனம்
2 இல் சுபர்
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
½+
ஓரளவு நன்மை
கடகம்
ஜன்மம்
அசுபர்
0
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
½
நற்பலன்

சிம்மம்
12 அசுபர்
0
ரஜத
மூர்த்தி
0.250
0.250
¼
தீமை
குறைகிறது
கன்னி
11 சுபர்
0.500
உலோக
மூர்த்தி
0.0625
0.5625
½+
ஓரளவு
நன்மை
துலாம்
10  அசுபர்
0
தாமிர
மூர்த்தி
0.125
0.125
1/8
தீமை
குறைகிறது
விருச்சிகம்
9 சுபர்
0.500
ரஜத
மூர்த்தி
0.250
0.750
3/4
ஓரளவு
நன்மை
தனுசு
8 அசுபர்
0
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
½
  நன்மை
மகரம்
7 சுபர்
0.500
உலோக
மூர்த்தி
0.0625
0.5625
½+
ஓரளவு
நன்மை
கும்பம்
6 அசுபர்
0
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
½
நன்மை
மீனம்
5 சுபர்
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
½+
ஓரளவு
நன்மை


    குரு இந்த ஆண்டு, மிதுன இராசியிலிருந்து, கடக இராசிக்கு, வாக்கியப்படி வைகாசி மாதம் 30 ஆம் தேதி (13 – 6 2014) வெள்ளிக் கிழமையன்று, 30.08 நாழிகைக்குப் பிரவேசிக்கிறார். திருகணிதப்படி ஆனி மாதம் 5 ஆம் நாள் (19 - 6 – 2014) வியாழக்கிழமை காலை 8 மணி 47 நிமிடத்திற்கு, மிதுன இராசியை விட்டு, கடக இராசிக்குள் பிரவேசிக்கிறார்.

    குரு இம்முறை பொது விதிப்படி மிதுனம் (2), கன்னி (11), விருச்சிகம் (9), மகரம் (7), மீனம் (5) ஆகிய ஐந்து இராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார்.

    ஆனால். சிறப்பு விதியான, மூர்த்தி நிர்ணயப்படி நன்மை தரும் சில இராசிகளுக்கு நன்மைகள் சிறிது குறைவதும், தீமைதரும் சில இராசிகள் நன்மை அடைவதும் அல்லது தீமைகள் சிறிது குறைவதுமாக மாறும் விதத்தைக் காணலாம்.

     சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி நன்மை தரும் இடங்களின் மூர்த்தி நிர்ணயப்படி, நன்மைகள் சிறிது குறைவதைக் காணலாம்.

    மிதுனத்திற்கு  குரு தாமிர மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (2)

    கன்னிக்கு குரு  உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (11)

    விருச்சிகத்திற்கு குரு ரஜத மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (9)

    மகரத்திற்கு குரு உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (7)

    மீனத்திற்கு குரு தாமிர மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (5).


    சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி தீமை தரும் இடங்கள், மூர்த்தி நிர்ணயப்படிதீமைகள் சிறிது குறைவதையும் சில இராசிகள் நன்மையளிப்பதாக மாறுவதையும் காணலாம். குரு இம்முறை மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம் தனுசு, கும்பம் ஆகிய இராசிகளில் 4, 3, 1, 12, 10, 8, மற்றும் 6 ஆகிய இடங்களில் முறையே அசுபம் தருகிறார். ஆனால் மூர்த்தி நிர்ணயப்படி பலம்பெற்று மாறுவதைக் காணலாம்.

  மேஷத்திற்குகுரு ரஜத மூர்த்தியாகி அசுப பலன் பெரும்பாலும் குறையும். (4)

   ரிஷபத்திற்கு - குரு உலோக மூர்த்தியாக இருப்பதால் அசுப பலன் இரட்டிப்பாகும். (3)

   கடகத்திற்கு - குரு சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் அசுப பலன் அனைத்தும் குறைந்து நற்பலன் தரும். (1)

   சிம்மத்திற்கு - குரு ரஜத மூர்த்தியாக இருப்பதால் அசுப பலன் பெரும்பாலும் குறையும்.(12)

   துலாத்துக்கு - குரு தாமிர மூர்த்தியாக இருப்பதால் அசுப பலன் சிறிதளவு குறையும். (10)

   தனுசுவுக்கு - குரு சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் அசுப பலன் அனைத்தும் குறைந்து நற்பலன் தரும். (8)

   கும்பத்திற்குகுரு சுவர்ண மூர்த்தியாக இருப்பதால், அசுப பலன் அனைத்தும் குறைந்து நற்பலன் தரும். (6).


மூர்த்தி நிர்ணயப்படி பலன்களை ஆராயும்போது, கடகம், தனுசு மற்றும் கும்ப இராசிக்காரர்களுக்கு குரு சுவர்ண மூர்த்தியாவதால் நற்பலன்கள் ஏற்படுவதைக் காணலாம்.

 ஜோதிட கலாநிதி.
  எட்டயபுரம்.எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி ( அப்ளைடு அஸ்ட்ராலஜி)

Friday, December 7, 2012

அருளன்றி நாடுவது வேறேதம்மா ?







அருளன்றி நாடுவது வேறேதம்மா ?




அழகை ரசிக்க ஓராயிரங் கண் போதாதம்மா ! – உன்
அருளையன்றி நாடுவது வேறேதம்மா ? -- அம்மா
                                       (அழகை ரசிக்க)
காதலனாம் சொக்கனோடு ஆட்சி செய்தாயே ,
மதுரையை ஆட்சி செய்தாயே :
கருணையுளங் கொண்டு காட்சி தந்தாயே .
                                       (அழகை ரசிக்க)
தினந்தொழும் பக்தருள்ளம்  நீ நின்றாயே   - அவர்
மனமுருகும் நிலை கண்டு உளம் நெகிழ்தாயே – அம்மா
                                       (அழகை ரசிக்க)
கிளி கொஞ்சும் கரங் கொஞ்சம் வழி காட்டுமா ? – நல்ல
வழிகாட்டி, வாழ்வுக்கு ஒளி கூட்டுமா ?
களிப்பினில்  மனமெழிற் கவி பாடும் போது – அக்
கவி கேட்டுக் களி நடம் புரிவாயம்மா – தாயே
                                       (அழகை ரசிக்க) 
                               

Monday, December 3, 2012






மதுரையாள்கின்ற நாயகியே !




வாழ்கின்ற நாளெல்லாம் வணங்குதல் வேண்டும் – மதுரை
ஆள்கின்ற நாயகி நீ, வரந்தர வர வேண்டும்.
                                           (வாழ்கின்ற)
நீள் கின்ற வாழ்க்கையிலே நிம்மதி வர வேண்டும் ;
ஏழ் பிறப்பும் உள்ளத்தி லுன் நினைவொன்றே போதும்,
                                           (வாழ்கின்ற)
சேர்கின்ற இன்னலெலாம் சென்று மறைய வேண்டும் ,
நேர்கின்ற இன்பம் மட்டும் நிலைத்திருந்தாற் போதும்;
சோர்வு வரும் நேரமெலாம் சுந்தர முகங் காட்டு,
வேர்விட்டு, நெஞ்சிலெழும் இனிமைமிகு பாட்டு.
                                           (வாழ்கின்ற)