Tuesday, October 27, 2020

மழை தரும் நல்மேகம்

 

                         



மழை தரும் நல்மேகம்

        சூரியனைக் கடந்து செல்லும் செவ்வாய் தென்மேற்குப் பருவ மழையைத் தாமதப்படுத்தும். மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும் செவ்வாய், இந்து மகா சமுத்திரப் பகுதிகளில் மேகங்கள் கூடுவதைத் தடைசெய்யும். ஆருத்ரா நட்சத்திரம் ஒரு நீர் நட்சத்திரமாகும். அதன் மீது 17 மே முதல் 16 ஜூலை 2019 வரை வரும் செவ்வாயானது, மேகங்கள் கூடுவதிலும், அனுகூலமான காற்று திசையை அமைத்துக் கொடுப்பதிலும் தாமதத்தைத் தரலாம். தென் மேற்குப் பருவ மழையானது கேரளப் பகுதிகளில் ஜூன் மாதம் 1 ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்டாலும் 3 ஆம் தேதிக்கு தாமதமானது. ஜூன் 6 இல் புனர்பூச நட்சத்திரத்தின் மீது வருங்காலத்தில் கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் அதிக மழை பெய்தது. ஜூலை முதல் 15 தினங்கள் வரை சூரியனுக்கு முன்னதாக செவ்வாய் செல்லும். மற்றும் இரு உலர்ந்த கிரகங்களான சனியும் கேதுவும், செவ்வாய்க்கு எதிர் இராசியான தனுசுவில் இருக்கும். இதன் காரணமாக இக் காலங்களில் சராசரி மழைக்கும் குறைவாகவே மழை பெய்யும். அதிலும், மிதுன இராசி மேற்கு வங்க மாநிலம் மற்றும் பங்களா தேஷ் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் இருக்கும்.

         எனவே, ஜூலையில் அதிக வெப்பமும், பஞ்சம் போன்ற ஒரு நிலையும் ஏற்படலாம். °மயூர சித்திரம்° மற்றும் °பவிஷ்ய பாஸ்கர்° போன்ற வெட்பதட்ப நிலைக்கான வடமொழி நூல்களில் சூரியனுக்கு முன் செல்லும் செவ்வாயின் கோசார நிலையால் குறைவான மழையும், தானியங்களின் விலை உயர்வும் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை 16 இல் சூரியனின் கடக பிரவேசத்துக்குப் பிறகே இந்த நிலை மாறி சூரியனும், செவ்வாயும் நீர் இராசியான கடகத்தில் இருக்கும் காலமான ஜூலை 16 முதல் ஆகஸ்டு 8 வரையிலான காலத்தில் பெரும் மழையும், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்படும்.

         சூரியனின் திருவாதிரைப் பிரவேசம் - இந்த நிலையே தென் மேற்கு பருவமழையை நிர்ணயிக்கிறது.

 

 

சுக்

சூரி, ராகு,

செவ்.

சந்

சூரியன்- திருவாதிரை பிரவேசம்

22 ஜூன் 2019 -17-19 மாலை

புதன்

 

 

கேது,சனி

லக்//

குரு

 

 

 

 அ). சூரியனின் திருவாதிரைப் பிரவேசத்தின் போது விருச்சிகம் இலக்னமாக எழுந்து, அதில் குரு அமர்ந்துள்ளார். நீர் கிரகங்களான குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவை கேந்திரங்களில் அமர்ந்திருப்பது பருவ மழைக் காலம் தாமதம் ஆகியிருந்தாலும் சராசரியாக நாட்டில் பெய்யும் மழைக்கு 90 சதவிகிதம் வரை மழையைத்தரும்.

ஆ).  இலக்னாதிபதி செவ்வாய், சந்திரன் மற்றும் இராசியதிபதி சனி ஆகியோர் காய்ந்த இராசிகளில் உள்ளனர். செவ்வாய், சூரியன், இராகுவுடன் 8 ஆம் வீடான மிதுனத்தில் உள்ளன. இராசி அதிபதி சனி மற்றுமொரு உலர்ந்த கிரகமான கேதுவுடன் நெருப்பு இராசியான தனுசுவில் அமர்ந்துள்ளது. இது அதிக வெப்பத்தையும், உலர்ந்த தன்மையையும் ஜூலை 22 ஆம் தேதி வரை இருக்கும் என்பதை குறிகாட்டுகிறது.

இ).    °பவிஷ்ய பல பாஸ்கரா° - வில் குறிப்பிட்டுள்ளபடி சுக்கிரனுக்கும் புதனுக்கும் நடுவே சூரியன் சாண்ட்விச் ஆகிய நிலை காலதாமத மழைக்குக் காரணமானது.

ஈ)    பொதுவாக, தென் மேற்குப் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10 க்குள் மும்பை மற்றும் கொல்கட்டா பகுதிகளில் வந்து விடும் ஆனால் இந்த ஆண்டு தாமதமாகி, அப்பகுதி மக்கள் அசாத்திய வெப்பத்தால் தவிப்பர்.  ஜூன் 22 க்குப் பிறகு செவ்வாயின் கடகப் பிரவேசத்துக்குப் பிறகு (நீர் ராசி) தேசத்தின் மத்திய, தெற்குப் பகுதிகளிலும், வடகிழக்குப் பகுதிகள், கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

உ).    ஜூலை 3 க்குப் பிறகு செவ்வாய், புதனுடன் கடகத்தில் நகரும்போது டில்லி, ஹரியானா மற்றும் உத்திரப் பிரதேச மேற்குப் பகுதிகளில் மழையை எதிர் பார்க்கலாம். புதன் கடகத்தில் வக்கிரம் அடையும்போது நாட்டின் பல பகுதிகளில் அதிக மழையைத் தரும்.

 

 

No comments:

Post a Comment