உ
வியாபார/தொழில் செய்யும் ஜாதகத்தை அறிவது எங்ஙனம்.?
ஒருவர் வியாபாரத்தில்/தொழிலில்
ஈடுபடுவது செல்வம் சேர்க்கவே ஆகும். அன்றாட தனவரவைக் குறிப்பது ஆகும். இதனுடன்
ஒப்பிடும் போது இலாபத்தைக் குறிக்கும் 11 ஆம் பாவம் வியாபாரத்திற்கு மிகவும்
தொடர்புடையதாகும். எனவே, இலாபவத்தில் பலம் மிக்க கிரகம் இருப்பதும், அந்த வீட்டின்
ஆட்சி கிரகம் ஜாதகத்தில் நன்முறையில் அமைவது அவசியம் ஆகும். 7 ஆம் வீடு கூட்டாளிகளையும், வாடிக்கையாளர்களையும்
குறிகாட்டுகிறது. எனவே, 7 ஆம் பாவத்துடனான 2 மற்றும் 11 ஆம் பாவத்துடனான தொடர்பு
வியாபாரம் / தொழில் மூலமான வருமானத்தையும், அல்லது வாடிக்கையாளர்கள் மூமான
வருமானத்தையும், இலாபத்தையும் குறிகாட்டுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் வியாபார
பாவங்கள் பலமிழந்து காணப்பட்டாலும், சரியான பலம்முள்ள ஜாதகருடன் கூட்டு வைத்து
தொழில் செய்தால் சிறப்பாக அமையும். பலம் மிக்க 7 ஆம் வீடு வெற்றிகரமான வியாபாரத்தை
கூட்டுத் தொழில் மூலமாகத் தந்துவிடும். 5 ஆம் வீடு, போட்டி பந்தயங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள்
மற்றும் முதலீடுகளையும் குறிகாட்டுகிறது. புதிய திட்டங்களில் உரிய இலாபத்தை
அடைவதற்கான சக்தியை பலம்மிக்க 5 ஆம் வீடு சாதகம் ஆக்கும். பாக்கிய வீடான 9 ஆம்
பாவம் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. 9 மற்றும் 10 ஆம் பாவங்களின் அல்லது
பாவாதிபதிகளின் நல்ல தொடர்பு வெற்றியை நிச்சியிக்கிறது. ஜாதகருக்கு அடிக்கடி ஏற்படும் 12 ஆம் பாவத்
தொடர்பு வர்த்தக வெற்றிகளைத் தீர்மானிக்கிறது. முதலில் விரய பாவமாகக் 12 ஆம் பாவம்
காட்சி அளித்து இழப்புகளுக்கும், எதிர்புக்கும் உரியதாகத் தோற்றமளித்தாலும், 12
ஆம் வீடு அமானுஷ்யமானதாகவும், தனித்துவம் மிக்க மனிதர்களையும், புளக்கம் அதிகம்
இல்லாத மறைவிடமாகவும் குறிகாட்டப்படுகிறது. ஜாதகத்தில் சுபர் தாக்கம் உள்ள 12 ஆம்
இடம், தனிப்பட்ட முறையில் நமக்குத் தெரியாதவர்கள் அல்லது மறைவிடத்தில் இருக்கும்
நமக்குத் தெரியாதவர்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும். இது இன்டர் நெட் மூலமாக
செய்யப்படும் தொழில்களுக்குப் பொருந்தும்.
இலக்னாதிபதி பலம் இழந்தோ அல்லது
மோசமான இடத்தில் இருந்தாலோ வெற்றி என்பது எட்டாக் கனி ஆகிறது. கஷ்டங்களையும் பிரச்சனைகளையும்
குறிப்பது 6 ஆம் இடம் ஆகும். அது தொழில் பாவமான 10 ஆம் இடத்தோடு அல்லது அதன்
அதிபதியோடு எவ்வகையிலேனும் தொடர்பு கொண்டிருந்தால் மிகவும் கஷ்டமாகும். 6 ஆம்
அதிபதி / அல்லது 6 ஆம் வீடு சிறப்பான
நிலையில் இருந்தால, 6 ஆம் வீட்டின்
ஆரோக்கியம் மற்றும் சேவைக்கான காரகங்கள் அனுகூலமான பலன்களைத் தரும்.
அதைப்போலவே சேவைகளும் விருத்தியாகும். 8 ஆம் வீடு நிரந்தரமான கஷ்டங்களைக்
குறிகாட்டுகிறது. ஆனால், இது ஒரு சாதகமான
இடம் ஏனெனில், மற்றவர்கள் பணம் மற்றும் பங்குச்சந்தைப் பணம் ஆகும். எனவே 8
ஆம் இடம், அதன் அதிபதி சிறப்பான நிலையில் பலமாக இருந்தால் அது வியாபாரம் தொடங்குவதற்கு,
பொருளாதார நிலையில் உதவும் வகையில் அமையும் அல்லது நிதி நிறுவனம் ஆரம்பிப்பதற்கான
வாய்ப்புகளை அமைத்துத்தரும்.
வியாபாரம் அல்லது
தொழில்நிலை ஜாதகத்தில் குரு மற்றும் சனியின் நிலை –
ஜோதிடத்தில் குரு, கர்மகாரகனான சனியுடன் பகிர்ந்து
கொள்கிறார். குரு, விற்பனை உதவியாளரையும் சனி கணக்காளரையும் (அக்கவுண்டன்ட்)
குறிகாட்டுகின்றனர். குரு எப்போதும் ஆடம்பரக் காரில் பயணிப்பவராகவும், 5 நட்சத்திர
விடுதியில் தங்குபவராகவும் இருக்கிறார்.
வியாபாரத்தை/தொழிலைப் நவீனமாகப் பெறுக்குகிறார் அல்லது வெளிநாட்டுச் சந்தை,
கம்பெனிக் கணக்குகளையும், வாடிக்கையாளர்களையும் அதிகப் படுத்துகிறார். எனவே, ஜாதகத்தில் குருவும் சனியும் விலகியே
இருக்க வேண்டும். 1, 4, 7, 10 கேந்திர
வீடுகள் ஆகும். இவை வியாபாரத்துக்கான செயல்பாடுகளை ஊக்குவித்து,
முன்னேற்றத்துக்கான வழிகளைக் குறிகாட்டுகின்றன. சனி 3, 6, 9 அல்லது 12 ஆம்
இடங்களில் அமரும் போது வியாபாரத்தைப் பின்னின்று இயக்குகிறது. உண்மையில் சனி 12
ஆம் வீட்டில் இருந்து சந்தோஷமான நிலையை அடைகிறது எனலாம். அது அதற்கு உதயத்தில்
ஒளிந்து இருந்து இருளை உடைத்து வரும் ஒளி போல் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நிலையை கிரேஸ் மோரீஸ் விவரமாக
விவரிக்கிறார். சனி கேந்திரங்களில் இருக்கக் கூடாது. சனி கேந்திரத்தில் இருந்து
வீடு வாங்கினால் அதை விற்க முடியாத நிலை
உருவாகும். எனவே, வெற்றிகரமான வியாபாரத்திற்கு
சந்திரனோ சனியோ கேந்திரத்தில் அமைவது சிறப்பல்ல. ஆனால் சந்திரன் சுப பார்வை
பெற்றால் நல்லது. என்கிறார்.
வெகு சில வர்த்தக நிறுவனங்களே, குரு – சனி
இணைவு காலங்களில் தொழிலை ஆரம்பிக்கின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஜனன
ஜாதகத்தில் இந்த குரு-சனி இணைவு போரட்டங்களில் மீளும் விதத்தில்
அதிர்ஷ்டகரமானது என்றாலும், தொழிலில் மெதுவாகவே முன்னேற்றம் இருக்கும. எனவே, குரு –
சனி இருவரும் வெவ்வேறு இராசிகளில் இருப்பதே நல்லது. ஆப்பிள் கம்யூட்டர் நிறுவனம்
இதற்கு சரியான உதாரணமாகும், குரு – சனி இருவரும் கன்னி இராசியில் இணைந்து உள்ளனர்.
இதன் காரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் கம்பெனியை எடுத்து நடத்த
வேண்டியதாயிற்று. அதிகாரப் பொறுப்பை
எடுத்துக் கொண்டு, வேகமாக முடிவெடுத்து, காலத்தோடு வேகமாக ஓடக்கூடிய திறமை மிக்கவராக
இருந்தார். திட்டமிடலில் முன்னேற்ற நிகழ்வுகளில், விளம்பரம் மற்றும் விற்பனை
விவகாரங்களில் எந்தவித நிர்வாகத் தலையீடுகளுக்கும் இடம் தராமலும், ஒரு செயலை
இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகள் இன்றியும் கம்பெனியைத் திறமையாக,
இலாபகரமாக நடத்தினார்.
பல்வேறு வீடுகளில்
சனியின் தாக்கம்.
ஜாதகத்தில் தொழில்
நிலையைப் பொருத்தவரை, சனியின் தாக்கத்தை அறிவோம். 3ஆம் வீட்டில் சனி இருக்க கார்
தொழில் செய்பவர்களுக்கு இலாபம் இருக்காது. 6 ஆம் வீட்டில் சனி இருக்க கம்பெனியில்
வேலை பார்க்கும் உழைப்பாளிகளுக்கு வேலை பார்ப்பதில் கஷ்டங்களும், கடின உழைப்பும்
ஏற்படும். 9 ஆம் வீட்டில் சனி இருக்க
வெளிநாட்டுக்கு கம்பெனிகளுடன் அதிக ஆதாயம் தரும். 12 ஆம் வீட்டில் சனி இருக்க
அரசாங்கத் துறைகளை சமாளிப்பதே ஒரு சவாலாக இருக்கும். தொழில் சிறக்க கிரகங்களுக்கு
இடையே ஆன ஸகோயர், ட்ரைன் மற்றும் செக்ஸ்டைல் பார்வைகள் இருப்பது நல்லது. ஒரே
வீட்டில் 4 கிரகங்கள் இருப்பதும் சிறப்பு. இதனால் அந்த வீட்டின் செயல்பாடுகள்,
நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான மேலதிக சக்தியை அளிக்கிறது. இந்த நிலையில் சூரியன்
இருப்பது மிகவும் உபயோககரமானது ஆகும். சந்திரன் இருப்பது மக்கள் தொடர்புடைய
தொழில்/வியாபாரத்திற்குச் சிறந்தது. சந்திரன் – குருவுடன் ட்ரைன் மற்றும்
செக்ஸ்டைல் பார்வையில் இருப்பது தொழில்/வியாபாரம் செய்பவர்களை தொழிலில் மேலும்
அதிக உயரத்திற்குக் கொண்டு செல்லும். கண்டுபிடிப்பாளர்களுக்கு சில பிரச்சனைகளை
சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அல்லது தொழிலில் ஆர்வம் குறையலாம். சில
நேரங்களில் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சனி-குரு கூடி
ஒத்துழைப்பு நல்காது.
கிரகங்கள் கீழ்கண்ட பாவங்களில் மிக
மகிழ்ச்சிகரமான மனநிலையோடு இருக்கின்றன.
12 இல் சனியும், 11 இல் குருவும், 9 இல் சூரியனும்,
6 இல் செவ்வாயும். 5 இல் சுக்கிரனும், 3 இல் சந்திரனும் மற்றும் புதன்
இலக்னத்திலுமாக சந்தோஷமான நிலையில் லயித்துவிடுகின்றன.
சனி-சூரியன், சனி-சுக்கிரன், சனி- குரு
தொடர்பு பங்குச்சந்தைக்கு சிறந்ததாகும். கோசார குருவின் தொடர்பு பிற கிரகங்களுக்கு
கிடைக்கும் போது இது மேலும் சிறக்கிறது.
இவற்றின் இணைவுகள், ட்ரைன் மற்றும் செக்ஸ்டைல் பார்வைகள் நேர்மறையான
நிலைகள் ஆகும். இவை அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்குகின்றன. உதாரணமாக குரு – சனியின் இணைவு வங்கித் தொழிலில் மற்ற வங்கி நிறுவனங்களின்
ஒன்றிணைப்பு, சேர்க்கைகள் மூலமாக அவற்றை பிரம்மாண்டமான நிலைக்குக் கொண்டு
செல்கின்றன.
நேர்மறையான நிலைகள் தரும் தாக்கங்கள்- தனம், புகழ், திடநம்பிக்கை,
நீதியை நிலைநாட்டும் தன்மை, சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, வெகுஜன தொடர்பில்
வெற்றி, எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் தன்மை, நேர்மை, மற்றவர்களுக்கு
உதவும் குணம், பிரபலமாதல் ஆகியவை ஆகும். அதுவே, ஸகொயர் மற்றும் அப்பொஸிஷன்
பார்வைகள் எதிர்மறையான பலன்களைத் தருகின்றன.
பொதுவாக
நடுத்தர வயது உள்ளவர்களுக்கே குருவின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது.
விளையாட்டு வீரர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், வங்கி
அதிகாரிகள், மதத் தலைவர்கள் போன்றவர்களுக்கு குருவின் தாக்கம் அதிகமாக
ஏற்படுகிறது.
எதிர்மறையான
நிலைகள் தரும் தாக்கங்கள்- விரிவாக்கம் செய்யும் போதும், வரவுக்கு மிஞ்சிய
செலவுகளையும், துரதிர்ஷ்டத்தையும், சரியான முடிவெடுக்க முடியாத நிலையையும்,
பொருளாதார, வியாபார நஷ்டங்களையும், பிறர் தவறாக உண்ணும் நிலையையும்,
பொறுமையின்மையையும், பங்குச்சந்தை இழப்புகளும், சூதாட்ட ஈடுபாடும், வழக்கு
விவகாரங்களில் தோல்வியும், மனம் அழுத்தம் காரணமாக ஆரோக்கியக் குறைவும், அதிகமான
இரக்க குணத்தால் இழப்புகளையும், புகழ் இன்மையும் குறிகாட்டுகின்றன
Super
ReplyDelete