உ
2017 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்.
ஜோதிட ப்ரவீணா. எஸ், விஜயநரசிம்மன்.
செவ்
சுக்,கேது
|
01-01-2017
மார்கழி-17.ஞாயிறு
மறுநாள் காலை
மணி 4-19 கும்ப.சந்.
| ||
சந்
|
இராகு
| ||
சூரி
|
புத,சனி
|
லக்//
குரு
|
உபநிஷத்தில் ஒரு வசனம் உண்டு, அதாவது நேரம் ஆயுளைச் சாப்பிடுகிறது. ஏனென்றால் மனித வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நேரத்தால் குறைக்கப்படுகிறது. நேரத்திற்குக் காலம் என்ற பெயரும் உண்டு. சில நூல்களில் இதைக் காலன் என்றும் அழைப்பர். காலன் என்றால் எமன் என்று பொருள். ஆயுளைச் சாப்பிடுவது எமன் தானே ? இவ்வாறாகக் காலம் உழன்று கொண்டிருப்பதை நம்மால் உணரமுடிவதில்லை. அதுபோல் பூமியும் தன்னைத்தானே சுற்றி வந்து வலம் வருவதையும் நம்மால் காணமுடிவதில்லை. இருப்பினும் கிரகங்களும் பூமியும் தத்தமது பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்க மறப்பதில்லை.ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பதுதானே உண்மை. 2016 முடிந்து 2017 இல் அடியெடுத்து வைக்கிறோம்.
கோசார பலன்களை ஒரு வழிகாட்டியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டது போல்“கேட்பதற்கு இனிமையாக சத்தியத்தைச் சொல்லு. சத்தியம் அல்லாததை ஒருபோதும் சொல்லாதே, அந்த சத்தியமும் கேட்பதற்கு நாராசமாக இருக்கக் கூடாது. மேலும் பயம் விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடாது.” அதாவது ஓரு ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடன், அவனுக்கு அனேக விஷயங்கள் தெரிந்திருந்தாலும், எதைச் சொன்னால் பலன் கேட்பவனுக்கு அதைத் தாங்கும் சக்தி உண்டோ அதை மட்டும் தான் சொல்ல வேண்டும். உண்மையான ஜோதிடன் அதைமட்டுமே சொல்வான். இதைக் கேட்டுவிட்டு ஜோதிடனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணிவிடக் கூடாது. அதே நீதியின் அடிப்படையில்தான் இங்கு பலன் உரைக்கப் பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு மலர்வது 31 – 12 - 2016 சனிக் கிழமை இரவு 12 – 00 மணி, 11 -21 முதல் 01-21 வரை கன்னி இலக்கினம்.
2017 ஆம் ஆண்டு மலரும் வேளை இலக்கினம் எழுவது கன்னி இராசியாகும். கன்னி இலக்னமாகி, இலக்னாதிபதி புதன் முதல் வாரத்திற்கு பிறகு 4 ஆம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெற்று அனுகூல நிலையில் உள்ளதால் அரசு மிக்க பலம் பெறும், அரசாங்க நிர்வாகம் மிக்க திறமையுடன் நடக்கும். விலைவாசி கட்டுக்குள் இருக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும்.நாடு வெற்றி நடைபோடும். பிரம்மாண்டமான கட்டுமானங்கள், பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேற்றப்படும். நமது பாரதத்தைப் பார்த்து உலக நாடுகள் பொறாமைப்படும் அளவுக்கு அதன் வளர்ச்சி இருக்கும். உலகளவில் விண்வெளி விஞ்ஞானத்தில் சாதனைகள் புரிந்து புகழ் அடையும். கர்ம பாவாதிபதியும் புதனாவதால் உலக அரங்கில் நம் தேசத்தின் பெருமை, மதிப்பு,கௌரவம் அனைத்தும் உயரும். கல்வித்தரமும் உயரும். இலாபாதிபதியின் அனுகூல நிலையால் அயல்நாட்டு வர்த்தகம்,உலகளாவிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் அனைத்தும் சிறப்பாக, வெற்றிகரமாக முடியும். பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். மற்ற நாடுகளுக்கு நமது அரசாங்கம் உதவிக்கரம் நீட்டும். மக்களின் கடின உழைப்பு காரணமாக நாட்டின் நிலை உயரும். 6 இல் உள்ள சுக்கிரன் சில துன்பம் தந்தாலும், செவ்வாயால் நாட்டின் உள்கட்டமைப்பு, சாலை மேம்பாடு ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மக்கள் தொகை உயரும் வாய்ப்பு உண்டு. விளைச்சல் அதிகமாகி தானிய உற்பத்தி அதிகரிக்கும். விளையாட்டுத் துறையில் நம் சாட்டவர்கள் சாதனைகள் புரிவர். வெற்றிகளைக் குவிப்பர். நாட்டின் பொருளாதார நிலை 7.7 விகிதம் உயரும். நாட்டு மக்களின் வாழ்க்கையில் அனைத்து வசதி வாய்ப்புகளும் பெருகும்.
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, ல, லெ, லு, லே, லோ,அ )
மேஷ இராசி வாசகர்களே !
இந்த ஆண்டு ஆரம்பம் முதலே நல்ல பலன்களாக நடக்கும், பண வருமானம் அதிகரிக்கும். தொழில் விருத்தியடையும்.படிப்பிலும் பணியிலும் முயற்சி செய்வோருக்கு நன்மைகள் உண்டாகும். இதுவரை தீர்க்க முடியாத பிரச்சனகள் அனைத்தும்தீரும். அடிக்கடி ஏற்படும் பயணங்களாலும், வீடு அல்லது இடமாற்றங்களாலும் வீட்டில் குழப்பங்கள் நிலவலாம்.பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பது போல் தோன்றினாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் செயல்பாடுகளில் அக்கறையாகவும், அனுகூலமாகவும் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபார விஷயங்களில் கலப்புபலன்களாக நடக்கும், கூட்டாளிகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் தடைகளும், பிரிவும் ஏற்பட வாயப்பாகும். வருமானத்தை பூமி, வீடு, வாகனம் ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. ஆண்டு முடிவில் அனைத்து எதிர்பார்ப்புகளும் ஈடேறும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். வழக்குகளில் இழுபறி நிலை இருக்கும். பிறருக்கு ஜாமீன் கொடுப்பதோ,கூட்டுக் கையெழுத்திடுவதோ கூடாது. அரசு மற்றும் தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பற்பல நன்மைகள் ஏற்படும்.ஒன்பதாம் மாதம் குருவின் துலா பிரவேசம் முன்னேற்றம் தரும். அரசு வெகுமானம் கிடைக்கும். புண்ணியத் தல யாத்திரைகள் மகிழ்ச்சி அளிக்கும். சனீஸ்வரனை வணங்கச் சங்கடங்கள் தீரும். இன்னல்கள் குறையும். மொத்தத்தில் மேஷ இராசிஅன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும். அதிர்ஷ்ட எண் – 5. நிறம் – இளம் சிவப்பு, சகல கஷ்டங்களும் தீர தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் சொல்வது நல்லது,
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்க ள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – இ, உ, எ, ஒ, வ, வி, வு, வே, வோ )
ரிஷப இராசி வாசகர்களே !
இந்த ஆண்டு தங்கள் இராசிநாதன் சுக்கிரனால் உயர்ரக ஆடை ஆபரணங்கள், பொழுதுபோக்கு உபகரணங்கள் ஆகியவைகிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குப் பெரிய இடத்துப் பெண்ணுடன் திருமணம் நடக்கலாம். காதல் விவகாரங்கள்ஆரம்பமாகி இனிதே தொடரும். பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரம்,தொழில் ஆகியவை விருத்தியடைய முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய வேலைக்காக முயற்சி செய்வோருக்கு சாதகமாக அமையும். சிலருக்கு அலைச்சல், டென்ஷன், பணியில் நெருக்கடிகள் ஏற்படலாம். வெளிநாடு செல்ல விரும்புவோருக்குதடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடக்கும். அரசுப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்குக் காரிய தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில்பிரச்சனைகள் எழலாம். பயணம் செய்யும்பொது எச்சரிக்கை தேவை. புத்திர பாக்யம் ஏற்படும். குடும்ப வாழ்வு ஒரே சீராகஇருக்கும். நல்ல முன்னேற்றங்களும் இருக்கும். தொழில் புரிவோர் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு சிறு கஷ்டங்கள்இருக்கலாம். கடன்களை மீட்கவும், புதிய சொத்துக்கள் வாங்கவும் அனுகூலமான ஆண்டாகும். சொல்லும் பேச்சைக் கேட்காதகுழந்தைகளைப் பற்றிய கவலை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். பயிர் விளைச்சல்அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் – 5, நிறம் – பிஸ்கட் கலர். மொத்தத்தில் ரிஷப இராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு 60 சதவிகிதநற்பலன்கள் ஏற்படும்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – கா, கி, கு, க, ஞ, ச, கே, கோ, ஹ )
மிதுன இராசி வாசகர்களே !
இந்த ஆண்டு அனேக நன்மைகள் ஏற்படும். செல்வ நிலை உயரும். அழகிய மனைவி வாய்ப்பாள். அழகும் பொலிவும்கூடும். வாக்குவன்மை ஓங்கும். தன தான்ய விருத்தியும், மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். நற்செயல்களில்ஈடுபடுவீர்கள். மனமகிழ்ச்சியும், அனைத்து வசதிகளும் வந்து சேரும், சிந்தனா சக்தி மற்றும் நிர்ணயத் திறன்கள் குறையும். எல்லா வசதிகளும் இன்பமும் உண்டாகும். உயர்ந்த செல்வநிலை அடைவர். உயர்ரக ஆடை ஆபரணங்கள், பொழுதுபோக்குஉபகரணங்கள் ஆகியவை கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமையலாம். சிலருக்குக் குடும்பத்தில் ஒற்றுமையின்மை, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். காரிய தடைகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்குஉத்தியோகத்தில் பிரச்சனைகள் இன்றி காலம் கழியும். பயணம் செய்யும்பொது எச்சரிக்கை தேவை. வியாபாரம் , தொழிலில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். எல்லா வழிகளிலும் இலாபமும் ஏற்படும். மிக முக்கியமாக ஈடுபடும்செயல்பாடுகளில் வெற்றிகரமான நல்ல முடிவுகள் மற்றும் இலாபங்கள் ஏற்படும். நோயினின்று விடுதலை மற்றும்அதிகாரத்திலுள்ள நல்ல மனிதர்களின் தொடர்பும் ஏற்படும். திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவையும் ஏற்படும். எதிலும்வெற்றியையும், எல்லாவற்றிலும் முன்னேற்றத்தையும் தரும் சனி, தசா, புத்தி சாதகமானால், இராஜயோகத்தையும் அளிக்கிறான்.நீதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான காலம். உத்தியோக உயர்வு மற்றும் வருமான உயர்வு உண்டு. மூத்த சகோதரருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். அதிர்ஷ்ட எண் – 7, நிறம் – வெண்மை. கஷ்டங்கள் தீர ஶ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி வரவும். மொத்தத்தில் மிதுனராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்பட, உங்கள் காட்டில் மழைதான்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலனறிய – ஹி, ஹூ, ஹே, ஹோ, ட, டி, டு, டே, டோ )
கடக இராசி வாசகர்களே !
இந்த ஆண்டு தங்கள் இராசிநாதன் சந்திரன் தங்களுக்கு சுக சௌக்கியத்தையும், நல் ஆரோக்கியத்தையும் அளிப்பார்.தானிய விருத்தி, போதுமான பணவரவு ஆகிய நல்ல பலன்களை அளிப்பார். சகோதரர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். குரு மாற்றங்களைத் தந்தாலும், செப்டம்பருக்குப் பிறகு நல்ல பலன்களைத் தருவார். மனோதைரியம் ஓங்கும்.ஆண்மைச் சக்தி அதிகரிக்கும். புதுப்புது பதவிகளும் அதனால் வருவாயும் கூடும். செல்வச் செழிப்பும், முன்னேற்றங்களும்,சுகானுபவங்களும் மற்றும் கௌரவமும் கூடும். சகோதரர்கள், அருகாமையில் உள்ளவர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும்,பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அதன் காரணமாக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். நற்செயல்களில்ஈடுபடுவீர்கள். கடன்களை மீட்கவும், புதிய சொத்துக்கள் வாங்கவும் அனுகூலமான ஆண்டாகும். மனமகிழ்ச்சியும், அனைத்துவசதிகளும் வந்து சேரும், சிந்தனா சக்தி மற்றும் நிர்ணயத் திறன்கள் குறையும். மிக முக்கியமாக ஈடுபடும் செயல்பாடுகளில்வெற்றிகரமான நல்ல முடிவுகள் மற்றும் இலாபங்கள் ஏற்படும். தன விருத்தியும், தொலைதூரப் பயணங்களால் நன்மையும் ஏற்படும். சிலருக்கு மனநிம்மதி கெடலாம். வெற்றிகரமான தொழில் முன்னேற்றமும், இனிய பயணங்களும் ஏற்படும். பயணத்தின் போது விபத்து பயமும் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. ஞான மார்க்கத்தில் ஆர்வமும், ஆன்மிக சிந்தனைகளும் ஏற்படும்.அதிர்ஷ்ட எண் – 4, நிறம் – இளம் மஞ்சள். தினமும் விநாயகர் அகவல் சொல்லிவர விக்னங்கள் தீரும். பொதுவாக கடக இராசிஅன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – ம, மி, மு, மெ, மோ, டி, டு, டே, டோ )
சிம்மராசி வாசகர்களே !
இந்த ஆண்டு குடும்பத்தில் ஓரளவுக்கு சந்தோஷம் நிலவும். உங்கள் மனோதைரியத்தாலும், சகிப்புத் தன்மையாலும் அனைத்துச் சங்கடங்களையும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை வகை சொந்தங்களுக்கு இன்னல்கள் ஏற்படும். வழக்கு மற்றும் சட்டரீதியான விஷயங்களில் உங்களுக்கு அதிர்ஷடம் காத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மன அழுத்தம், உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பணிபுரியும் இடத்தில் சுற்றுச் சூழலில் உங்களுக்குச் சாதகமான, அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய சொத்துக்கள், வீடு ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படலாம்.புத்திர பாக்யம் ஏற்படும். வாக்குவன்மை ஓங்கும். தன தான்ய விருத்தியும், மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும்.போதுமான பணவரவு ஏற்படுவதால் செல்வ நிலை உயரும். தொழில் அதிபர்களும், தொழிலாளிகளும் அனுசரித்துச் செல்ல வேண்டிய காலமிது. பணியில் இருப்பவர்கள் எவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் நடந்து கொள்ளவேண்டும்.வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும். புதிய கடன்களை வாங்காதிருப்பது நல்லது. வெளிநாட்டு வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய நல்ல காலம் இது. இனிய விழாக்களும், பதவிகளும், எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமும், இளைய சகோதரர்களால் மற்றும் சிறுபயணங்களால் ஆதாயமும் கிடைக்கும். எழுத்து மற்றும் பதிப்பித்தல் துறையில் முன்னேற்றமும் ஏற்படும். அதிர்ஷ்ட எண் – 2. நிறம் – மஞ்சள். தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும், திருப்பதி, குருவாயூர் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வரக் கஷ்டங்கள் தீரும். மொத்தத்தில் சிம்மராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – டோ, ப, பி, பூ, ஷ, ந, ட, பே, போ )
கன்னி இராசி வாசகர்களே !
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளில் நீங்கள் தான் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள். உங்கள் வாழ்க்கை திரைப்படத்தில் வருவதுபோல் திடீர் திடீரென மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இந்த ஆண்டு, பணவரவு வெகுவாகப் பெருகும், படிப்பிலும். உத்தியோத்திலும் பற்பல விசேஷ நன்மைகள் உண்டாகும். சிலர் இரவோடு இரவாக சினிமாவில் காட்டுவது போல் ஒரு பாட்டிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். வீடு வாங்கவும், கட்டவும், வாகனங்கள் வாங்கவும் சரியான சமயம் ஆகும். முதல் பாதியில் குடும்ப சந்தோஷம் நிறைவாக இருக்கும். பிற்பகுதியில் தடைகளும், இடைஞ்சல்களும் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சில தடைகள் ஏற்பட்டாலும், வியாபாரம் இலாபகரமானதாக இருக்கும். பதவி உயர்வுகளை, அதற்குரிய சம்பள உயர்வுகளோடு ஏதிர்பார்க்கலாம். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். மனோதைரியம் ஓங்கும். அரசுப் பணியாளர்களுக்குப் புதுப்புது பதவிகளும் அதனால் வருவாயும் கூடும். வியாபாரிகளுக்கு செல்வச் செழிப்பும்,முன்னேற்றங்களும், சுகானுபவங்களும் மற்றும் கௌரவமும் கூடும். கணவன் மனைவியரது உறவு சுமுகமாக இருக்கும்.வழக்குகளில் அமோக வெற்றி ஏற்படும். ஒரே ஒரு கொள்கையைக் கடைப் பிடித்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தங்களுக்கு உதவிகரமான நண்பர்கள் ஏற்படுவர். நல்ல செயல்பாடுகளைச் செய்யும் நிலை உருவாகும், எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும். சிலருக்கு முறைமீறிய காதல் ஏற்பட்டு கட்டாயத் திருமணத்தில் முடியலாம். வேண்டாத விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. தங்களுக்கு அதிர்ஷ்ட எண் -2, நிறம் –ஆரஞ்சு. கஷ்டங்கள் தீர சிவ கவசமும், சிவ ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் படிக்கவும். மொத்தத்தில் கன்னி இராசி அன்பர்களுக்கு65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – ர, ரி, ரு, ரே, ரோ, த, தி, து, தே )
துலா இராசி வாசகர்களே !
இந்த ஆண்டு தங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். போதிய அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். பணப் பற்றாக்குறை அவ்வப்போது தலைதூக்கும். புத்திரர் பற்றிய கவலை ஏற்படும். ஆயினும் அவர்கள் படிப்பிலும், தொழிலிலும் முன்னேற்றம் அடைவார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு மேன்மை அடையும். மனவேற்றுமை மற்றும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தவர் ஒன்று சேரும் வாய்ப்பு உண்டு. தெய்வ வழிபாடு மற்றும் புனித யாத்திரைகள் செல்வதற்கும் ஏற்ற காலம். திடீர் பயணங்களால் பெரும்பகுதி வெளியூரில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். பொருளாதார நிலை சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். அரசுப் பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைக்கும். வீட்டில் போதிய அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். நினத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். விரும்பிய பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும்.பணவரவு வெகுவாகக் கூடும். வழக்கு மற்றும் சட்டரீதியான விஷயங்களில் உங்களுக்கு சாதகமாகமான பலன்களே ஏற்படும்.தொழிலில் நல்ல முன்னேற்றகரமான காலமாக அமையும். சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது அதிர்ஷ்டகாலம். அரசுப் பணியாளர்கள் மற்றவர் வலையில் சிக்க நேரலாம் எச்சரிக்கை தேவை. வாக்கு வன்மை கூடும். ஞானமுயற்சியும், நற்சிந்தனையும் உயர்வைத்தரும். உங்கள் திறமைகளைக் காட்டி சுயமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையைக் கூட்ட வெற்றி கிட்டும். ஒருவர் நன்மை தந்தால் மற்றவர் தீமை செய்வதுதானே கிரகங்களின் இயல்பு, எனவே, கவலை வேண்டாம்.உங்கள் அதிர்ஷ்ட எண் – 3 மற்றும் நிறம் கிளிப் பச்சை. துர்க்கையை வணங்கத் துன்பங்கள் விலகும். மொத்தத்தில் துலாராசிஅன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – தோ, ந, நி, நு, நே, நோ, ய, இ, யு )
விருச்சிக இராசி வாசகர்களே !
இந்த ஆண்டு உங்கள் இராசிநாதனால் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகிறது. திருமணம் நடக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். ஆயுள் விருத்தி ஏற்படும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். வேதம் கல்வி இவற்றில் தேர்ச்சி ஏற்படும். வீரம் பெருகும். சகோதரரால் நன்மை ஏற்படும். கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை ஏற்படும்.அவர்கள் மூலம் பணவரவும் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் பயன் உள்ளதாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புத்திரர் பற்றிய கவலை ஏற்படும். ஆயினும் அவர்கள் படிப்பிலும், தொழிலிலும் முன்னேற்றம் அடைவார்கள். வீட்டில் போதிய அளவுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். மருத்துவச் செலவுகள் அதிகரித்து மனக்கவலை அளிக்கலாம். அதிகாரிகளுக்கு எதிர்பாராத இடமாற்றத்தால் அலைச்சல்கள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கு ஏற்ற காலம். சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் புதிய சர்ச்சைக்களும், வாக்குவாதங்களும் உண்டாகலாம். அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.நண்பர்களின் மூலமாக உதவிகளும், ஆதாயங்களும் இருக்கும். உயர்பதவிகள் கிடைக்கும். சிலருக்கு அலைச்சல்கள் அதிகமாகும். பயணத்தின்போது விபத்துக்கள் ஏற்படலாம். பணியாட்களால் உதவி கிடைக்கும். சிலர் ரகசிய வேலைகளில் ஈடுபடுவர். உங்களது அதிர்ஷ்ட எண் – 4 , நிறம் – வெள்ளியின் நிறம். வருடம் முழுவதும் வள்ளி மணாளன் சுப்ரமணியனின் ஸ்தோத்திரம் படிப்பது கஷ்டங்களைத் தீர்க்கும். மொத்தத்தில் விருச்சிகராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – யே, யோ, ப, பீ, பூ, த, ப, டா, பே )
தனுசு இராசி வாசகர்களே !
ஆண்டுத் துவக்கத்தில் தங்கள் இராசிநாதன் குரு 10 இல் இருந்து இன்னல்கள் தந்தாலும், செப்டம்பருக்குப் பிறகு இலாபஸ்தானம் அமர்ந்து அரசு மரியாதை, உயர்ரக வாகனங்கள், இராஜதந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகளை அடைதல்,கிராமத்தலைமை ஆகியவற்றைத் தருவான். இராஜயோகம் தருவதோடு, தவத்திலும் பூஜை புனஸ்காரங்களிலும், தெய்வீககாரியங்களிலும் ஈடுபடுத்தி, புண்ணிய காரியங்கள் மற்றும் தான தர்மங்களையும் செய்ய வைக்கிறார். வளம் கொழிக்கும்வயல்களால் வசதிகள் பெருகும். புதிய வீடு வாங்கவும், கட்டவும், பழைய வீட்டை அதிக விலைக்கு விற்கவும் வாய்ப்புண்டு.புத்திரர்கள் படிப்பிலும், வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடைவார்கள். படிப்பிலும் பணியிலும் முயற்சி செய்வோருக்கு நன்மைகள்உண்டாகும். இதுவரை தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சாண் ஏறினால் முழம் சருக்கும் என்ற கதையாக எல்லாவிதத்திலும் வாழ்க்கையில் ஏற்படும் சருக்கல்களை சமாளிக்கும் மனோதிடம் ஏற்படும். பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க உடுக்கை இழந்தவன் கை போல் நண்பர்கள் ஓடிவந்து உதவுவர். இதுநாள்வரை தடைப்பட்ட சுபகாரியங்கள் ஈடேறி இல்லத்தில் இனிமை சேர்க்கும். அதிகாரிகளின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்டு நடந்தால் அலுவலகப் பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். வழக்குகளில் அவ்வப்பொழுது ஏமாற்றம், கோபம் ஆகியவை ஏற்படும்.மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பெற்றோர்கள் மனம் புண்படாதபடி நடந்துகொள்ள வேண்டும். தொழில்,உத்தியோகம், கொடுக்கல், வாங்கல் இவையெல்லாமே அனுகூலமாக இருக்கும். வெளிநாடு செல்லவும், தூரதேசப் பயணங்கள்மேற்கொள்ளவும் நல்ல வாய்ப்புண்டு. உங்களது அதிர்ஷ்ட எண் – 5 , நிறம் – ரோஜா வண்ணம். சிவ தரிசனம் மற்றும்இராகுவிற்குப் பூஜை செய்ய இன்னல்கள் தீரும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – போ, ஜ, ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, க, கீ )
மகர இராசி வாசகர்களே !
இந்த ஆண்டு பலவழிகளிலும் பணம் சேரும். அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும். சிலருக்குப் பெண்குழந்தை பிறக்கும். கௌரவமும், அந்தஸ்தும் ஏற்படும். கட்டளை இடும் பெரும் பதவிகள் வந்து அடையும். பெரிய மனிதர் என்று பெயரெடுப்பார். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் வாலிப வயதில் உள்ளவர்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும். வழக்குகளில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும், மனக்கசப்பும், அமைதிக் குறைவும் உண்டாகும். மனைவியின் ஒத்துழைப்பும், ஆறுதலும்தான் உங்களுக்குப் பக்கபலம். குடும்பத்தில் குதூகலமும், அனைத்துவகை இன்பமும், நல்லுணவும்,நிம்மதியான தூக்கமும், வஸ்திர லாபமும் கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். நறுமணப் பொருட்களும், ஆடம்பர சாதனங்களும், திருமணமும், மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும், கல்வியிற் தேர்ச்சியும், சொத்துச் சேர்க்கையும், எல்லா நிலையிலும் முன்னேற்றங்களும், வியாபாரத்தில் வெற்றியும் ஏற்படும். சிலருக்கு மனக்குழப்பங்களும் ஏற்படலாம். தங்கள் சிறப்பான பொருளாதார நிலை நிலவும். தங்கள் துணைவியார், வியாபாரக் கூட்டாளிகள், நிலம், வீடு,வாகனம் மூலமான வருமானங்கள் கை கொடுக்கும். வெளிநாட்டு வியாபரங்கள், முதலீடுகள் அனுகூலமாக இருக்கும். பணியைப் பொறுத்தவரை சீரான, சிறப்பான வருடமாக அமையும். ஆடை ஆபரணங்கள் சேரும். சகோதரரால் நன்மை ஏற்படும். அவர்கள் மூலம் பணவரவும் ஏற்படும். வழக்குகளில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும், மனக்கசப்பும், அமைதிக் குறைவும் உண்டாகும்.மனைவியின் ஒத்துழைப்பும், ஆறுதலும்தான் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். உங்களது அதிர்ஷ்ட எண் - 6 – நிறம் – பாசிப் பச்சை. தினந்தோறும் ஸௌந்தர்ய லஹரி படித்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். மொத்தத்தில் மகரராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – கு, கூ, கோ, ஸ, ஸீ, ஸூ, ஸே,ஸோ, தா )
கும்ப இராசி வாசகர்களே!
இந்த ஆண்டு காசி ஸ்தல யாத்திரை மேற்கொள்ளலாம். அதிக உழைப்பும் குறைந்த வருவாயும் உள்ள வேலைகளில்ஈடுபட்டு வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும் சிலருக்குப் பல வழிகளிலும் பணவரத்துப் பெருகும். குடும்ப சுகம் பூர்ணமாகக்கிடைக்கும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும். வாக்கு வன்மையால் இலாபம் உண்டாகும். புதிய பதவி, மரியாதை, அந்தஸ்துஆகியவை உயரும். வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள், சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு வீண் விரயம், சந்தோஷமற்றவெளிநாட்டு வாசம் ஏற்படலாம். சிலருக்கு மந்திரி போன்ற உயர்பதவிகள் கிடைக்கும். கார் போன்ற உயர் வாகனாதிகள்கிடைக்கும். மனதிற்குப் பிடித்தபடி எல்லாம் நடக்கும். அரசு மரியாதை, உயர்ரக வாகனங்கள், இராஜதந்திரத்தால் அரசியலில் நல்லபதவிகளை அடைதல், கிராமத் தலைமை ஆகியவை ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். இராஜயோகம்ஏற்படுவதோடு தவத்திலும், தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு ஏற்படும். புண்ணிய காரியங்கள் மற்றும் தான தர்மங்களையும்செய்வீர்கள். புதிய வீடு வாங்கவும், கட்டவும், பழைய வீட்டை அதிக விலைக்கு விற்கவும் வாய்ப்புண்டு. குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்களும் அதனால் செலவுகளும் ஏற்படும். சிலருக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படலாம். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். நல்ல நண்பர்கள் கிடைப்பர். அறிவு விருத்தியாகும்.உயர்பதவிகளில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் – 7, நிறம் – ஆலிவ் பச்சை ஆகும். கஷ்ட நிவர்த்திகாகத் தினந்தோறும் கனக தாரா ஸ்தோத்திரம் படிப்பது நல்லது. மொத்தத்தில் கும்பராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்,
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – தீ, து, ஞ, ச, ஶ்ரீ, தே,தோ, ச்ச, சீ )
மீன இராசி வாசகர்களே !
இந்த ஆண்டு மனைவி, மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும். பலவகையான வாகன சுகமும் ஏற்படும்.பணக்காரர்களின் சிநேகம் உண்டாகும். கீர்த்தி பெருகும், புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புத்தி சாதுர்யமும், அறிவுத் திறனும்அதிகமாகும். அரசு வேலை கிடைக்கலாம். வேலையில் உதவிபுரிய உதவியாளர்கள் இருப்பர். ஆண் சந்ததி ஏற்படும். கால்நடைச்செல்வம் மற்றும் பால்வளம் பெருகும். பொன் பொருள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். திருமணம்ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். தங்கள் பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை ஏடுத்துக் கொள்ளுங்கள். ஓரளவு பணவரவுகள் திருப்திகரமானதாக இருக்கும். வெளிநாட்டு வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய நல்ல காலம் இது. மனைவி,மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும். பலவகையான வாகன சுகமும் ஏற்படும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புத்திசாதுர்யமும், அறிவுத் திறனும் அதிகமாகும். காதல் விவகாரங்களில் விரும்பத்தகாத பிரச்சனைகள் எழலாம். அரசு வேலைகிடைக்கலாம். வேலையில் உதவி புரிய உதவியாளர்கள் இருப்பர். கல்வியோ, எதிர்காலத்திய வாழ்க்கையையோ மேம்படச் செய்ய விரும்பினால் மனம் தளராமல் எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். முயற்சி வெற்றி தரும் என்பதற்கு இது ஒருஎடுத்துக்காட்டான ஆண்டாகும். முன்பின் தெரியாத நபர்களிடம் வம்புக்குப் போவதோ, அவர்களிடம் விரோதம் கொள்வதோநல்லதல்ல. புத்திரர்களைப் பொறுத்த மட்டில் சிறப்பான ஆண்டாக இருக்கும். மனைவியிடம் சிறு குறைகள் இருந்தாலும் பெரிதுபடுத்தாமல் இருப்பது அவசியம். உங்களது அதிர்ஷ்ட எண் – 4. நிறம் – தபால் பெட்டிச் சிவப்பு ஆகும். சகல கஷ்டங்களும் தீரசிவானந்த லஹிரி ஸ்தோத்திரம் படிப்பது நல்லது. மொத்தத்தில் மீனராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
No comments:
Post a Comment