Saturday, March 14, 2015

பொருத்தம் பார்ப்பதில் ஜோதிடரின் கடமைகள்

                                      உ


 பொருத்தம் பார்ப்பதில் ஜோதிடரின் கடமைகள்


    
     திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அது தழைத்துச் செழிக்க ஆணுக்கும்  பெண்ணுக்குமான திருமணப் பொருத்தத்தை  தீவிரமாகப் பார்த்து  அலசி ஆராய்ந்து சரியான பொருத்தத்தை பார்த்து அளிக்க வேண்டியது ஜோதிடர்களின் தலையாய கடமையாகிறது. அப்படிச் செய்யவில்லை என்றால் மணமக்களின்  வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்னல்களை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பொருத்தம் பார்ப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பத்தின் அவசியத்தையும் ஜோதிட நண்பர்கள் உணரவேண்டும். எனவே ,கீழ்க்கண்ட கணவன், மனைவி ஜாதகங்களை ஆய்வதின் மூலமாகத் தெளிவடைவோமா ?
    
     மகர லக்னத்தில் பிறந்த இச் ஜாதகரின் இலக்னமானது பாப கர்த்தாரி யோகத்தில் அமைந்துள்ளது. இரண்டாமிடத்தில்  செவ்வாயும், பனிரெண்டாம்   இடத்தில் இராகு மற்றும் சூரியனிடையே இலக்னம்  நசுக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு முன்  5 பாகையில் புதன் இருப்பதால் அவர் அஸ்தங்கம் அடையவில்லை. ஆயினும் சூரியனுக்கு  5 பாகை முன்னதாக இராகு இருப்பதால் கிரகணமாகிறார். இந்த ஜாதகர் பிறப்பதற்கு 6 நாட்கள் முன்னரே கிரகணம் ஏற்பட்டது. அது இந்த ஜாதகரை பாதித்தது.யோககாரகன் சுக்கிரன் பாதகஸ்தானத்தில் உள்ளான்  . இலக்னாதிபதி சனி தனது உச்சஸ்தானத்தில் பத்தாமிடத்தில் உள்ளான். குரு ஏழாமிடத்தில் உச்சம் பெற்றுள்ளார். மேலும் அவர் சந்திரனோடு பரிவர்த்தனை அடைந்துள்ளார்.

     கணவனின் ஜாதகம் :- (சில பல காரணங்களுக்காக முழுவிவரம் தரவில்லை). இவரின் ஜாதகத்தில் ஹம்சயோகம்,சச யோகம்,பர்வத யோஹம்,சிவா யோஹம் போன்ற சுப யோகங்களும் சத்துருத்துவ யோகம், அவகளத்திர யோகம் போன்ற அசுப யோகங்களும் உள்ளன.

சந்


கேது
செவ்

    
    ராசி
குரு
லக் ///

ராகு,புத சூரியன்  
சுக்
சனி

  
மனைவியின் ஜாதகம் :- மனைவியின் ஜாதகத்தில் இலக்னம் கடகம். இலக்னத்தில் இராகு உள்ளார். நீச குருவுடன் இணைந்த சனியும், தனது சுய வீடான ஏழாமிடத்தில் கேதுவுடனும் இணைந்துள்ளார்.







    
    ராசி
 லக்///
ராகு 
சனி,குரு கேது  
சந்,மா
 

சூரி,செவ்
புத,சுக்

குருவும் சனியும்  5 பாகை இடைவேளிக்கு மேல் இருப்பதால் அவர்களுக்குள் கிரகயுத்தம் ஏற்படவில்லை. இலக்னாதிபதி சந்திரன் சனியின் உபகிரகமான மாந்தியுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். மூன்றாமிடத்தில் பலமிக்க புதன் மற்றும் நீச சுக்கிரன் இருவரும் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் “உல்லேகம் எனும் கிரகயுத்தத்தில் உள்ளனர். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் கிரகயுத்தத்தில் இருந்தால் ,அப் பெண்ணின் குடும்ப வாழ்க்கை  அதிகமாக பாதிக்கப்படும் என்பது அடிப்படை விதியாகும். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழில் சனியிருக்க  அந்த ஜாதகி/ஜாதகர் இரட்டை வாழ்க்கை வாழ்பவராக இருப்பர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவராக இருப்பர். ஏழில் கேது,சனி,குரு இருப்பது கோழைத்தனத்தையும் ,நான்கில் சூரியன்,செவ்வாய் இணைந்து இருப்பதும் இப்பெண்ணின் மோசமான சரித்திரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

     இப்பெண்ணின் ஜாதகத்தில் கீழ்கண்ட யோகங்கள் உள்ளன. ராஜா யோகம், பாக்கிய யோகம்,சங்க யோகம்,சச யோகம்,அந்திய வயசி தனப் ப்ராப்தி யோகம் ஆகிய யோகங்கள் உள்ளன.இவை அனைத்தும் இவளின் கணவனுக்கு ஓரளவு உதவி செய்யும்.அசுப யோகங்களான கபட யோகம்,புனர்பு யோகம்,யோனி வியாதி யோகம்.மத்தியந்தர யோகம் ஆகியவை ஆகும்.

     ஏழில் சனி மற்றும் கேது இருக்கும் காரணத்தினால்  திருமணப் பொருத்த மில்லை. இது பாப சாமியக் குறைவு அல்லது அப் பெண்ணுக்கு பாபாதிக்கம் அல்லது தோஷாதிக்கம் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இப்பெண்ணின் ஜாதகத்தில் முன்றுகிரகங்கள் நீச நிலையில் உள்ளன.அவை முறையே,உடலைக்குறிக்கும் சூரியனும்,அறிவுவிருத்தியை அளிக்கும் குருவும்,காமவுணர்வைத் தரும் சுக்கிரனும் ஆவர்.மேலும் கிரகயுத்ததில் உள்ள பாதகஸ்தானாதிபதி சுக்கிரன் வெற்றி பெற புதன் தோல்வியடைகிறார். லக்னாதிபதி சந்திரன் மாந்தியோடு இணைந்து குடும்ப ஸ்தானமான  இரண்டிலும் ,பலங்குறைந்த சுபர் குரு மற்றும் பலம் மிக்க அசுபர்கள் ஏழில் இணைந்து மத்ய வைதவ்ய யோகம் அல்லது புனர்பு தோஷத்தை அளிக்கிறது. இதன் காரணமாக இப் பெண் தனது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாகவும் , அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிக்கொள்ள அதிக வலிகளைச் சுமக்க வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் ஒரு ஜோதிடர் என்ற முறையில் திருமணப் பௌத்தம் பார்க்க வந்தபோதே, இவர்களின் பெற்றோர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?

     அடுத்து அப்போது நடந்த தசா புத்தி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். கணவனுக்கு சுக்கிரதிசை,  பெண்ணுக்கு செவ்வாய் திசை சுக்கிரபுத்தி நடந்தது. இந்தக் காலமே இப் பெண்ணின் வாழ்க்கையின் மிக மோசமான காலமாயிற்று.

     மேற்கண்ட நிலைகளை வைத்து ஆராய்ந்தபோது,அப்பெண்ணின் இளமைக்கால வாழ்க்கை சந்தேகத்துக்கு                     ரியதாயிற்று. மேலும்,     திருமணத்திற்கு முன்பே  தனது கன்னித்தன்மையை இழந்திருக்கலாம். அவளின் தாய்க்குக் கூட அவளைப்பற்றி அறிந்து கொள்ள முடியாத ஆழமான மனது   டையவளாயிருந்தாள். அவள் ரகசியங்களை நன்கு அறிந்திருந்த அவளது ஆண் நண்பன் அவளை பிளாக் மெயில் செய்து, அவளை விவாகரத்து செய்யச்சொல்லி வற்புறுத்தி வந்தான்.வேறுபல சிக்கல்களும் இருந்தபோதும்  அப்பெண் அந்த நண்பனை நம்பி,விவாகரத்துக்குத் தேவையான காரணகாரியங்களை உருவாக்கி வந்தாள்.

     தன் கணவனைத் தனிக்குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்யும்படி அடம்பிடித்தாள்.         அதற்குக் காரணம் அவள் விவாகரத்தை விரும்பாததும்,அதற்கு கணவனின் குடும்பத்தார் ஒத்துவரவில்லை என்றால்,,அவர்களை கோர்ட்டுக்கு இழுக்கவும், அதற்குப் பிறகு தன் பழைய காதலனோடு ஓடிவிடவும் திட்டம் தீட்டினாள். இவளின் துக்க கரமான  வாழ்க்கையை சீர் செய்ய சில பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டன.கணவன் நான்கு முதல் ஐந்து கேரட் வரையுள்ள புஷ்பராகக் கல்லை தங்கத்திற் பதித்து,வலதுகை மோதிர விரலில் அணியவும்.மேலும் அவருக்கு நம்பிக்கையிருந்ததால் கனகதாரா ஸ்தோத்திரத்தை உச்சரிக்கக்  கேட்டுக் கொள்ளப் பட்டது. அவரின் மனைவியை மூன்று முதல் நான்கு கேரட்  மரகதக்கல்லை தங்கத்தில் பதித்து வலதுகை மோதிரவிரலில் அணிந்தும்,சௌந்தர்ய லஹிரி ஸ்லோகத்தை, ஸ்லோகம் ஒன்று முதல் நாற்பத்தி ஒன்று  வரை உச்சரிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

     எனவே ஜோதிட அன்பர்களே சரியான முறையில் ஜாதகப் பொருத்தம் பார்த்தால் இத்தகைய குழப்பங்கள் ஏற்படாது என்பதை இக் கட்டுரையின் மூலமாக அறிந்தோமல்லவா ? மேலும் துல்லியமாக ஜாதகப் பொருத்தம் பார்த்து அவர்களின் நல்வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது ஒவ்வொரு ஜோதிடரின் கடமையுமாகிறது.                                            
                                                   

No comments:

Post a Comment