Monday, January 19, 2015

தாமதத் திருமணமும்,சனியும்…………!

         தாமதத் திருமணமும்,சனியும்…………!
  

    பொதுவாக ஏழில் உள்ள சனி அந்த பாவத்தைக் கெடுப்பதாக ஜோதிடர்களால் கருதப்படுகிறது. தாமதத்திருமணம் மற்றும் முறையற்ற திருமணத்தைத் சனி தருவதாகவும் கருதுகின்றனர்.இந்தக் கருத்து சரியா என்றால் இல்லை என்றுதான் சோல்ல வேண்டும்.திருமண விஷயங்களில் சனியின் தாக்கமென்ன என்பதை இக் கட்டுரையின் மூலமாக ஆராய்வோமா ?
   
       சந்தேகமில்லாமல் சனி மெதுவாகச் செல்லும் கோளேயாகும்.அது ஒரு ராசியில் 2-1/2 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கின்றது என்பது நாம் அறிந்த ஒன்றே. சமஸ்கிருதத்தில் சனி என்பதற்கு மெதுவாகஎன்பது பொருளாகும்.இந்த சனியின் தாமத குணத்தைக் கருத்திற் கொண்டு,7 ல் சனி எனில் தாமதத்திருமணம் எனச் சொல்வதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை.அதையும்தாண்டி வேறுசில காரணிகள் இருக்க வேண்டும்.அவை என்ன ? அவை ஒளிக் கிரகங்களான சூரியன் சந்திரன் மற்றும் சுக்கிரன் மீதான சனியின் தாக்கமாக இருக்கலாம், இதன் காரணமாக திருமணத்தடையோ அல்லது திருமண தாமதமோ இருக்கிறதா ? என்பதை, சில ஜாதகங்கள் மூலமாகப் பார்ப்போம்.


சூரி,புத

சனி

கேது


சந்,
லக்///

        ராசி
  11 – 05 --  1944
  10 – 30 இரவு
     சீத்தாபூர்.
செவ்,
ராகு,குரு

குரு
   
     நவாம்சம்
செவ்
கேது

.


புதன்
சுக்
சந்





சூரி

சனி
ராகு

கேது தசா இருப்பு : 2 – 2 மா – 3 நாள்.

     இந்த ஜாதகத்தில் சனி 7 ல் உள்ளார்.இந்த ஜாதகருக்கு 27 வயதில் திருமணம் நடந்தது. இந்த தாமதத்திற்கு காரணமான பிற காரணிகள் யாவை ? சனியின் அசாதரண தாமதத் திருமணமானது,ஒளிக் கிரகங்களான சூரியன்,சந்திரன் மீது சனியின் பார்வை விழும் போதும் மற்றும் சுக்கிரன்,சனியின் நட்சத்திரத்தில் இருக்கும் போதும் ,சனிசுக்கிரன் ஆகிய கிரகங்களோடு இணைந்திருக்கும் போதும் , பார்க்கும் போதும் அல்லது சனியின் ராசியில் இருக்கும் போதும் தாமத திருமணமோ  அல்லது தம்பதிகளுக்கிடையே அதிக வயது வித்தியாசத்தையோ தந்துவிடுகிறது.

    இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன வென்றால்,சனி 7 ல் இருப்பது மட்டுமல்ல மேற்கண்ட காரணிகளும் தாமதத்  திருமணத்திற்குக் காரணமாகின்றன என்பதேயாம்.

கேது


லக்///

ராகு


சனி
சந்,
        ராசி
  12 – 10 --  1959
  09 – 45 இரவு
     சீத்தாபூர்.



   
     நவாம்சம்
சுக்

சுக்
.

புதன்
சூரி
சனி
குரு
செவ்,
புதன்.
சூரி
ராகு


சந்.
லக்///
செவ்
குரு,கேது

ராகு தசா இருப்பு : 14 – 9 மா – 22 நாள்.
   
      இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் 7 ல் சனி உள்ளார்.ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் சனியால் பார்க்கப்படுகிறார்கள்.இதன் காரணமாக இந்த ஜாதகரது திருமணம் தடைப்பட்டது.1986 ல் இவரது 27 வது வயது வரை முதிர் கன்னியாகவே இருந்தார்.

     இது சம்பந்தமான வேறு சில காரணிகளும் உள்ளன.லக்னத்தில் சனியிருந்து,ஒளிக் கிரகங்களால் பார்க்கப்பட்டாலும்,அல்லது அவர்களில் ஒருவருடன் சனி இணைந்திருந்தாலும்,அது சீக்கிர திருமணத்திற்கும் அல்லது மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கும் மிக மோசமான இணைவாகும்.அத்தோடு சுக்கிரனோடு 7 ம் அதிபதி சனியின் தாக்கத்தோடு இருத்தல் வேண்டும்.அதேபோல், 7 ம் அதிபதி மற்றும் சனியோடு சூரியன் மட்டும் இணைந்து அல்லது  7 ல் உள்ள சனியைப் பார்த்தஇருந்தாலும் திருமணம் மறுக்கப்படுகிறது அல்லது தாமதப்படுகிறது.

     கீழ்காணும் ஜாதகத்தில் சனி 7 ல் புதனோடு இணைவு.சந்திரன் சனியின் பார்வையைப் பெறுகிறார். 7 ம் அதிபதி  6 லும், லக்னாதிபதி 8 லும்  இருக்கின்றன.எனவே,இந்த ஜாதகத்தின் மூலாமாகவும் நாம் 7 ல் சனி இருப்பது மட்டுமே தாமதத் திருமணத்திற்கு காரணமல்ல மேற் குறிப்பிட்ட காரணங்களும் இணைந்தே  தாமதத் திருமணத்திற்கு அடிகோலுகின்றன என்பதை அறிய முடிகிறது அல்லவா ?

    


கேது
லக்///





சூரி
சந்
,
        ராசி
  15 – 11 --  1957
  06 – 10 மாலை
     லக்னோ


ராகு
லக்///
   
     நவாம்சம்


சந்
.

செவ்
சனி
கேது
சுக்
புதன்
சனி
சூரி
செவ்,
ராகு
குரு




புதன்
குரு,சுக்



     எனவே, இன்னும் பல ஜாதகங்கள் மூலமாக இதை நிலைநிறுத்த முடியுமென்றாலும் விரிவன்ஞ்சி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

                                                


No comments:

Post a Comment