Tuesday, October 7, 2014

“நோபல் பரிசு” பெற்ற அமர்தியா சென்.


நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்.

      சேத்ர சிம்மாசனம் என்பது மிகப் பெரிய இராஜ யோகம் ஆகும். இந்த யோகம் நோபல் பரிசு பெற்ற புகழ்மிக்க தத்துவவாதி அமர்தியா சென் அவர்களின் ஜாதகத்தில் உள்ளது. இந்த யோகமானது 10 ஆம் அதிபதி கேந்திரத்தில் இடம் பெறும் போது ஏற்படுகிறது. திரு. சென் அவர்களின் ஜாதகத்தில் 10 ஆம் அதிபதி தசம கேந்திரத்தில் தனது ஆட்சி வீட்டில் உள்ளார். தசம கேந்திரமானது சிறப்பு மிக்க கேந்திரமாகும். மேலும் 10 ஆம் அதிபதி சனி தனது ஆட்சி வீட்டில் இருப்பது பஞ்ச மகா புருஷ யோகமான சச யோகத்தை அளிக்கிறது. இதேபோல் செவ்வாயும் தனது ஆட்சி வீடான சப்தம கேந்திரத்தில் இருப்பது ருசக மகா யோகத்தை அளிக்கிறது. இந்த யோகங்கள் இவரின் வாழ்க்கையில் நல்ல நிலையையும் ஸ்திரமான சொத்துக்களையும் அளிக்கிறது.
    
             பிறந்த தேதி -- 03-11-1933. பிறந்த நேரம் -- 15 - 30, பிறந்த ஊர் -- சாந்தி நிகேதன் , ( பிர்பூம் மாவட்டம்)
    


லக
சந்;


சூரி
லக்;
கேது;;
சுக்;
குரு
இராகு
அமர்தியா
சென்
      ராசி
;
சந்
செவ்


நவாம்சம்

சனி
கேது


சுக்
செவ்
புதன்
சூரி
குரு
;;

புதன்
இராகு
சனி

    இவரின் ஜாதகத்தில் உச்சம் பெற்ற 4 ஆம் அதிபதி சந்திரன் மிகவும் பலம் மிக்கவராக உள்ளார். சந்திரனை பாக்கியாதிபதி குருவும் பார்ப்பதால் இவர் தனித்திறன்கள் மிக்கவராகவும். சொத்துக்கள்> புகழ்> மதிப்பு> மரியாதை மற்றும் முனைப்பான செயல்பாட்டையும் உடையவராகவும் ஆக்கியது.   

    சந்திரனும் புதனும் பரஸ்பர பார்வையால் பலம் மிக்கவர்கள் ஆனதால் திறமை> அறிவு கூர்மை> நினைவாற்றால்> ஆகியவற்றையும் பெற்றார். புதன் -- செவ்வாய் இணைவு ஜாதகரை அதிபுத்திசாலி ஆக்கியது. புதன்- செவ்வாய்க்கு இயற்கை அசுபரானாலும்> அவர் புதனுக்கு சமமானவர் ஆதலால் இந்த யோகம் இவருக்கு நன்மையே செய்கிறது. சந்திரன் - செவ்வாயின் பரஸ்பர பார்வை> ஒருவரைத் துணிச்சல் மிக்கவராகவும்> சுறுசுறுப்பு மிக்கவராகவும் ஆக்கிவிடுகிறது. 8 ஆம் இடத்திலுள்ள புதன் ஒருவரை எட்டாத உயரத்துக்குக் கொண்டு சென்றுவிடுவதோடு புகழையும்> நீண்ட ஆயுளையும் தந்துவிடுகிறது. மேலும்> ஜாதகரை மதப் பிரியவராகவும்> பெரிய தொழிலதிபராகவும் ஆக்கிவிடுகிறது.
    
       இதைத் தவிர அவருக்கு> குரு மற்றும் சனி தொடர்பால் ஏற்படும் சக்தி மிக்க யோகமான கௌரி யோகமும் உள்ளது. இதன் காரணமாக உள்ளுணர்வு சக்தி மற்றும் தத்துவ சிந்தனைகள் பெருகின. நவாம்சத்தில் கர்மகாரகன் சனி> புதனின் நவாம்சம் பெற்றுள்ளது. இவரையொரு பொருளாதார நிபுணராகவும்> எழுத்தாளராகவும் உயர உதவியது. இது தவிரவும் இலக்னமும் வர்கோத்தமம் ஆகியுள்ளது.
    .
        இவர் மேஷ இராசியின் துவக்க பாகையிலேயே பிறந்திருப்பது> மீனம் மற்றும் மேஷ இராசியின் சந்தி ஆவதால் இரு இராசிகளின் குண இயல்புகளும் உடையவராய் இருப்பார். மேஷ இராசியின் குணயியல்பான செய்தொழில் மீதான முழு ஈடுபாட்டையும் தந்ததோடு> தைரியம் மிக்கவராகவும்> மனதளவில் பலம் மிக்கராகவும்> தலைமைப் பொறுப்புக்குப் பொருத்தமானவராகவும்> பிரபஞ்ச சகோதரத்துவத்துக்கு உழைப்பவராகவும் ஆக்கியது. இந்த குணங்களின் வெளிப்பாட்டினாலேயே இவரின் மனிதாபிமானப் பணிகளுக்காக நோபல் பரிசையும் வென்றார். சமத்துவ சமுதாயத்தைக் காணவும்> பெண்ணுரிமையை நிலைநாட்டவும் மற்றும் ஏழ்மையை அகற்றவும் என இவரின் முற்போக்கு எண்ணங்களுக்குக் கிடைத்த பெரும் மரியாதையே நோபல் பரிசாகும்.
    
      இவரது சேவைகளுக்கான அங்கீகாரமாக நோபல் பரிசு மிகத் தாமதமாகவே கிடைத்தது. அதற்குக் காரணம் இராசியில் சூரியன் நீசம் ஆனதேயாம். ஆனால் பாவச் சக்கரத்தில் சூரியன் 8 ஆம் இடமாகிய விருச்சிகத்தில்> புதனுடன் சந்திரனின் பார்வை பெற்றுள்ளார். மேலும் > புதஆதித்ய யோகம் இவரை உயர்த்தியது. நவாம்சத்தில் சூரியன் குருவின் மீன நவாம்சத்தில் இருப்பது காலந்தாழ்ந்து கிடைத்தாலும்> வயோதிகத்திலேனும் கிடைத்தது.
    
   



லக்

சந்;

 இராகு


சனி
பாவகம்;;
கேது

செவ்
சுக்
சூரி
புத
குரு

        
     பாவகத்தில் குரு ஏழிலும்> சூரியன் எட்டிலும்> செவ்வாய் ஒன்பதிலுமாக உள்ளனர். இராசியில் குரு 6 ஆம் பாவத்தில் இருந்தாலும்> பாவகத்தில் 7 ஆம் வீட்டில் உள்ளார். அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தபோது யோககாரரான சனியின் திசையும் நடந்தது. சனி தரும் இரு யோகங்களான சேத்திர சிம்மாசன யோகம் மற்றும் சச யோகம் ஆகியவை இருந்ததால் இக்காலத்தில் இவருக்குப் பரிசு கிடைத்தது எனலாம். சந்திரனுக்கு 9> 10 க்கு அதிபதியான சனி யோககாரகனாதலால் சனி திசையில் பொருளாதாரத் தத்துவத்திற்கான மதிப்பு மிக்க நோபல் பரிசை வென்றார். சனி. குரு இருவரும் சந்திரனின் நட்சத்திரத்தில் உள்ளனர். 4 ஆம் அதிபதி சந்திரன் 7 ஆம் இடத்தில் உச்சமாகி 9 ஆம் இடத்தின் அதிபதி குருவால் பார்க்கப் படுவது இராஜ யோகத்தைத் தந்தது.

                  



No comments:

Post a Comment