Monday, October 27, 2014

எட்டாம் பாவ காரகங்கள்


எட்டாம் பாவ காரகங்கள்


       ஆயுள்> ஆராய்ச்சி> ஆன்மீக விஞ்ஞானத்தில் ஆர்வம்> மந்திர சக்தி> உள் மற்றும் வெளி மாற்றங்கள்> கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்ச்சிகள்> இறப்பு> உயில்> ஆயுள் காப்பீடு> சுலபமான இலாபங்கள்> மணவாழ்வின் பந்தம்> மரபு உரிமை> காயம் ஏற்படக்கூடிய நிலை> பயம்> விபத்து. தடைகள்> வழக்குகள்> திருட்டு> நஷ்டங்கள்> துரதிர்ஷ்டம்> அவமானம்> திவாலாகுதல்> ஏமாற்றங்கள் ஆகியவையும் வாள்> துப்பாக்கி முதலியவற்றால் ஏற்படும் காயம்> போர்> சண்டை> மலை> பலமாடிக் கட்டிடம் போன்ற உயரமான இடங்களில் இருந்து விழுந்து அல்லது குதித்து உயிர் துறத்தல்> தீராத வியாதிகள்> வருத்தம்> நீங்காத பல வகைக் கஷ்டங்கள்> துன்பங்கள்> மானபங்கம்> ஆயுள் அளவு> நீங்காத அல்லது தீராத பகை> வீணான தேவையற்ற அலைச்சல்> பாவம்> அஞ்ஞானம்> திடீர் சாவு> தோல்வி> சிறைப்படல்> தற்கொலை> தூக்கு> கொலை> கொள்ளை> கைமைநிலை> மன உளைச்சல்> மரியாதைக் குறைவு ஆகியவையும். 7 ஆம் இடத்துக்கு 2 ஆம் இடமாதலால் வரதட்சிணை மற்றும் மனைவியின் மூலம் வரும் வருமானம்> எதிரியின் வலிமை> நண்பர்கள்> வெற்றி> கூட்டாளியின் சொத்து> போனஸ்> கிராஜூவிட்டி> சாவின் வகை> கசாப்புக் கடைக்காரர்> சர்ஜன்> மருத்துவ அதிகாரி> லஞ்சம்> நதியைக் கடந்து போகுதல்> பயணத்தில் ஏற்படும் கஷ்டங்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.

ஆறாம் வீட்டுக்கு 3 ஆம் வீடாவதால் சகோதரரின் வேலைக்காரர்களையும்> 5 ஆம் வீட்டுக்கு 4 ஆம் வீடாவதால் குழந்தைகளின் தாயைப்பற்றியும்> 3 ஆம் வீட்டுக்கு 6 ஆம் வீடாவதால் சகோதர> சகோதரிகளின் ஆரோக்கியக் குறைவையும்> 10 ஆம் இடத்திற்கு 11 ஆம் இடமாவதால் நண்பர்களின் கௌரவம் மற்றும் மரியாதையைப் பற்றியும்> மேலும்> 8 ஆம் வீடு அங்கஹீனம் தண்டனை பெறுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.
    
       8 ஆம் வீட்டுடன் யுரேனஸ்ஸின் தோடர்பு வித்தியாசமான மற்றும் நிடீர் இறப்பையும்> வெடி விபத்து> கொள்ளை நோய்கள்> என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமலே தவறான மருத்துவ முறையால் ஜாதகர் இறக்க நேரிடலாம். இடி> மின்னல் தாக்கி அல்லது மின்சாரம் தாக்கி இறக்கலாம்> நெப்டியூன் தொடர்பு> கோமா மற்றும் மயக்கநிலைக்குக் கொண்டு செல்லலாம் அல்லது அலர்ஜி> மருந்து ஓவர்டோஸ் ஆகலாம். கேஸ்> நீரில் மூழ்குதல்> விஷம் ஆகியவற்றால் மரணம் நிகழலாம்> 8 ஆம் பாவ உடற் பாவங்கள் -- குதம்> இனவிருத்திக்கான உறுப்புகள்> அசுத்தங்களை வெளியேற்றும் பாகங்கள்> இடுப்பு எலும்பு ஆகியவை ஆகும்.



        8 ஆம் வீடு அதன் அதிபதி ஆகியவை பாதிப்படைந்தால்  விரை வீக்கம்> வெடிப்பு> வீக்கம்> ஆண்மையின்மை> மூலம்> சிறுநீரக நோய்> கட்டிகள்> தீராத வியாதிகள் ஆகியவை ஏற்படுகின்றன. பலம் வாய்ந்த ஆயுள்காரகன் சனி இவற்றில் இருந்து நம்மைக் காக்க உதவுகிறான். 
   
                             ________________


வல்லமை தாராயோ பராசக்தி - இந்த மானுடம் பயனுற 

வாழ்வதற்கே.

என் கடன் பணி செய்து கிடப்பதே.


Sunday, October 26, 2014

விமானங்களும் - விதிகளும் - விபத்துக்களும்.

            விமானங்களும் - விதிகளும் - விபத்துக்களும்.

    நாளுக்கு நாள் உலகில் விமான விபத்துக்கள் அதிகமாகிவிட்டன. உலகின் ஏதோவொரு மூலையில் ஏற்படுகின்ற கொடூரமான விபத்துக்களில்  ஏராளமானோர் மரணம் என்று தினசரி நாளிதழ்களில் செய்திகள் வராத நாளே இல்லை என்று எண்ணும் வண்ணம், அடிக்கடி துக்ககரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.


    சில மாதங்களுக்கு முன் கூட மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனத் தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்னாம் நாட்டின் மேல் பறந்து சென்ற போது நடுவானில் மாயமானது. 239 பேரின் நிலை என்ன ? என்ற செய்தி உலகையே உலுக்கியது. இத்தகைய விமான விபத்துக்களுக்கு ஜோதிட ரீதியான காரணிகள் யாவை ?


   கடந்த சில மாதங்களுக்கு முன், வலைத்தள ஆங்கில ஜோதிட குழுமம் ஒன்றில், பல ஜோதிட அறிஞர்களால் உரைக்கப்பட்ட காரணிகளின் அடிப்படையில், இதற்கு முன்னர் நடந்த பல விமான விபத்துக்களின் விவரங்களைத் திரட்டி, விபத்து நடந்த அன்றைய கோசார நிலைகளோடு  ஒப்பிட்டு ஆராய்ந்ததின் விளைவே இக்கட்டுரை.


விமான விபத்தைப்பற்றி நினைக்கும் போதேஅனுபவம் மிக்க ஜோதிடரின்  எண்ணத்தில் எழவேண்டியது நான்காம் வீடு, நான்காம் அதிபதி மற்றும் நான்காமிடம், காற்று இராசிகளான மிதுனம், துலாம், கும்பத்தில் அமைதல் ஆகியவையாகும். இவையெல்லாம் விமான விபத்துக்குக் காரணிகள் ஆனாலும், மனித உயிரிழப்புக்கு, குருவின் பார்வையின்றி, இலக்னாதிபதி நாலில் அமர்தலே/தொடர்புறுதலே காரணமாகும். மேலும், இந்த நான்காம் வீட்டு தீய தாக்கங்களைத் தவிரவும், பொதுவான சில கிரக மற்றும் இராசி நிலைகளும் காரணிகளாகின்றன. அவையாவன :
1.   கோசார சூரியன்,  காற்று இராசிகளுக்கு 6,8 மற்றும் 12 ஆம் இடங்களில் இருக்கவும். (காற்று இராசிக்கு 6 ஆம் வீடு நீர் இராசியாகவும், 8 மற்றும் 12 ஆம் இடங்கள் பூமி அல்லது நில இராசியாகும்.)
2.   கோசார சந்திரன், காற்று இராசிகளுக்கு 6,8 மற்றும் 12 ஆம் இடங்களில் இருக்கவும். (முன்னர் குறிப்பிட்டது போல் காற்று இராசிக்கு 6 ஆம் வீடு நீர் இராசியாகவும், 8 மற்றும் 12 ஆம் இடங்கள் பூமி அல்லது நில இராசியாகும்.)
3.   மேலே கூறப்பட்டவற்றோடு, காற்று இராசியில் சனி இடம்பெறும் போதும் விமான விபத்து ஏற்படுகிறது.
4.   விபத்துக்குள்ளான விமானமானது, அளவில் பெரியதாகின், சனி அல்லது சூரியன் காற்று இராசிகளில் இருக்கும்.

5.   கேதுவானவர் – சூரியன், செவ்வாய், அல்லது சனிக்கு  4,  6, 8 மற்றும் 10 வீடுகளில் அமரவும்.
6.   செவ்வாய் – சூரியன் அல்லது சனிக்கு 6, 8 இல் இருக்கவும்.


7.   செவ்வாய் மற்றும் கேது சஷ்டாஷ்டகமாக அமையவும்.
8.   சனிக்கு, 6, 8, அல்லது 12 இல் சூரியன் இருக்கவும்.
9.   சூரியன் மற்றும் சந்திரன் சஷ்டாஷ்டகமாக அமையவும்.
10.  சனி, வக்கிரநிலை அடையும்போதும், முக்கியமாக காற்று இராசிகளில். மேலே சொல்லப்பட்ட காரணிகளில் இரண்டுக்கு மேற்பட்ட நிலைகள் ஏற்பட விபத்தின் அளவு கூடுதலாக இருக்கும். ஆறாவது காரணியில், கேதுவின் காலம், இராசிக்கு ஒண்ணரை வருடமாதலால், பயண நாளன்று மற்ற காரணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இவற்றை அனுசரித்துப் பயணங்களை ஒருசில நாட்கள் ஒத்திவைப்பதே நல்லது.
கீழ்க்கண்ட ஐாதகங்களில் இக்காரணிகள் எவ்விதம் பொருந்தி வருகிறது எனப் பார்ப்போமா ?


குரு
சனி




புத
செவ்
சுக்
சூரி
லக்//


சந்
குரு
சனி
புத
செவ்
30 – 1 - 2000
கென்ய விமானம்.
இறப்பு-169
பேர்
1
இராகு
குரு
1 – 6 – 2009
பிரேஸில்

இறப்பு-228 பேர்
2
கேது

25 – 7 – 2000
பிரான்ஸ்
விமானம்
இறப்பு-109
பேர்
3
லக்//
சூ,செ,
சு,ரா
லக்//
சூ,பு,
கேது

ராகு
சனி
கேது

சுக்
சந்





சந்





முதல் ஜாதகத்தில், காற்று இராசியான மிதுனத்துக்கு 6 ஆம் வீட்டில் சந்திரனும் 8 இல் சூரியனும் உள்ளனர். சனிக்குப் பத்தில் கேது இருக்கிறார். நான்காம் அதிபதி செவ்வாய் காற்று இராசியான கும்பத்தில் உள்ளார்.
2..  காற்று இராசியான மிதுனத்தில் இலக்னம், அதற்கு 12 லும், துலாத்துக்கு எட்டிலும் சூரியன் உள்ளார். துலாத்துக்கு 12 இல் சந்திரன் உள்ளார். செவ்வாய்க்கு 4 இல் கேது உள்ளார். கும்பத்துக்கு எட்டில் சந்திரன் உள்ளார்.
3.  காற்று இராசியான கும்பத்துக்கு 6 இல் சூரியன் உள்ளார். 4 ஆம் வீடு காற்று இராசியாகும். 4 ஆம் அதிபதி சுக்கிரன் இலக்னத்தில் உள்ளார்.




பு,சுக்
சனி
லக்//
சூ,கு,
ராகு



சனி
குரு
ராகு




சனி

குரு
சந்
ராகு

4 – 7 - 2001
ரஷ்ய விமானம்.
இறப்பு-145
பேர்
4


12- 11 - 2001
அமெரிக்க
விமானம்
இறப்பு-265 பேர்
5


119 – 2001
அமெரிக்க
விமானம்
இறப்பு-2977
பேர்
6

சுக்


செவ்


சூரி
சந்
கேது
செவ்


கேது

லக்//
சூ,பு
சுக்
சந்
செவ்
கேது
லக்//
மா

புத

4. சூரியன் காற்று இராசியில் உள்ளார். அவருக்கு 6 இல் செவ்வாய் உள்ளார். சனிக்கு      எட்டில் கேது உள்ளார். நான்காம் அதிபதியும், இலக்னாதிபதியும் புதனே.
5. சனிக்கு 8 இல் கேது. காற்று இராசியில் சூரியன். காற்று இராசியான கும்பத்துக்கு 8 லும், துலாத்துக்குப் பன்னிரண்டிலும் சந்திரன் உள்ளார்.
6. சனிக்கு 8 இல் கேது மற்றும் செவ்வாய் உள்ளனர். இலக்னத்துக்கு நான்காமிடம் காற்று இராசி. அதன் அதிபதி சனி இலக்னத்தைப் பார்வை செய்கிறார்.




லக்//
சூ,பு,
சனி,ரா
செவ்,
கு,சுக்



ராகு
லக்//
சூ,புத
சு,சனி

செவ்
இராகு

சனி

25 – 5 - 2002
சீன விமானம்.
இறப்பு-225
பேர்
தைவான்
7

செவ்
08 – 7 - 2003
சூடான்
விமானம்
இறப்பு-117 பேர்
8
குரு

25 – 12 – 2003
மே.ஆப்ரிக்க
விமானம்
இறப்பு-151
பேர்
9





சந்
சுக்
குரு

கேது
சந்


கேது
சந்

லக்//
சூ,புத

கேது


7. காற்று இராசி மிதுனத்துக்குப் 12 லும், துலாத்துக்கு எட்டிலும் சூரியன் உள்ளார். செவ்வாய் மற்றும் கேது 6/8 ஆக உள்ளனர்.   சூரியன் , சந்திரன் 6/8 ஆக உள்ளனர். இலக்னத்துக்கு நான்காம் அதிபதி சூரியன் இலக்னத்தில் உள்ளார்.
8.  காற்று இராசி மிதுனத்தில் சூரியன் மற்றும் சனி. செவ்வாய்க்குப் பத்தில் மற்றும் சூரியன், சனிக்கு 6 இல் கேது உள்ளார். இலக்னம் மற்றும் நான்குக்கு அதிபதியான புதனும் காற்று இராசியான இலக்னத்தில் உள்ளார்.
9.  காற்று இராசியில் சனி (மிதுனம்) உள்ளார். செவ்வாய், கேது 6/8 ஆக உள்ளனர். காற்று இராசியான கும்பத்திற்கு 12 இல் சந்திரன். இலக்னத்துக்கு நான்காம் அதிபதியான குரு இலக்னத்தைப் பார்வை செய்கிறார்.


குரு
புத
லக்//
சூரி
சுக்
கேது

சூ,புத
சுக்
கேது
குரு
சந்


கேது
சந்
குரு

22 – 5 - 2010
இந்திய விமானம்.
இறப்பு-158
பேர் (10 )
மங்களூர்
செவ்
செவ்
27 – 3 - 1977
ஸ்பெயின்
klm,pan.am
விமானம்
இறப்பு-918 பேர்
11
சனி


சூரி
07 – 3 – 2014
மலேசிய
விமானம்
இறப்பு-227
பேர்(12)
வியட்னாம்


சந்

லக்//
மா
புத
சுக்

இராகு


சனி


ராகு


லக்//
செவ்,
சனி
ராகு


10. காற்று இராசிகளான மிதுனத்துக்கு 12 லும், துலாத்துக்கு எட்டிலும் சூரியன் உள்ளார். இலக்னத்துக்கு 4 ஆம் அதிபதி சூரியன் இலக்னத்தில் உள்ளார். சனிக்குப் பத்தில் கேது உள்ளார்.
11. காற்று இராசியான துலாத்துக்கு 6 இல் சூரியன் உள்ளார். நான்காம் அதிபதி செவ்வாய் காற்று இராசியான கும்பத்தில் உள்ளார். சனிக்குப் பத்தில் கேதுவும் எட்டில் செவ்வாயும் உள்ளனர். இது இரு விமானங்கள் வானில் ஏறும் போது மோதலில் ஏற்பட்ட கொடூர விபத்து.

12. சூரியனும், சனியும் முறையே காற்று இராசிகளான கும்பம் மற்றும் துலாத்தில் இடம் பெற்றுள்ளனர். காற்று இராசிகளான மிதுனத்துக்கு பன்னிரண்டிலும், துலாத்துக்கு எட்டிலும் சந்திரன் உள்ளார். இலக்னத்துக்கு நான்காமிடம் காற்று இராசி, அதன் அதிபதி சனி மற்றுமொரு காற்று இராசியான துலாத்தில் உள்ளார்.


    எனவே,  விபத்துக்கான சரியான நேரங்கள் கிடைத்திருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ளதால் காரணிகளை மட்டும் அறிந்து கொள்ளுங்கள். நான் திரட்டிய இத்தகவல்கள் பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணி இப் பகுதியை முடிக்கிறேன். நன்றி.