Tuesday, September 2, 2014

எழுத்தாளருக்கான யோகநிலை

எழுத்தாளருக்கான யோகநிலை

       எழுதுதல் ஒருவரால் ஆர்வத்துடன் உருவாக்கப் படுகின்ற இனிய கலை ஆகும்இந்தத் தனித்திறமை அறிவாளிகளுக்கே உரியதுசிறந்த எழுத்தாளர்கள் தங்களின் சமூக அடையாளங்களைத் தங்களின் எழுத்துக்கள் மூலமாக சரித்திரத்தின் பக்கங்களில் விட்டுச் செல்லத் தவறுவது இல்லை.இத்தகைய கலைஞர்கள் எழுத்தாளர்கள்கவிஞர்கள்தத்துவவாதிகள்ஆவர்ஜோதிட விதிகளின்படி ஒருவர் எழுத்தாளர் ஆவதற்கான திறமைகள் அவரிடம் உள்ளனவா ? – என நாம் அனுமானித்துவிட முடியும்கவிஞர்கள் உருவாக்கப்படுவது இல்லைஅவர்கள் இயற்கையாகவே பிறக்கிறார்கள்இனி பெரிய எழுத்தாளர்களுக்கான யோக நிலைகளைப் பார்ப்போம்.

1.   இலக்கியம் எனும் பரிசைத் தருவது இரண்டாமிடம் ஆகும்இரண்டாம் அதிபதி, 5 ஆம் அதிபதியுடன் அல்லது குருவுடன் இணைந்துஇரண்டு அல்லது 5 ஆம் வீட்டில் இருக்க ஒருவர் எழுத்தாளர் ஆகிறார் அல்லது கவிஞர் ஆகிறார்.

2.   பலம் மிக்க குரு ஆத்ம காரகன் ஆக ஜாதகரை அனைத்தும் கற்ற  அறிவாளியாக ஆக்கிவிடுகிறது.  அவருடன் சுக்கிரன் அல்லது சந்திரன் இணைந்தால் ஜாதகர் மிகப் பிரபலமான எழுத்தாளர் அல்லது கவிஞர் ஆவார்.

3.   மற்றும் 9 ஆம் அதிபதிகள் தொடர்பு ஒருவரை எழுத்தாளர் ஆக்கும்.

4.   சனி மற்றும் குருவின் தொடர்பு ஒருவரை தத்துவம்ஜோதிடம் மற்றும் மத சம்பந்தமான நூல்களை எழுதும் ஆசிரியர் ஆக்குகிறது.

5.   புத-ஆதித்ய யோகம் ஆழ்ந்த எழுத்துத் திறனை அளிக்கிறதுதனுசு இலக்னமாகிஇந்த யோகமானது சிம்மம் அல்லது கன்னியில் ஏற்பட்டால் எழுத்துத் துறையில் மிகச் சிறந்த பலன்களை எதிர்பார்கலாம்.


6.   பலம்மிக்க புதன் ஆத்மகாரகனாகவும், 5 ஆம் இடத்து அதிபதியாகவும் திகழ ஜாதகர் பல நூல்களை எழுதும் ஆசிரியர் ஆகிறார்.

7.   குரு மற்றும் சந்திரனின் நல்ல இடங்களில் ஏற்படும் கேந்திர பரிவர்த்தனையால் ஏற்படும் கஜகேசரி யோகம் ஒருவருக்கு நல்ல எழுத்துத் திறமையை அளிக்கிறது.

8.   சில நேரங்களில் சனி – சுக்கிரன் அல்லது சனி – புதன் இணைவு எழுத்தார்வத்தைத் தருகிறது.

9.   இலக்னத்துக்கோ அல்லது சந்திராலக்னத்துக்கோ 2 அல்லது 8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க ஜாதகரை கவிஞன் ஆக்கிவிடுகிறதுஎனினும்  9 ஆம் இடம் மற்றும் 9 ஆம் அதிபதி ஆகியோர் பலமானவராக இருக்க வேண்டும்.

10.  சனி ஆத்மகாரகன் ஆகி இலக்னத்துக்கு10 ஆம் இடத்தில் இருக்க சீரிய மற்றும் உயரிய எண்ணங்களைக் கொண்ட எழுத்தாளர் ஆவார்.

11.  ஆம் இடத்துக்கு 7 ஆம் இடமான உபஜெய ஸ்தானமான 11 ஆம் இடத்தில் 5 ஆம் அதிபதி இருக்க மிகப் பெரிய இராஜயோகத்தைத் தருகிறதுஇது முன்னேற்றத்தையும்,வளர்ச்சியையும் தருகிறதுஇதன் காரணமாக ஜாதகர் திறமைமிக்க நூலாசிரியர் ஆவதோடு,குழந்தைகளும் சிறப்பாக வளருகின்றனர்ஜாதகர் தனது நுண்அறிவு மூலமாக நல்ல சம்பாத்தியத்தையும் பெறுவார்.

12.  இலக்னத்துக்கோ அல்லது சந்திரா லக்னத்துக்கோ 4 மற்றும் 10 ஆம் இடங்களில் எந்தவொரு கிரகமும் இல்லை எனில் இளமைக்காலத்தில் வெற்றிகள் வந்து சேராது.

13.  ஆம் அதிபதிஆத்ம காரகனாகி அவருடன் சுக்கிரன் அல்லது குரு அல்லது சந்திரன் தொடர்புறஜாதகர் எல்லோராலும் விரும்பப்படுகிற மிகச் சிறந்த எழுத்தாளர் ஆகிறார்இனி சில எழுத்தாளர்கள்கவிஞர்களின் ஜாதகத்தினை அலசுவோம்.

இரவீந்திர நாத் தாகூர் – இவர் கல்கத்தாவில் 7 – 5 – 1861 அன்று 2 - 51  மணிக்குப் பிறந்தார்.

லக்///
சந்
புத,சுக்
சூரி

செவ்
கேது

லக்///


புத



இராசி
குரு
குரு


நவாம்சம்
சனி

சனி
சந்

இராகு




இராகு
சூரி
செவ்
சுக்


       தாகூர் ஒரு நுண்கலைகளின் ஆலமரமாக விளங்கினார்உச்ச குரு அவரை ஒரு மிகப் பெரிய அறிவாளி ஆக்கியதுஇலக்னத்தில் சந்திரன் மற்றும் இரண்டாமிடத்தில் புதன் – சுக்கிரன் ஆகியோர் இருப்பது சரஸ்வதி யோகத்தை அளித்ததுஇவர்கள் மூவரின் தாக்கமும் அவரை ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர் ஆக்கியதுஇரண்டாம் அதிபதி செவ்வாய் மூன்றிலும்மூன்றாம் அதிபதி சுக்கிரன் மற்றும் நான்காம் அதிபதி புதன் ஆகியோர் இரண்டிலும்அறிவுக்கு அதிபதியான 5 ம் அதிபதி சந்திரன் இலக்னத்திலும் மற்றும் இலக்னாதிபதி 5 ஆம் இடத்திலுமாகஅவரை அனைத்திலும் திறமைமிக்க மற்றும் மேதாவிலாசம் மிக்கக் கலைஞர் ஆக்கியது.

       மேஷத்தில் உள்ள புதன் மற்றும் சூரியன் அவருக்கு இசைநடனம்நாடகம் மற்றும் எழுத்தாற்றல் ஆகியவற்றைத் தந்ததுரிஷபத்தில் உள்ள செவ்வாய் ஒருவரை இசைக் கலைஞர் ஆக்குகிறதுமீனத்தில் உள்ள சந்திரன்  ஒருவரை சிற்பிபாடகர் மற்றும் பல சாத்திரங்களிலும் சிறந்தவர் ஆக்கியது. இலக்னத்தின் மீதான குருவின் பார்வை அவருக்கு மிக்க புகழினைத் தந்தது.கடகத்தில் உள்ள குரு. இலக்கிய ராட்சதனாக, கவிஞனாக மற்றும் மேதை ஆக்கியது. மிக உயரிய கௌரவத்தை, மதிப்பை, மரியாதையை மேஷ சுக்கிரன் தந்தது. 9 ஆம் அதிபதியின், பத்தாம் இடம் மற்றும் அதிலுள்ள இராகுவின் மீதான பார்வை இராஜயோகத்தைத் தந்தது.

       பத்தாம் அதிபதிக்குப் பத்தாம் வீட்டில் சுபர்கள் இடம் பெற ஜாதகர் இந்த பூமியில் உள்ளவர்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே படைக்கப்பட்டவர் ஆகிறார்இவர் தனது கீதாஞ்சலி என்ற நூலுக்குஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

மகாகவி பாரதியார். --- இவர் 11 – 12 – 1882 அன்று இரவு 9 – 30 மணிக்கு எட்டயபுரத்தில் பிறந்தார்.

       இவரது ஜாதகத்தில் இலக்னாதிபதி 6 ஆம் வீட்டில் இருப்பது சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுத்தது. 2 ஆம் அதிபதி 5 இல் இருப்பது மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமுடையவர் ஆக்கியதுதியாககுணம் கொண்டவராய் இருந்தார்,       3 ஆம் அதிபதி 5 இல் இருப்பது கடவுள் பக்தியையும்இரக்க குணத்தையும் தந்தது.   4 மற்றும் 5 ஆம் அதிபதிகள் 5 இல் இருப்பது  புகழ்மிக்க கவிஞர் ஆக்கியது. 6 ஆம் அதிபதி 12 இல் இருப்பது இவரை அலைந்துதிரியவைத்துஇராஜ தண்டனையும் தந்தது. 10 ஆம் அதிபதி 5 இல் இருப்பது ஒரு நல்ல ஆசிரியராக ஆக்கியது. 11 ஆம் அதிபதி 5 இல் இருப்பது அற்ப ஆயுளைத் தந்ததுசெவ்வாய்புதன்சுக்கிரன் இணைவு ஜாதிமதபேதம் அற்ற மனிதராகத் திகழ வைத்தது.


சனி()
கேது

குரு
()

செவ்
சூரி


இராகு
சந்



இராசி
லக்///



நவாம்சம்







சந்.
சூரி,புத செவ்
சுக் ()
இராகு

கேது,லக்//
சனி,சுக்
() ()
குரு
()




       சூரியன் மூன்றில் இருப்பது இவருக்குக் கூர்மதியையும்மேதாவித் தனத்தையும் தந்தது. 6 இல் உள்ள சந்திரனால் அரச சபையில் அரசரால் கௌரவிக்கப்பட்டார் மற்றும் எதிரிகளையும் அதிகம் தந்தார்செவ்வாய் 5 இல் இடம்பெற நல்ல பாண்டித்யம் பெற்றார்புதன் 5 இல் அமரஉண்மையாய் நடந்தார்பன்மொழிப் புலமை பெற்றார்இலக்கியம்கவிதை மற்றும் எழுத்தால் புகழ் பெற்றார்குரு 12இல் இடம்பெற பக்தி மிக்கவராகவும்சாத்திரம் கற்றவராகவும்அச்சமில்லை என்று பாடி அச்சமற்றவராகவும்மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்த கவிதையால் நாட்டுக்குச் சேவை செய்பவராகவும் ஆனார்இறவாப் புகழும் பெற்றார்சுக்கிரன் 5 இல் இடம் பெற நல்ல சொற்பொழிவாளர் ஆனார்சனி 10 இல் அமர தைரியம் மிக்கவராகவும்தலைமைக்கு தகுதி படைத்தவராகவும்நல்ல ஆசிரியராகவும் ஆனார்.

       2 ஆம் அதிபதி மற்றும் 5 ஆம் அதிபதி இருவரும் இணைந்து 5 இல் இடம்பெற மிகப் பெரிய தேசியக் கவிஞர் ஆனார். 5 ஆம் அதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் குரு உள்ளார்எனவேசிறந்த எழுத்தாளர் ஆனார்குருவின் மீது சனியின் 3 ஆம் பார்வை விழுவதால் நல்ல நூலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆனார். சனி ஆத்மகாரகனாகி 10 ஆம் வீட்டில் இருப்பதால் சீரிய சிந்தனை உடையவராக இருந்தார்சந்திரனுக்கு 4 மற்றும் 10 ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லாத நிலையில் இளமையில் அவர் வெற்றி அடையமுடியவில்லை.

No comments:

Post a Comment