Thursday, July 17, 2014





கிரக நிலைகளும் நில அதிர்வுகளும்


      ஜோதிட ரீதியாக, பூகம்பங்கள் எப்போது ஏற்படுகின்றன என்பதை ஓரளவு துல்லியமாகக் கணக்கிடலாம். ஆனால் பூகம்பத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது. அதற்கான அறிகுறிகளை முன்னரே கண்டறிந்து, மனித உயிர்களைப் பாதுகாப்பான வேறு அச்சமில்லாத இடத்திற்கு இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் காப்பாற்றலாம். மேலும், அடிக்கடி பூமி அதிர்ச்சிக்கு உட்படும் நகரங்களில். கட்டிடக் கலைகளில், பூகம்பத்தைத் தாங்கக் கூடிய அளவுக்குக் கட்டிடங்களில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
    இத்தகைய கட்டுமானங்கள், நில அதிர்வுகளைத் தாங்கி இடிபாடுகள் அடையாமல் இருக்க பலமாகக் கட்டிடங்களைக் கட்டிப் பாதுகாக்கலாம். உதாரணமாக, சிலி நாட்டில் ஐந்து முறைகள் பூகம்பம் ஏற்பட்டு நகரத்தையே புரட்டிப் போட்டுவிட்ட போது, அங்குள்ள கட்டிட வல்லுநர்கள் பொறுமையாகவும், அந்த மிகப் பெரிய வலிகளை எல்லாம் தாங்கிக் கொண்டும், தங்கள் அறிவையும், முழுத் திறனையும் பயன்படுத்தி, அதிர்ச்சிகளைத் தாங்கக் கூடிய தரமான, பலம் மிக்க பொருட்களைக் கொண்டு கட்டிடங்களைக் கட்டி, நகரையே புனர் நிர்மாணம் செய்தனர்.
    1939 ஆம் வருடத்தில் அங்கு ஏற்பட்ட மிகப் பெரிய நில நடுக்கத்துக்குப் பிறகுதான், இந்த அதர்ச்சியையும் தாங்கக்கூடிய, கட்டிடக் கலையின் சிறப்பு அம்சங்களைப் புகுத்தித் தரமானதாகக் கட்ட வேண்டியதாயிற்று. அவ்வாறு இந்தக் கட்டிட வல்லுநர்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள், 1960 ஆம் ஆண்டு மீண்டும் ஐந்து முறைகள் நில அதிர்வு ஏற்பட்ட போது, எவ்வித சேதமும் இன்றிக் கட்டிடங்கள் தலை நிமிர்ந்து நின்றன. இதற்குக் காரணமான கட்டிட வல்லுநர்கள் மக்களின் நம்பிக்கைக்கும், நன்றிக்கும் உரியவர்கள் ஆனார்கள்.
     ஆனால், அமெரிக்காவின் அலாஸ்க்காவில், நில அதிர்வு ஏற்பட்ட போது, அவர்கள் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், கட்டிடக் கலைகளில் எந்தவித நிபுணத்துவத்தையும் பின்பற்றாமல் இருந்த காரணத்தால் 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில், இவர்களின் அலட்சியம் மற்றும் வருமுன் காக்காத நிலை காரணமாகஙும் மக்கள் பல சேதங்களுக்கு மற்றும் இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டது.
     அதுவே, ஜப்பானிய கட்டிட வல்லுநர்கள், இத்தகைய சூழ்நிலைகளை அலட்சியப்படுத்தாமல், நல்லவிதமாக, பலமான அமைப்புக்களை உடைய கட்டிடங்களைக் கட்டி, டோக்கியோ நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இருந்து மக்களைக் காத்தனர்.
     பராசர முனிவர், ஓளிக் கிரகங்களான, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரின் கிரகண காலங்களில், கிரகங்களின் இயற்கைக்கு மாறான நிகழ்வுகளாலும், வான் மண்டலத்தில் உள்ள இதர பொருட்களின் சிறப்பான அசைவுகளாலும், நில அதிர்வுகள் ஏற்படுகின்றன, என்று குறிப்பிடுகிறார். கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரும் போதும், கிரகண காலங்களிலும் மற்றும் முக்கிய கிரக தத்துவங்களாலும் பூகம்பம் ஏற்படுகிறதுஎன்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
     பூகம்பத்திற்கான முக்கிய காரணிகள் ;
1.   () முக்கிய கிரகங்களான செவ்வாய், குரு மற்றும் சனியின் இணைவு மற்றும் பார்வையும் முக்கியமாகிறது.
(). கிரகம் வக்கிர அல்லது நேர்கதியில் இருக்க வேண்டும்.
   2. சூரிய, சந்திர கிரகணங்களின் போதும்.
   3. அமாவாசை மற்றும் பௌர்ணமிக் காலங்களின் போதும், இந்த மூன்று காரணிகளில் ஒன்றோ, இரண்டோ இல்லது மூன்று நிலைகளும் ஏற்படும் போது, நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.
     பழங்காலத்தில் 6 மாதத்திற்கு ஒருமுறை ஏற்படும் பூகம்ப நிகழ்வுகள், இயற்கை நிகழ்வுகளாகக் கருதப்பட்டன. வெவ்வேறு நட்சத்திரங்களில் ஏற்படும் பூமி அதிர்ச்சியானது, அவைகளால் ஏற்படக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் அவை நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டன. அவை 1. காற்றால் 2, நெருப்பால் 3. இந்திர வட்டம் 4 வருண வட்டம்   ஆகும்.
     உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, புனர்ப் பூசம், மிருக சிரீடம் மற்றும் அஸ்வினி ஆகிய நட்சத்திரங்களில் ஏற்படும் நில அதிர்வுகளுக்குக் காற்று காரணம் ஆகிறது. இத்தகைய நில அதிர்வுகளுக்கு அறிகுறியாக பூகம்பம் ஏற்படுவதற்கு, ஒரு வாரத்துக்கு முன்னரே தூசு படலத்துடன் பலத்த காற்று வீசி, புகை மண்டலத்தை உருவாக்கும். மரங்கள் வேரோடு சாயும் அளவுக்குப் பேய்க் காற்று வீசும். சூரியனும் ஒளி மங்கிக் காட்சி அளிப்பான்,
     இதனால் ஏற்படும் விழைவுகளாவனபயிர்கள் சேதமாகும், தண்ணீர், காடு, மூலிகைச் செடிகள் அனைத்தும் அழியும். ஆஸ்துமா, தொத்து வியாதிகள், காய்ச்சல், கபத்தால் ஏற்படும்நோய்கள், வணிகர்கள், நடனக் கலைஞர்கள் ஆகியோருக்கு இன்னல்கள் ஏற்படும். இந்த வகை நில அதிர்வுகள் 200 யோஜனை தூரப் பரப்பளவுக்கு அழிவைத் தரும்என்று பண்டைய ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
     அடுத்து நெருப்பால் ஏற்படும் பூகம்பமானது பூசம், கார்த்திகை. விசாகம், பரணி, மகம், பூரம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஏற்படும். ஒரு வாரத்திற்கு முன் இதற்கான அறிகுறிகளாகநட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள் கீழே விழுதல், மேகங்களின் அழிவு, குளங்கள், ஏரிகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் வற்றிப் போதல், மக்களுக்கு மஞ்சள் காமாலை நோய், படர்தாமரை, காய்ச்சல், ஆட்சியாளர்களுக்கு இடையே குழப்பங்கள், வீரர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் ஆகியவை ஆகும். இந்த வகை பூகம்பங்கள் 110 யோஜனை தூரத்துக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
     மூன்றாவது வகையானது, இந்திர வட்டத்துக்குள் உருவாவது ஆகும். இது கீழ்க்கண்ட நட்சத்திரங்களில் ஏற்படும்திருவோணம், அவிட்டம், ரோகிணி, கேட்டை, உத்திராடம் மற்றும் அனுஷம் ஆகியவை ஆகும். நில அதிர்வு ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஏற்படும் அல்லது தோன்றும் அறிகுறிகள்மலையை ஒத்த, உருண்டு திரண்ட கரிய மேகக் கூட்டங்கள் உருவாகும், பலத்த இடி முழக்கம், பளிச்சிடும் மின்னல்கள், வண்டு இனங்களின் ரீங்கார ஒலி, பாம்புகளின் படையெடுப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்தகைய நில அதிர்வுகளினால் ஏற்படும் விழைவுகளாவனநாட்டின் பெரிய தலைவர்களின் குடும்ப அழிவும்வயிற்றுப் போக்கு, வாந்தி, தொண்டையில் வீக்கம், முகரோகங்கள் ஏற்படுதல் போன்ற நோய்களும் ஏற்படும். இந்திர வட்டம் தரும், அதிர்ச்சி மற்றும் அழிவானது 160 யோஜனை தூரத்திற்குப் பாதிப்பைத் தரும்,
    நான்காவது வகையானது வருணனின் வட்டத்தால் ஏற்படுவது ஆகும். ரேவதி, பூராடம், திருவாதிரை, ஆயில்யம், மூலம், உத்திரட்டாதி மற்றும் சதயம் ஆகிய நட்சத்திரங்களில் ஏற்படுவதாகும். ஒரு வாரத்திற்கு முன் தென்படும் அறிகுறிகளாவனநீல அல்லி மலர்கள் மற்றும் வண்டுகளைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட பெரிய மற்றும் கரிய மேகங்கள் உருவாகி அடைமழை பொழிவதும், அதன் காரணமாக சமுத்திரக்கரை மற்றும் நதிக்கரைகளில் வேலை பார்ப்பவர்கள் அல்லது அந்த சூழலையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழ்பவர்கள் அழிவைச் சந்திப்பர். இப்படிப் பேய் மழை பெய்து, அழிவைச் சந்தித்தாலும், மக்களிடையே நல்லுறவும், நட்பு நிலையும் பலப்படும் என்றும் பழம்பெரும் நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன. மேலே, பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டு உள்ள ஆளும் நட்சத்திரங்களில்தான் அதிக அளவு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன (1990 வரை) என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
    பூகம்பங்கள்மூன்று நாள், நான்கு நாள் அல்லது ஏழு நாட்கள்மாதக் கடைசி அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை எனத் திரும்பத் திரும்ப ஏற்படும் போது அது பெரிய சாம்ராஜ்யத்தையே நிலைகுலையச் செய்து விடுகிறது. அழித்துவிடுகிறது.
    பொதுவாகக் கோசாரத்தில் செவ்வாய் மற்றும் சனியின் தொடர்பே பூகம்பத்திற்கான காரணம் என்பது அறிஞர்களின் கூற்று, அதை இதற்கு முன் ஏற்பட்ட நில அதிர்வு காலத்தில் இருந்த மற்றும் தற்போது ஏற்பட்ட நில அதிர்வுகளின் போது இருந்த கிரக நிலைகளையும் ஆராய்வோம்.
    உத்திரப் பிரதேசத்தில் 1991 ஆம் ஆன்டு, அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தால், உத்திர காசி மாவட்டம், மிக மோசமான பாதிப்புக்கு உள்ளானது. அதன் அழிவு, ஷாஜஹான்பூர் வரை பரவியது. அதற்கு முக்கிய காரணிகள் ஆவன
1.   அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருந்த கிரக நிலைகள் என்ன ?
2.   சனி 5 – 10 –1991 அன்று நேர்கதிக்கு வந்தது.
3.   சனி, செவ்வாய் பார்வையால் தொடர்பு பெற்றது.
4.   7 – 10 – 1991 அன்று அமாவாசை வந்தது.
பூகம்பம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சனி, செவ்வாய்க்கு ஸ்கொயர் பார்வை ஏற்பட்டதே முக்கிய காரணமாகக் கருதப்பட்டது.




கேது

சனி
கேது

லக்///
சுக்

7 – 10 – 1991
அமாவாசை
இராசி
நியூடெல்லி




நவாம்சம்
சூரி,சந்
குரு

சனி
லக்//
சுக்,குரு

புத
இராகு

செவ்
சூரி.சந்
புதன்


செவ்
இராகு


      இந்த ஜாதகத்தில் 4 ஆம் வீடு இரண்டு அசுப கிரகங்களுக்கு இடையே பாதிப்பு அடைந்துள்ளது. 4 ஆம் அதிபதி செவ்வாய், தன் வீட்டுக்குப் 12 ஆம் இடத்தில் இருந்து சனியின் பார்வையையும் பெறுகிறார். 4 ஆம் வீட்டுக் காரகங்கள் சொத்து, வீடு, குடியிருப்புக்கள் மற்றும் அதன் அங்கத்தினர் என்பதால் இவை அனைத்தும் பாதிப்பு அடைகிறது. அதேபோல் 8 ஆம் வீடு பேரழிவு மற்றும் இயற்கைச் சீற்றங்களைக் குறிப்பது ஆகும்.
     அந்த காலகட்டத்தில் 7 – 10 –1991 முதல் 6 – 11 – 1991 வரை கிரக நிலைகள் ஊறு விழைவிக்கக் கூடியதாகவும், சேதம் ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தன.
     16 – 4 – 2013 அன்று ஈரான்பாக்கிஸ்தான் எல்லை, டெல்லி, குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது இருந்த அன்றைய கிரக நிலைகளே காரணமாயிற்று.
1.   (). முக்கிய கிரகங்களான செவ்வாய், குரு மற்றும் சனியின் இணைவு மற்றும் பார்வையும் முக்கியமாகிறது என்றபடி
கிரக நிலையில் செவ்வாயின் 8 ஆம் பார்வை சனியின் மீது உள்ளது.
11 – 4 – 2013 முதல் செவ்வாய், சனி பரஸ்பர பார்வை உள்ளது.
(). கிரக வக்கிரம் அல்லது நேர்கதியில் இருக்க வேண்டும். சனி வக்கிரம்.
   2. சூரிய, சந்திர கிரகணங்களின் போதும் என்றபடி – 25 – 4 – 2013 அன்று சந்திர     கிரகணமாகும்.
   3. அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களின் போதும். இந்த மூன்று காரணிகளில் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்று நிலைகளும் ஏற்படும் போது நில அதிர்வுகள் ஏற்படுகின்றன.

புதன்
சூரி,செவ்
சுக்.கேது
லக்//
குரு
சந்


16 – 4 -- 2013
இராசி





சனி
இராகு


     இதன்படி 9 – 4 – 2013 அன்று அமாவாசை நாளாகும். 25 – 4 – 2013 அன்று பௌர்ணமி ஆகும்.

சூரி,செவ்
சுக்,சந்
கேது
குரு


செவ்
சுக்

இராகு
குரு
புதன்
புதன்
9 – 4 – 2013
அமாவாசை
இராசி
நியூடெல்லி

சூரி
சனி


நவாம்சம்



லக்//





சனி
இராகு

லக்///
கேது
சந்



     9 – 4 – 2013 முதல்  25 – 4 – 2013 வரை முன்னர் குறிப்பிட்டபடி ஊறு விழைவிக்கக் கூடிய மற்றும் சேதம் ஏற்படுத்தக் கூடிய கிரக நிலைகளே உள்ளன.   4 ஆம் இடத்தின் மீதான குருவின் பார்வையால் இழப்பு அதிகம் ஏற்படாத, நில அதிர்வானது எனலாம்.

     

1 comment:

  1. excellent one and expecting more. Thanks. Janarthanan.9884709579

    ReplyDelete