Tuesday, November 25, 2014

உங்கள் நட்சத்திர பலன்கள். 23 – 11 – 2014 முதல் 29 -11 – 2014 வரை


  1. ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
    உங்கள் நட்சத்திர பலன்கள்.
    23 – 11 – 2014 முதல் 29 -11 – 2014 வரை
    ஜோதிட ப்ரவீணா
    எட்டயபுரம்எஸ்விஐயநரசிம்மன்.

    மேஷம்

     (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)

    அஸ்வினி --

           இந்த வாரம் தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்கற்பனை வளம் பெருகும்.பிரயாணத்தில் மகிழ்ச்சி நிலவும்தாயார் மூலமான ஆதாயங்கள் பெருகும்.  நல்ல தகவல்கள் வந்து சந்தோஷம் தரும்மேலதிகாரிகள் உங்கள் சிறந்த பணி கண்டு மகிழ்வதோடு பாராட்டும் அளிப்பர்.  சிலர் பக்தி சொற்பொழிவு கேட்டு ஞானத்தன்மை பெறுவர்எதிர்பாராத தனவரவு கிடைக்கும்காரியத் தடைகளும்சுறுசுறுப்பு இல்லாத நிலை உருவாகும்.  வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும்நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர் அனுசரணை இருக்கும்அரசு வகையில் ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். வீட்டு உபயோகப் பொருட்கள் சம்பந்தமான வியாபாரம் சூடுபிடிக்கும்.

    பரணி  --

           இந்த வாரம் உறவுகளின் உதவியால் உயர்வு ஏற்படும்புதிய தொழில் விரிவாக்கத் திட்டங்களை செயலாக்க உகந்த வாரமாக அமையும்அதன் காரணமாக ஏற்படும் இலாபத்தால் வருமானம் கூடும்.வாக்கு வன்மை காரணமாகமேடைப் பேச்சுசாஸ்திர சர்ச்சை போன்றவற்றால் ஏற்படும் வருமானத்தோடுதங்கள் புகழும் அதிகரிக்கும்எந்த ஒரு போட்டி பந்தயங்களில் நீங்கள்  கலந்து கொண்டாலும் வெற்றி உங்களுக்கேபுத்தகப் பதிப்புவெளியீடு ஆகிய தொழில்கள் அமோகமான இலாபத்தோடு இயங்கும்பெண்களால் அனுகூலமான உதவிகள் கிடைக்கும்சிலருக்கு தேவையற்ற வீண் அலைச்சல்கள் ஏற்படுவதோடுதொழிலில் பண முடக்கங்களும் ஏற்படலாம்

    கார்த்திகை  1 ஆம் பாதம்.—

           இந்த வாரம் தொலைதூரச் சுபச் செய்திகள் கேட்டு மனம் மகிழும்வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன்கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்வீர்கள்பலரும் வியக்கும் வண்ணம் பல சாதனைகளைப் புரிந்து பாராட்டுப் பெறுவீர்கள்கூட்டாளிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுடனான  புதிய வியாபார தொடர்புகள் ஏற்பட்டு முன்னேற்றத்துக்கான வழி பிறப்பதோடுஅது சம்பந்தமான பயணங்களும் வெற்றிகரமாக அமைந்து மகிழ்ச்சி தரும்.  தான தருமங்கள் மற்றும் தெய்வ வழிபாடு ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களைத் தவிர்த்து முன்னேற்றம் அடைய முற்படுவது நல்லது.மனைவியை மனதாரப் பாராட்டிஅமைதியாக இருந்தால் ஆனந்தம் பெருகும்.

    ரிஷபம்

    கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

    கார்த்திகை 2,3,4 பாதங்கள் –

           இந்த வாரம் பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்சிலருக்கு வீடுதொழில் அல்லது இடமாற்றம் ஏற்படலாம்வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெற்று எதிர்பார்ப்புக்கு மேலான விற்பனையால் இலாபத்தை அள்ளுவார்கள்வீட்டில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்புடன் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற நடக்கும்தொழிலில் நவீன உபகரணங்கள் நிறுவுவது போன்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும்சிலருக்கு சோம்பல் கூடி,மனோபயமும் அதிகரிப்பதால் தங்கள் பணிகளைச் சரிவரச் செய்யாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர்பெண்களுக்கு ஏற்படும் அழகிய ஆடை ஆபரண சேர்க்கை காரணமாக அகமகிழ்வர்.

    ரோகிணி  –

           இந்த வாரம் ஆரம்ப நாளில் தீயோர் சேர்க்கை ஏற்படலாம்பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும்பின்வரும் நாட்களில் பல முகாந்திரங்களிலும் எதிர்பாராத தனவரவு உண்டு.ஞானிகள் மற்றும்  பெரியோர்களின் சந்திப்பு மற்றும் ஆசியால் மனஅமைதியும்சந்தோஷமும் பெருகும்மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சினிமாடிராமா என கேளிக்கைகளில்நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் ஈடுபட்டு மகிழ்வீர்கள்தொழிலாளர்களின் கடமையுணர்வு மிக்கக் கடினமான பணி ஒத்துழைப்பால் புதிய தயாரிப்புக்களின் அளவு அதிகரித்து இலாபங்களும் அதிகரிக்கும்சிலருக்கு எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்உங்கள் கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும்.

    மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் –

                 இந்த வாரம் தந்தைவழி உறவுகளால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம்சிலருக்கு வீடு மாற்றம்தொழில் மாற்றம் அல்லது நினைத்த இடத்திற்கு  இடமாற்றம் ஆகியவை ஏற்படலாம்.தொழில் ஆர்வம் கூடுவதால் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு மேல் உற்பத்தியைப் பெருக்கி இலாபத்தையும் பெருக்குவர்.  பெற்றோருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.  அனைத்துக் காரியங்களிலும் பிறரின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை எழலாம்.  வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை ஓரு சில நாட்களுக்குத் தள்ளிப் போடுவது நல்லதுதிடீர் தனலாபங்களை எதிர்பார்க்கலாம்சிலர்தூய ஆடைகள் அணிந்து மிடுக்காகநற்காரியங்கள் செய்து நல்லவர் என அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவர்.

    மிதுனம்

    (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்திருவாதிரை-1,2,3,4 பாதங்கள்புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

    மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –

           இந்த வாரம் சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வர்அனைத்து விஷயங்களிலும் அரசு மூலமாக எதிர்பார்த்த ஆதாயங்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் எளிதாகக் கிடைக்கும்பணிபுரியும் இடத்தில் கடமையுணர்வுடன் கூடிய செயல்பாட்டால் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு பெற முற்படுவீர்கள்அந்த முயற்சியும் வெற்றிகரமாக நிறைவேறும்.  நண்பர்கள் உங்கள் நன்மை கருதி எதையும் செய்யத் துணிவர்மாணவர்களின் கடின உழைப்பின் காரணமாகப் படிப்பில் ஏற்படும் ஆர்வம் காரணமாக நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியரின் பாராட்டுதல்களைப் பெறுவர் தொழிலில் உங்கள் அசாத்தியத் திறமைகளை வெளிக்காட்டுவதின் மூலமாக ஆதாயங்கள் பல அடைவீர்கள்.  நல்ல சேதிகள் நாடிவரும்.

    திருவாதிரை ---

                 இந்த வாரம்  நீங்கள் மிகவும் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும்அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான  தகவல்கள் வந்து சேரும்வாரத்தின்முதல்நாள் பயணத்தில் துன்பமும்பின்னர் வரும் நாட்களில் கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி,  அரசு வகைத் தொல்லை,  ஆகியவை ஏற்படலாம்எனவே இன்பம் வரும் போது மகிழ்ச்சியில் பொங்குவதும்துன்பம் வரும் போது துவண்டுவிடாமல் மீண்டு எழுந்தால்  துன்பமும் இன்பமாகும்தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்அதன் காரணமாக அதிகம் உழைப்பீர்கள்.அரசியலில் உள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ஓங்கும்அறிவுத்திறனும் கூடும்.பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது



    புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்

          இந்த வாரம் புதிய நண்பர்களின் உதவியால் நல்லதே நடக்கும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டுசிலருக்குப்  பிரிவும்பகையும் ஏற்படலாம்.  தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்சிலருக்குப் பணியில் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும்புதிய வாகனயோகம் ஏற்படலாம்வியாபார நிமித்தமாக ஏற்படும் வெளிநாட்டுப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்தந்தையால் நன்மைகள் பல ஏற்படும்.மகான்களின் தரிசனம் கிட்டும்தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கான புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் போது அரசின் மூலமாக அனுகூலமும்ஆதாயம் பெறுவீர்கள்அதன் காரணமாக தங்கள் செல்வ நிலையும் உயரும்அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும்பொறுப்பும் கிடைக்கும்.

    கடகம்

    (புனர்பூசம்- 4 ஆம் பாதம்பூசம்-1,2,3,4 பாதங்கள்ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

    புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

           இந்த வாரம் திருமணம் ஆகாத பெண்களுக்குத் நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும்.மாணவர்களுக்கு வாகன வசதியும்நற்கல்வியும் கிடைக்கும்சிலருக்குக் கடமையுணர்வுடன் அவர்கள் செய்த சீரிய பணிக்காக அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வியாபாரம் மற்றும் தொழிலில் வாக்கு வன்மையால் வருமானம் பெருகும்.    சிலருக்கு வீடுமனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.  குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவைவியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாதுவிவசாயத்தில்விளைச்சல்கள் அதிகரித்து எதிர்பார்த்ததை விட இலாபம் காணலாம்.

    பூசம் --   
     
           இந்த வாரம்  மிகச் சிறப்பானதாக அமையும்எதிர்பாராத இனிய விருந்துகள்மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஏற்படும்நீங்கள் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும்பிறருக்கு உதவுவதற்கும்தரும காரியங்களுக்கும் முழு மனதோடு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.அரசுப் பணியாளர்கள்  அரசாங்கத்திடம் பணி சம்பந்தமாக வைத்த  கோரிக்கைகள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறும்நல்லோர் சேர்க்கையால் நல்லதே நடக்கும்.  மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல  தேர்ச்சி ஏற்படும்சிலருக்கு உழைப்புக் குறைவானாலும்  ஆதாயம் அதிகரிக்கும்.மேலதிகாரிகளின் ஆதரவால் சிலர் மேன்மை அடைவீர்கள்எப்போதாவது வரும் கோபத்தை அடக்குவது நல்லதுசிலருக்குத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும்.

    ஆயில்யம் –
           இந்த வாரம் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடி நடக்கும்  அனுகூலமான வாரமாக அமையும்.  வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான சுபச் செலவுகள் ஏற்பட்டு அதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி நிறைந்த நிலை உருவாகும்.  புதுப்புது தொழில் முயற்சிகளில் இலாபம் ஏற்பட்டு செல்வ நிலை உயரும்வியாபாரிகள் வாடிக்கையாளரிடம் மிகுந்த நட்புப் பாராட்டித் தங்கள் வாக்குவன்மையால் அதிக இலாபம் சம்பாதிப்பர்.  அழகியபுதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழ்வீர்கள்பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும்துணிவுடன்  எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  சிலருக்கு அவ்வப்போது சிறு காரியத்தடைகள் ஏற்படலாம்.தூக்கமின்மையால்சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். 

இந்த வார நட்சத்திர பலன் 23/11/2014 ------- 29/11/2014 சிம்மம்




இந்த வார நட்சத்திர பலன்

23/11/2014 ------- 29/11/2014

சிம்மம்

மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் –

       இந்த வாரம் உங்களுக்கு அனுகூலங்கள் மிக்க வாரம்மனைவி மற்றும் குழந்தைகளின் அன்பால்  மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்பெரியோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்அதன் காரணமாக உங்கள் பலநாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்தொழில் அபிவிருத்திக்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்அதற்குத் தேவைப்படும் அரசு உதவிகள் மற்றும் வங்கிக்கடன்கள் அனைத்தும் கிடைக்க நல்ல வழி பிறக்கும்.  வீட்டுக்குத் தேவை என்று விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்புதிய ஆடை ஆபரண சேர்க்கைபுத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும்புத்தகப் பதிப்பு மற்றும் வெளியீடு சம்பந்தமான தொழில்கள் எதிர்பார்த்தபடி ஆதாயம் அளிக்கும்.  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சிதெய்வ சிந்தனை ஆகியவை ஏற்படும்.

பூரம் –

       இந்த வாரம் உங்களுக்குத் திடீரென ஏற்படும்பயணங்களால் பணமுடை ஏற்படும்.அரசுப் பெண் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி இடமாறுதல்களும்தலைமைப் பதவிகளும் தேடி வரும்.அன்பால் அனைவரையும் வெல்லலாம்ஆனால் வீண் கோபத்தால் விவேகத்தை இழக்காதீர்கள்.  தங்கள் சிறப்பானகடமையுணர்வுடன் கூடிய திறமைமிக்க பணிஉயர்அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு,பாராட்டும் பெறும்.  வாக்குவன்மையால் மேடைப் பேச்சாளர்கள் ஆற்றும் சிறப்பானபொருள் பொதிந்த சொற்பொழிவுகள் அனைவரின் பாராட்டையும் பெற்று அதன் காரணமாக அவர்களின் புகழ் ஓங்கி,மதிப்பும்மரியாதையும் கூடும்.  மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடுமனதில் அமைதியும் நிலவும்வியாபாரிகளுக்குப் புதிய முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.

உத்திரம்- பாதம் –

       இந்த வாரம் உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  புத்திர பாக்கியம் ஏற்படும்புதிய தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலான தனவரவு ஏற்படும்.. உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லதுமாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும்தெய்வ சிந்தனையாலும், தரும சிந்தனையாலும்  மனதில் அமைதி நிலவும்வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புக்கள் அரசின் அனுகூலத்தால் பெருகும்.உடன் பணிபுரியும் பணியாளர்களின் பொறுப்பு மிக்க பணியால் உற்பத்தி பெருகி இலாபமும் பெருகும்.பங்குச் சந்தை மூலமாகப் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும்ஊக்கமும் ஏற்படும்சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடுதேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும்.


கன்னி

உத்திரம் – 2, 3, 4-பாதங்கள்ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள்சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

       இந்த வாரம் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஏற்றமிகு வாரம்சிலருக்குப் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும்திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும்சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம்எதிர்பாராத தனவரவால் மனம் மகிழும்.  போட்டிபொறாமைகளை அகற்றி தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் முன்னேற்றங்கள் சுலபமாகும்சிலர் பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்கள் வாங்க முயல்வீர்கள்உயர் அதிகாரிகளின் உந்துதலால் ஏற்படும்இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும்புதிய வியாபாரத் திட்டங்கள்  வெற்றி பெறுவதோடுநல்ல காலமும் கனிந்து வரும்அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்
ஹஸ்தம் –

       இந்த வாரம் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம்அதன் காரணமாக வங்கி சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் கையிருப்புப் பணம் அதிகரிக்கும்பங்குச் சந்தை ஈடுபாடு இலாபம் தரும்பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவைபுத்திர பாக்கியம்சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்புதிய விரிவாக்கத் திட்டங்களால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவும்புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும்.

சித்திரை – 1,2 பாதங்கள் –

       இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும்கடமை உணர்வோடு செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும்பெரிய மனிதர்களின் மற்றும் பண்பு மிக்கவர்களின் நட்பால் பெருமை சேரும்மற்றவர்களைக் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள்.உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும்தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும்கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்சிலருக்கு வீண்பேச்சுவீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும்மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள்.அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.  எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும்.

துலாம்

சித்திரை-3,4 பாதங்கள்சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் –

       இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும்தீவிரமான உழைப்பின் காரணமாகத் திட்டமிட்டபடி  உங்கள் பணியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எளிதில் அடைவீர்கள்அதன் காரணமாக உங்கள் சீரிய பணி மற்றவர்களின் பாராட்டைப் பெறும் என்றால் மிகையாகாதுசிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் விதத்தில் அதிகாரம் மிக்க அரசு உயர்பதவி கிடைக்கலாம்புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கும்.  மாணவர்கள் தங்கள் உன்னத கிரகிப்புத் தன்மையாலும்,நினைவாற்றலாலும் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர்விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் வாக்கு வன்மையால் இலக்கை எட்டிநிர்வாகத்தின் வருமானத்தைப் பெருக்கிப் பாரட்டுதல்களைப் பெறுவர்குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

சுவாதி 

       இந்த வாரம் பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் சம்பள உயர்வு கிடைக்கவாய்ப்பு ஏற்படும்பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும்பழைய கடன்கள் விரைவில் வசூலாவதும் அதற்குக் காரணமாக அமையும்நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் உங்கள் மனம் மகிழும்உடன்பிறப்புக்களின் உபகாரமற்ற நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும்ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களுடன் சமாதானமாகப் போவது நல்லதுமாணவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்பெண்களால் இலாபம் ஏற்படும்வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த இலக்கினை எட்டிவிடுவீர்கள்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் –

       இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்பட்டு அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்.மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும்வேலையில் இருப்பவர்களுக்குப் பணி உயர்வுக்கான ஆணை தேடி வரலாம்வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்குமாதலால் எவ்வித விசனமும் இன்றி மகிழ்ச்சியுடன் காணப்படுவர்குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும்தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்பெண்களுக்குப் பணியிடத்தில் மற்றவர்களின் பூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும்.

.விருச்சிகம்

விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்ஆம் பாதம் –

       இந்த வாரம் செலவுகள் அதிகமாகும்ஆதலால் பணமுடையும் இருக்கும்.  வேலையில் அதிக சிரத்தையும்கடின உழைப்புமே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும்உறவுகள்நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாதுஎடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும்.நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதுஇழப்பைத் தவிர்க்கும்.திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும்.அவசியமற்றஅலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும்அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும்பிள்ளைகளுக்கு நல்ல உயர்வான முன்னேற்றங்கள் ஏற்படும்.

அனுஷம் –

       இந்த வாரம் சுக சௌகரியங்கள் சேரும்.  வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் எதிர்பார்த்தபடி தனலாபங்கள் அதிகரிக்கும்வீட்டில் அமைதியும்நிம்மதியும் நிலவும்.  புதுத்தெம்பும்,உற்சாகமும் கூடும்வாகன வசதிகள் மேம்படும்.  சிலருக்கு உயர்அதிகாரப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து சேரும்மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது.வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைக்க வேண்டியது வரும்.விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டுஇலாபத்தால் வசதிகள் பெருகும்பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்துமுன்னேற்றம் ஏற்படும்.

கேட்டை 

       இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.  தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர்அதன் காரணமாக உற்பத்தி அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவது நல்லதுநன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதுஇழப்பைத் தவிர்க்கும்தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.





இந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014-- தினபூமியல்....

இந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014



தனுசு

மூலம்-1,2,3,4 பாதங்கள்பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் –

          இந்த வாரம் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்  தொழிலாளர்களுக்கு உழைப்பு அதிகமாகிஅதற்கேற்ற இலாபமோபலனோ கிடைக்காதுசிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லதுஉங்களின் செயல்திறன் அதிகரிகரித்துச் செல்வாக்கும் பெருகும்புதுத்தெம்பும்உற்சாகமும் கூடும்வாகன வசதிகள் மேம்படும்அந்தஸ்து உயரும்சிலருக்கு அதிகாரமுள்ள உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

பூராடம் 

       இந்த வாரம் நீண்ட கால உழைப்பின் காரணமாகச் சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்.பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும்நல்ல பண்பாளர்களின் நட்பும்அன்பும் கிடைக்கும்.மனதில் தெய்வ பக்தி கூடும்நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும்.நல்ஆரோக்கியமும்புதுத் தெம்பும்புத்தொளியும் ஏற்படும்விபத்தைத் தவிர்க்க பயணங்களில் எச்சரிக்கை தேவைதாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம்எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல்செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.

உத்திராடம் –1 ஆம் பாதம் –

              இந்த வாரம் எதிர்பார்த்தபடி பண வருவாய் அதிகரிக்கும்வியாபாரிகளுக்கும் தாங்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.  உறவுகள்நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும்ஆனால்தொழில் விஷயமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய அதிகாரிகளின் தயவு தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.


மகரம்

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---

       இந்த வாரம் பல வழிகளிலும் தனவருமானம் கூடுதலாக இருக்கும்மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தங்கள் அனுசரணையால் சீர்படும்.  சிறந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் தீட்டப்படும் புதிய திட்டங்கள் அரசின் உதவியோடு சிறப்பாக முடிக்கப்படும்அன்பான உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல்அதிகச் செலவுகளும் ஏற்படும்அதன் காரணமாகப் புதிய கடன்களும் ஏற்படும்.  உங்களின் சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்நண்பர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நட்பை பலப்படுத்தும்.பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லதுஉங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

திருவோணம்-

       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம்பக்தி மிக்க புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.வாழ்க்கையில்மேம்படும் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.குடும்பத்தாரும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் மகிழ்ச்சியோடு இருப்பர்அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடுவதால்செயல் திறனும் கூடிஅதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்பூமிவீடு ஆகியவற்றின் மூலம் ஆதாயங்கள்  ஏற்படும் பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும்மதிப்புகௌரவம் உயரும்சோம்பேறித்தனம் அதிகரிக்கும்பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும்அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் –

       இந்த வாரம் உங்கள் மூலதனத்தைக் கொண்டு  புதிய முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த முற்படுவீர்கள்நீண்ட நாட்களாக வருவார்கள் என எதிர்பார்த்த நெருங்கிய  உறவுகளின்  வரவு மகிழ்வைத் தரும்நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும்வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காதுபெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்கள் திறமைகளை நிலைநாட்டிப் புகழ் பெறுவதோடுஅதிகாரிகளின் பாராட்டையும் பெறுவர்.மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும்வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும்.

கும்பம்

அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்

       இந்த வாரம்  தாராளமான தனவரவு இருக்கும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்உயர் அதிகாரிகளிடம் பணிவுடன்  நடப்பது பதவி உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும்.  வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசப் பரிசுகள் கொடுத்து வியாபாரத்தை மேலும் பெருக்கிக் கொள்வர்நெடுநாளாகப் பிரிந்த தம்பதிகள் இணைந்து மகிழ்வர்பரம எதிரிகளின் திட்டங்களை,திறமையாக மற்றும் சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள்குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும்புத்திரர்களால் ஜெயமுண்டுநவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புதுத் தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்துஅதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.

சதயம்-

       இந்த வாரம் உங்கள் பணவரவு அதிகரிக்கும்செல்வநிலை உயரும்.  புதிய முதலீட்டுத் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்நீண்ட நாட்களாக வராத விருந்தினர்கள்  வந்து விருந்தாடி  மகிழ்வைத் தருவர்நெருங்கிய நண்பர்களின் உதவியால் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் சிறப்பாக நடக்கும்சுற்றுலாப் பயணங்கள் இனிமை தரும்சினிமா,டிராமா எனப் பொழுதுபோக்குகளில் குடும்பத்தோடு ஈடுபட்டு மகிழ்வீர்கள்வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காதுமாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும்.வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –

       இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து எதிர்பார்த்தபடி பணவரவு ஏற்பட்டு மனம் மகிழும்அரசுப் பணி புரிபவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு காரணமாக எண்ணியபடி பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் கிடைக்கும் அனுகூலமான  வாரம்பணிபுரியும் பெண்கள் தங்கள்அனைத்து முயற்சிகளிலும்  வெற்றி பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்புதிய பதவிகள் தேடிவரும்அந்தஸ்து உயரும்.  விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும்.மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்வியாபாரிகள் தங்கள் வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களிடம் வேடிக்கையாகப் பேசிக் கவர்வதின் மூலமாகஇலாபத்தைப் பெருக்குவார்கள்தொழில் புரிவோருக்கும் சாதகமான வாரம்.


மீனம்

பூரட்டாதி – 4 ஆம் பாதம்உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் –

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மனக்களிப்புக் கூடும் வாரம்உங்கள் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள்எல்லோருடனும் பழகும் உங்கள் சகஜமான பழக்கத்தால் விஐபி களின் நட்பு உருவாகும்அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலையும் ஏற்படும்அதன் காரணமாக சந்தோஷங்கள் நிலவும்திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை உருவாகி வெற்றியும் கிட்டும்அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகளுக்கான வாய்ப்புகள் பெருகும்தோஷங்கள் நீங்கி நோய்கள் அகலும்தாய் வழியில் ஆதாயம் உண்டுபால்வளம் பெருகும்மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள்அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும்.

உத்திரட்டாதி-

       இந்த வாரம் குடும்பத்தில் தனவிருத்தி அதிகமாவதால் இதுவரை இருந்துவந்த இன்னல்கள் தீரும்ஓய்வெடுத்துஉல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாகநமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாளாக இருப்பதில்லையேஅதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கைபலநாள் கனவுகள் நனவாகும்.  பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்படா வண்ணம் தேவையற்ற செலவுகளை ஒதுக்குவது நல்லது.தெய்வபலம் இருப்பதினால் நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால்வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.


ரேவதி-

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல்செலவுகளும் கூடும். கல்வி கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்சுபச் செய்திகள் மன மகிழ்ச்சி தரும்வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களால் அதிக இலாபம் அடைவர்மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல்கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்பெண்களால் சந்தோஷம் உருவாகும்வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும்நல்ல நண்பர்களுடன் பழகுவதால் உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும்உறவுகள்உள்ளங்கவர் நண்பர்கள் மற்றும் மங்கையர்கள் ஆகியோர் உதவிக் கரம் நீட்டுவதால் உள்ளம் மகிழும்வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும்சிறப்பானதாகவும் இருக்கும்.


n  ஜோதிட கலாநிதி எஸ்விஜயநரசிம்மன்எம்எஸ்ஸி. (அஸ்ட்ரோ)