Sunday, November 9, 2014

இந்த வார நட்சத்திரபலன் 9/11/2014 முதல் 15/11/2014 வரை. (தினபூமி நாளிதழில் வெளியானது.)


இந்த வார நட்சத்திரபலன்
9/11/2014 முதல் 15/11/2014 வரை.
(தினபூமி நாளிதழில் வெளியானது.)

மேஷம்

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --
புத்தி சாதுர்யமுள்ள அஸ்வினி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். எதிரிகளின் பணமும் வந்து சேரும்.   வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்இருக்கும் இடத்தில் நல்ல புகழும் உண்டாகும். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
பரணி  --
தான தருமங்களைச் செய்யும் பரணி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டு. கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  உடன்பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும்.  அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.  கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் எழாது. சுலபமாக வசூலாகிவிடும்.   தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாக இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்.—
கலை ஆர்வம் மிக்க கார்த்திகை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களாய் நடக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள்.


ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
கல்வியில் ஆர்வம் மில்லாத கார்த்திகை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் இனிய வாரம். வாரத்தின் முதல் நாளில் எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். இரண்டாம் நாளில் கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். மூன்றாம் நாள் தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். 4 ஆம் நாளில் தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. 5 ஆம் நாள் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். 6 ஆம் நாளில் புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். 7 ஆம் நாள் கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.
ரோகிணி  –
கல்வியில் பட்டங்கள் பெற்ற  ரோகிணி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு முதல் நாளில் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படும. மறுநாள் மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள். அடுத்த நாளில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை. 4 ஆம் நாள் இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்தாத நிலை ஏற்படும். 5 ஆம் நாள் மது, மாமிசம் அருந்துபவர்களுக்குத் தொல்லைகள் எழலாம். 6 ஆம் நாள்- விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், ஸ்திரீகளால் மகிழ்ச்சி என ஆனந்தம்தான். 7 ஆம் நாளில் சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். தனலாபம் ஏற்படும்.


மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
திறமை மிக்க மிருகசிரீட நட்சத்திர வாசகர்களே !
      இந்த வாரம் உங்களுக்கு மிகச் சுமாரான வாரம். மூன்றாம் நாளும், கடைசி நாளும் மட்டுமே நற்பலன்களை எதிர்பார்க்கலாம்  இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். முதல்நாள் பயணத்தில் துன்பமும், பின்னர் வரும் நாட்களில் கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லைஆகியவை ஏற்படும். எனவே இன்பம் வரும் போது மகிழ்ச்சி பொங்குவதும், துன்பம் வரும் போது துவளுவதும் தானே வாழ்க்கை. இரண்டையும் சமமாக பாவித்தால் துன்பமும் இன்பமாகும்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –
அனுஷ்டானங்களில் நம்பிக்கையற்ற மிருகசிரீட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்குப் பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு.


திருவாதிரை ---
நற்குணம் மிக்க திருவாதிரை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு தந்தை வர்க்கத்தினரால் நன்மை பல ஏற்படும்  அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்வாக்கு வன்மை ஓங்கும்.    சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.  குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. வியாபரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
எதையும் வெளிப்படையாகப் பேசாத புனர்பூச நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பர்நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராதுதொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.


கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
பேச்சுத் திறன் மிக்க புனர்பூச நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் முதல் இரண்டு நாட்கள் மற்றும் 5 ஆம் நாள் மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.

பூசம் -- 
கல்வியில் சிறந்த பூச நட்சத்திர வாசகர்களே !  
       இந்த வாரம் உங்களுக்கு முதல் இரண்டு நாட்கள் நல்ல செய்திகள் வரும்சுபகாரியச் செலவுகள் ஏற்படும்புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். நல்ல வாகனங்கள் வாங்க முற்படுவீர்கள். சில மாணவர்கள் கல்வியில் உயர்நிலை எய்துவர். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.


ஆயில்யம்
கோபம் மிக்க ஆயில்ய நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.
. சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
தரும சிந்தனை மிக்க மக நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்..  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும்.

பூரம்
துடுக்குத்தனம் மிக்க பூர நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு ஓரளவே பணவரவு இருக்கும். ஆறுவது சினம் என சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏறபடுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

உத்திரம்- 1 பாதம்
உண்மையையே பேசும் உத்திர நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் முதல் நாளும், கடைசி மூன்று நாட்களும் உங்களுக்குச் சிறப்பான பலன்களைத் தரும்.  பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.


கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
தைரியம் மிக்க உத்திர நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு 12 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல காலம் பிறக்கும்மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் தங்கள் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
ஹஸ்தம்
பொன் ஆபரணத்தில் பிரியம் கொண்ட ஹஸ்த நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம்  உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதுர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
அடிக்கடி ஊர் சுற்றும் சித்திரை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம்  பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
தைரியம் மிக்க சித்திரை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும்.
சுவாதி
நற்குணம் மிக்க சுவாதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள்
வியாபார நுணுக்கம் அறிந்த விசாக நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வரவேண்டிய கடன் பாக்கிகள் சிரமமின்றி வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
திறமைமிக்க விசாக நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம்  தங்களுக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பயணங்களிலும் எச்சரிக்கை தேவை.



அனுஷம்
ஆராய்ச்சி மனம் கொண்ட அனுஷ நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும்வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பைத் தவிர்க்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கேட்டை
தற்பெருமை மிக்க கேட்டை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் சுக சௌகரியங்கள் சேரும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.   மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
அறிவு மிக்க மூலா நட்சத்திர வாசகர்களே !    
       இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

பூராடம்
பரோபகார குணம் மிக்க பூராட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். ஓங்கும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்.

உத்திராடம் –1 ஆம் பாதம்
கலையுணர்வு மிக்க உத்திராட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர்.

மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---
பலம் மிக்க உத்திராட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரம்மின்றிக் கிடைக்கும்உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். தொழில் விஷயமாக எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  
திருவோணம்-
கர்வம் மிக்க திருவோண நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம்   உங்கள் பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
முன்கோபம் மிக்க அவிட்ட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் தாராளமான தனவரவு வரும்இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்எதிரிகளின் திட்டங்களை சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப்பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும், புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ள  நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
கம்பீரம் மிக்க அவிட்ட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும்.

சதயம்-
வசீகரமான சதய நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான மற்றும் அற்புதமான வாரம். அதனால் மற்றவர்களுக்குச் சிறப்பான வாரம் இல்லை என்ற அர்த்தமில்லை. அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்களுத் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
பக்தி மிக்க பூரட்டாதி நட்சத்திர வாசகர்களே
       ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. இந்த வாரம் கேளிக்கை மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
அழகு மிக்க பூரட்டாதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி தரும் வாரம்வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சியமாக வெற்றி பெரும். விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும்.

உத்திரட்டாதி-
கல்வியில் சிறந்த உத்திரட்டாதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாணவர்கள் தங்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர். மனைவிநண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீயகுணமுள்ள நண்பர்களைத் தவிர்க்கவும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும்.
ரேவதி-
மனைவி பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத ரேவதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். ஆழ்ந்த மனக்கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும்குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள். வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். மாணவர்கள் மகிழ்வான கல்விச் சுற்றுலாச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.


n   
n  ஜோதிட கலாநிதி எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி.(அஸ்ட்ரோ) -94888 62923.



Tuesday, November 4, 2014

வாரபலன்

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
உங்கள் நட்சத்திர பலன்கள்.
02 – 11 – 2014 முதல் 08 -11 – 2014 வரை
 எட்டயபுரம். எஸ். விஐயநரசிம்மன். எம். எஸ்ஸி ( அப்ளைடு அஸ்ட்ராலஜி ). 


மேஷம்
 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --
தெய்வீக அருள்பெற்ற அஸ்வினி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம்உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். கேளிக்கை விடுதிகளில், ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும்.
பரணி  --
நற்குணமும், திறமையும் மிக்க பரணி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரம். கல்வியில் வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்வது நல்லது. வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் எழும். பிரிந்த தம்பதிகள் இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளால் மனக்கலக்கம் ஏற்படலாம்.
கார்த்திகை  1 ஆம் பாதம்.—
செல்வம் மிக்க கார்த்திகை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு கலப்பான பலன்களாய் இருக்கும். தந்தைவழி உறவுகளால் சங்கடங்களும், தொல்லைகளும் ஏற்படும். அரசு வகையில் தண்டத் தீர்வைகள், வரி பாக்கிகள் என உடனே பணம் கட்டவேண்டிய கெடுபிடிகள் இருக்கும். அதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் கிடைத்துச் சிக்கல்கள் தீரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சுப் பேசாமல் பணிந்து நடப்பதும் பணியில் முன்னேற்றங்களைத் தரும். பயணங்களின் போது பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதன் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
கலை ஆர்வம் மிக்க கார்த்திகை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் இனிய வாரம். எல்லாக் காரியங்களுமே  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் தவறாது, தடையின்றிக் கிடைப்பதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும். தெய்வபக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாச சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும்.
ரோகிணி  –
ஆசைகள் அதிகம் கொண்ட ரோகிணி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு எப்போதும் பணம்பற்றிய சிந்தனையாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என இந்த வாரம் தெய்வீக வாரமாக அமையும். உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.  5 ஆம் தேதி எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வருமானம் இருக்கும். உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளாலும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். தாய், மனைவி, தொழி எனப் பெண்களால் இலாபம் உண்டு.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
அழகுள்ள, செல்வம்மிக்க மிருகசிரீட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. கற்பனை வளம் பெருகும். புத்தக வெளியீடு மற்றும் எழுதுதல் துறையினருக்கு முன்னேற்றம் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் சமயம் பார்த்துத் தங்களுக்கு தேவையான வேலைகளை சாதித்துக் கொள்ளலாம்சிலருக்கு எதிரிகளால் பயம் ஏற்படும். எனவே, அவர்களிடமிருந்து விலகியே இருப்பது நல்லது.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –
உண்மையே பேசும் மிருகசிரீட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் ஏமாறலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்வாக்குவன்மை ஓங்கும்சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கத் தாமதம் ஆகலாம்.
திருவாதிரை ---
தூய இதயமுள்ள திருவாதிரை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு தந்தை வர்க்கத்தினரால் தொல்லை இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்வாக்குவன்மை ஓங்கும்சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். வியாபரிகளே, வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வீரகள்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
கல்வியில் திறமைமிக்க புனர்பூச நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்குப் பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனக் குறைவு காரணமாக மதிப்பெண்கள் குறையலாம். எனவே, விளையாட்டுத் தனங்களை விட்டு விவேகத்துடன் நடப்பது நல்லதுசிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். சகோதரரால் நன்மைகள் உண்டு.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
பிறருக்கு நன்மைகளைச் செய்யும் புனர்பூச நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராதுதொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்.
பூசம் -- 
பெரியோரிடம் பக்தியுள்ள பூச நட்சத்திர வாசகர்களே !  
       இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும் வாரம். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்அதிக உழைப்புக்குப் பிறகே எடுத்த காரியங்கள் ஈடேறும்.  பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வாக்குவன்மை, வாகனயோகம் உண்டு. சில மாணவர்கள் கல்வியில் உயர்நிலை எய்துவர். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிட்டும். மனைவி அனுகூலமாக நடந்துகொள்வார். தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்.
ஆயில்யம்
பணம் என அலையும் ஆயில்ய நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். தலைமைப் பதவிகள் தேடிவரும். வீரம் பெருகும். தங்கள் சேவைகள் அங்கீகரிக்கப்படும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்தாடைகள் சேரும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.
. சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
ஆராய்ச்சித் திறமை மிக்க மக நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும்.   விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்குவீர்கள்..  சுகமும் ஆரோக்கியமும் பெருகும்கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும்.
பூரம்
புத்தி சாதுர்யமுள்ள பூர நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்குப் பணவரவு அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
உத்திரம்- 1 பாதம்
நன்றி மறக்காத உத்திர நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரத் துவக்கத்தில் திடீர்ப் பயணங்கள் ஏற்படலாம்புதிய கடன்கள் வாங்க நேரலாம். இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். புதிய தொழில் தொடங்கும் காலம் கனிந்து வரும். பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
பிறரை மதிக்காத உத்திர நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவைபுண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும்.

ஹஸ்தம்
இசை ஆர்வம் மிக்க ஹஸ்த நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம்  உங்கள் எண்ணமெல்லாம் பணத்தைப் பற்றியதாகவே இருக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும். தீயோர் தொடர்பால் சஞ்சலம் ஏற்படும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், தனசேர்க்கை ஆகியவற்றால் வரும் இன்பத்திற்கு அளவேயில்லை. புதிய திட்டங்களால் தொழிலில்  இலாபம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது வேகத்தைக் குறைத்து, எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம்.
சித்திரை – 1,2 பாதங்கள்
காரியவாதியான சித்திரை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவி மற்றும் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். ஆரவாரம் மிக்க சூழலில், கேளிக்கை விருந்துகள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
கல்வியில் சிறந்த சித்திரை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் வாரம். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர்.
சுவாதி
பக்தி மிக்க சுவாதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். ஓங்கும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
கல்வியில் சிறந்த விசாக நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் செல்வத்துக்கு அதிபதியான அலைமகள் உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழமாட்டீர்களா ? தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். சிலருக்குத் தலைவலி/கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். கவலை வேண்டாம். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
திறமைமிக்க விசாக நட்சத்திர வாசகர்களே !
       ஓய்வெடுக்கும் விதமாக, எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. இந்த வாரம் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே நல்ல ஊதியம் அளிக்கும். இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
அனுஷம்
ஆசாரம் மிக்க அனுஷ நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் நீங்கள் பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது இழப்பைத் தவிர்க்கும். திருமண வயது வந்து, திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும். குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கேட்டை
கலை ஆர்வம் மிக்கக் கேட்டை நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் புதிய சௌகரியங்கள் சேரும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  இலாபம் கிடைக்கும். இந்த வாரம் காரியத் தடைகளும், வழக்கு வியாஜ்ஜியங்களும் ஏற்படலாம்.   மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். வீண் ஆசைகளை விலக்கி வைப்பது நல்லது. விவசாயிகளுக்கு வளம் கொளிக்கும் வயல்களால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிலவும். கூட்டு வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
சுறுசுறுப்பான மூலா நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம்  தங்களுக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பயணங்களிலும் எச்சரிக்கை தேவை.
பூராடம்
புகழ் மிக்க பூராட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் வரலாம். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
சாமர்த்தியம் மிக்க உத்திராட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---
தர்ம சிந்தனை அற்ற உத்திராட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வரவேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். அரசுப்பதவியில் உள்ளவர்களுக்கு வேண்டியவர்களாகி அவர்களால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பேச்சுத்திறன் ஆதாயம் தரும்
திருவோணம்-
திறமை மிக்க திருவோண நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள்பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும். பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும் சூழ்நிலைகள் உருவாகும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
அவசரப் புத்தியுள்ள அவிட்ட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் தாராளமான தனவரவு வரும்வேதம் அறிதல், பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம், மிகுந்த உற்சாகம், புத்தாடை இலாபம், சுகமான போஜனம் ஆகியவை கிடைக்கும். புத்திர பாக்கியம், புத்திரரால் உதவி ஆகியவை ஏற்படும். கோபத்தை அடக்கினால் குழப்பங்கள் தீரும், புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ளவர்களால் பயம் ஏற்படும். எனவே, அத்தகைய நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
நீதி, நேர்மை மிக்க அவிட்ட நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் குடும்ப உறவுகளின் பரிபூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். தனச்சேர்க்கை உண்டு. பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். அரசு வகை  ஆதாயம் மற்றும் உதவிகளால் புதிதாகத் தொழில் தொடங்கும் நிலை ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இதுபயண சுகம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும்.
சதயம்-
நன்நடத்தையுள்ள சதய நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் முதல் எதிர்காலத்தில் பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடனான உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். பங்குச்சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்வது இழப்பைக் குறைக்கும்தொழிலில் உங்கள் கூட்டாளிகளின் கடின உழைப்பு மெச்சத் தக்கதாகவும், திருப்தி கரமாகவும் இருக்கும். மனைவிமார்கள் தங்கள் கணவரிடமிருந்து உண்மைக் காதலையும், உன்னத அன்பையும் பெறுவர்.  
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
பக்தி மிக்க பூரட்டாதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான மற்றும் அற்புதமான வாரம். மற்றவர்களுக்கும் சிறப்பான வாரமே. அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்களுத் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
வாக்கு நாணயம் மிக்க பூரட்டாதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி தரும் வாரம்வழக்குகள் ஏதேனும் இருப்பின் நிச்சியமாக வெற்றி பெரும். விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும்.

உத்திரட்டாதி-
கல்வியில் சிறந்த உத்திரட்டாதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் தனவரவு அதிகமாவதால் தரும காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். மாணவர்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொள்வர். மனைவியிடம்,  நண்பர், மற்றும் உறவுகளிடம் கருத்து முரண்பாடுகளைத் தவிர்க்கவும். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். தீய நட்பைத் தவிர்க்கவும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ரேவதி-
மனைவி பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத ரேவதி நட்சத்திர வாசகர்களே !
       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மனக்கவலைகளை மனைவியின் அரவணைப்பு குறைக்கும். தாயின் ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்கள்  முகத்தில் புன்னகை தவழ்கிறதே ? பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள். வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். மாணவர்கள் மகிழ்வான கல்விச் சுற்றுலாச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.


n   
n  ஜோதிட கலாநிதி எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி.(அஸ்ட்ரோ) -94888 62923.







இந்த நாள் இனிய நாள் ? - இன்றைய நாள் எப்படி ?



தினபூமி - நாளிதழில்

இந்த நாள் இனிய நாள் ? - இன்றைய நாள் எப்படி ?
(ஜோதிடப் ப்ரவீணா. எட்டயபுரம் எஸ். விஜயநரசிம்மன்)
4/11/2014 –செவ்வாய்.
மேஷம் -- கல்வியில் வெற்றிபெற கடின உழைப்புத் தேவை. கௌரவக் குறைவு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
ரிஷபம் -- அன்பு சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். முகநூல் மூலமாகப் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்குத் தன்னம்பிக்கை கூடும்.
மிதுனம் -- அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம். வாழ்க வளமுடன்.
கடகம் -- எதிலும் ஆராய்ந்து செயல்களில் இறங்கவேண்டிய நாள். சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். சிலருக்குத் தேவையற்ற  கவலைகள் எழும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.
சிம்மம் -- எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கென ஒரு தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும். எதிரிகள் பணிவர். ஏற்றம் ஏற்படும்.
கன்னி -- பல முகாந்திரங்களிலும் பண வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். காளைகள் காதல் வயப்பட்டுக் களிப்பு எய்துவர். புதிய தொழில் முயற்சிகள்  எளிதாக ஈடேறும்.
துலாம் -- எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். எந்தச் செயலையும் அவசரமின்றி நிதானமாகச் செய்தால் வெற்றி நிச்சியம்.
விருச்சிகம் தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் பொன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்களால் புண்ணியம் சேரும்.
தனுசு -- தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும் நாள். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். வேண்டுதல்கள் நிறைவேறும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.
மகரம் -- பெண்களால் தனலாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வீர்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். மாணவர்களுக்குக் கல்வியிலும், வியாபாரிகளுக்குத் தொழிலிலும் வெற்றி கிட்டும்.
கும்பம் -- கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. எடுத்த காரியங்களில் ஆதாயம் பெற எச்சரிக்கையுடன் நடத்தல் அவசியம். தீயவழிகளில் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றமும், பணமுடையும் ஏற்படலாம்.
மீனம் -- குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார், சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர்பால் நேசம் ஏற்படும்.தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள்