Thursday, September 4, 2014

ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்ஸர்.

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹI

ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்ஸர்.

    கிரகங்கள் மனிதனை, அவனவன் கர்மவினைக்குத் தக்க, ஆட்டிப் படைக்கின்றன. இவ்வுலகில் உன்னதமான பிறவி மனிதப் பிறவியேயாம். ஏனெனில், இவ்வுலகப் படைப்பில் பகுத்தறிவு என்பது மானிடப் பிறவிக்கு மட்டுமே உரித்தானது. தர்ம, அர்த்த, காமம், மோட்சம் வாயிலாக, ஒவ்வொரு ஆத்மாவும் பேரின்ப வீட்டை அடையும் முகமாக, நமது முன்னோர்களும், முனிவர்களும்  பல அரிய வேதசாத்திர நூல்களை, நமக்கு அளித்துள்ளனர். அத்தகைய நூல்களில், அதர்வண வேதம், சத்பத ப்ராம்ணா, மனு ஸ்மிருதி மற்றும் புராண இதிகாச நூல்கள் குறிப்பிடத் தக்கவையாகும். இவை அனைத்திலுமே, முக்கியமாக சமூகத் தேவைகள் மற்றும் திருமண விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பேரின்ப வீட்டை அடைய பொருள், இன்பம் என்ற இரு கரைகளுக்குக் இடையே ஒடும், தர்மம் எனும் நீர்போக்கில் சென்று, மோட்சம் எனும் பெருவீட்டை அடையவேண்டும். சத்பத ப்ராம்ணாவில்  “ மனைவியும், குழந்தைகளுமின்றி ஒருவனின் வாழ்க்கை முழுமையடைவதில்லை “ எனக் குறிப்பிடப்படுகிறது. பண்டைய நூல்களில் பதினாறுவித ஸம்ஸ்காராக்களில் ( சோடஸ ) திருமணமும் ஒன்று. பராசரர் காலத்தில் (.கி. மு. 3000 ) திருமணகாலமே வாழ்க்கையின் மைய நிகழ்வாகக் கருதப்பட்டது. எல்லா நாகரீகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்டவளே “ தர்மபத்தினி ” என அழைக்கப்படுகிறாள். முகூர்த்த நூல்களில் கூறப்பட்டுள்ள பதினாறு ஸம்ஸ்காரக்கள் எனும் நிகழ்வுகள் : -

1.       நிஷேகம் – முதலிரவு

2.       கர்பாதானம் – கருத்தரிப்பு
3.       பும்ஸவனம் – கருவுக்குப் பால்பிரிவு தருதல்
4.       சீமந்தம் – கருவுக்கு உயிர் அளித்தல்
5.       ஜாதககர்மா – தோஷம் நீக்குதல் ( குழந்தைக்கு )
6.       நாமகரணம் — பெயர் சூட்டுதல்
7.       தோளாரோகணம் – தொட்டில் இடல்
8.       அன்னப் பிரஸன்னம் – உணவு ஊட்டுதல்
9.       கர்ணவேதம் – காது குத்துதல்
10.   சௌளம் – முடியெடுத்தல்
11.   அசஷராப்பியாசம் – எழுத்தறிவித்தல்
12.   உபநயனம் – பூணூல் அணிவித்தல்
13.   விவாகம் – திருமணம் (பிரம்மச்சரியம், குடும்பவிரதம், கன்யாதானம், உத்தானம் (பாணிக்கிரகணம்) சப்தபதி (அம்மிமிதித்தல், அருந்தி பார்த்தல்)
14.   நித்தியகர்மா – அன்றாடக் கடமைகள்
15.   கிரஹஸ்தாஸ்ரமம் – இல்வாழ்க்கை நடமுறை, வானப்ரஸ்தம் – பற்றற்ற வாழ்வு.
16.   அபரக்கிரியைகள் – அந்திமக்கடன்கள் ஆகியவையாகும்.

திருமணத்தைப் பற்றி பேசும்போது 7 ஆம் இடம் மாய உலகைக் கோடிட்டுக் காட்டுகிறது. 7 ஆம் வீடு, எந்த ஒரு வீட்டிலிருந்தும் முடிவுறும் வீடாகிறது. உடல் இலக்னம் எனில் உடல் இணைவுறம் இடமென்று ஏழாம் இடத்தைக் கொள்ளலாம். எனவே திருமணத்தை 7 ஆம் வீட்டுடன் தொடர்புபடுத்தலாம் அல்லவா ? மேலும் 7 ஆம் வீடு காமத் தரி கோணத்தில் அமைகிறது. ஜாதக நிலைகளை ஆராய கீழ்க்கண்ட ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம். இது 
இது இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜனன ஜாதகம் ஆகும்.

     இதில் களத்திரகாரகன் சுக்கிரன் 2 ஆம் பாவத்தில் உச்சநிலையில் உளளார்.( 7 ஆம் வீட்டுக்கு 8 ஆம் வீடு ). அவருக்கு இடங்கொடுத்த குரு  5 இல் வக்கிரமடைந்து, ஜாதகருக்கு இனியபேச்சு மற்றும் கவிதைத் திறனை அளித்து காதல் உணர்வுகளைக் குறைந்தார். சுக்கிரன் உணர்வுகளை அதிகரித்து, அவர் தன்னுடைய மனைவியைக் தேவியின் அவதாரமாகவும், புனித தாயாகவும் கருதவைத்தார்.

     காமத்திரிகோண வீடுகளில், இலக்னத்தில் சூரியன், 7 ஆம் வீடு கிரகமமின்றியும், 5 ஆம் வீட்டில் சாத்வீக குணமுடைய 11 ஆம் அதிபதி குரு அமர்ந்துள்ளார். குரு, 5 ஆம் அதிபதி புதனைப் பார்க்கிறார். 9 இல் உச்சச் சனி, வக்கிரமாகி உள்ளார். சனி இலக்னாதிபதியானதால், அவருடைய பக்தி மற்றும் ஞானமார்க்கத்தை பரைசாற்றுகிறது. மோட்ச ஸ்தானமான 12 ஆம் வீட்டில் 3 ஆம் அதிபதி செவ்வாய்  அமர்ந்து அவரை ஞானியாக்கியது.

சுக்

ராகு
குரு (வ)
லக்,
சூரி,சந், புத(வ)
ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர்
18 – 2 – 1836 – 6 – 44 காலை
கமர்புகுர் – ஹூக்ளி.
மேற்குவங்காளம்


செவ்


கேது
சனி (வ)


    சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பரஸ்பரத் தன்மைகள், புனித முனிவரின் உள்மனதைக் குறிகாட்டுகிறது. குருவின், பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ள சந்திரன் கும்பத்தில் அமர்வு மற்றும் அதன் அதிபதி சனி உச்சமாகி தர்ம வீடான 9 இல் இருப்பது அவரின் ஞானசக்தியைக் குறிகாட்டுவதோடு, காமத்தை விட்ட நிலையையும் குறிகாட்டுகிறது.

காலபருஷ தத்துவப்படி 7 ஆம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன், கான்டிகாரகனாகி காம உந்துதலில் சிக்கலைத் தருகிறார். 5 ஆம் வீடு ஆரூட லக்னமாகி அங்கு குரு அமர்ந்திருப்பது தர்மத்தைப் பரப்பப் பிறந்தவர் என்பதைக் குறிகாட்டுகிறது.

    கடகம் உபபதா இலக்னமாகி, அதற்கு 7 ஆம் இடத்தில் உச்சச் செவ்வாயின் அமர்வு, அவருடையை ஞானமார்க்கத்திற்கு அவரின் மனைவியும் உதவக் காரணமானது.

    ரிஷபம் தாரபதாவாகி, அதற்கு 7 இல் கேது அமர உடல் தொடர்பற்ற மணவாழ்க்கையைத் தந்தது.

    7 ஆம் அதிபதி இலக்னத்தில் இடம்பெற்றுள்ளது, சீக்கிர மற்றும் நிலையான திருமண வாழ்வைத் தந்தது. ஜாதகர் தனது 23 வது வயதில் 6 வயதுச் சிறுமி சாரதாவை மணந்தார்.

          இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதிக்கு இடங்கொடுத்தவனுமான சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது மணமான நிலையில், தூய்மையான ஞானியாகவும் இருக்கச் செய்தது. சந்திரன் மற்றும் சுக்கிரனின் 2 / 12 நிலை ஞானிக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மையைத் தந்தது.

    எனவே, நண்பர்களே ! எல்லா நாகரீகங்களிலும் மனைவியைப் பாதுகாப்பது கணவனின் கடமையென்றும், மனைவி மதக் கடமைகளை சரிவரக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்றும் சொல்லப்படதன்படி நடந்ததல்லவா ?

Wednesday, September 3, 2014

நாட்டைக் காக்கும் காவல்துறை.

நாட்டைக் காக்கும் காவல்துறை.

       நாட்டையும், வீட்டையும் காக்கும் பெருமைமிகு காவல்துறைப் பணி மற்ற பணிகளைப் போன்றதல்ல. அது நாட்டைக்காக்கும் ஒரு பொறுப்பு மிக்க பணியாகும். நாட்டையும், நாட்டு மக்களையும் குற்றச் செயல்கள் புரிபவரிடம் இருந்து காத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் தலையாய கடைமையை உடைத்தாய் இருக்கிறது காவலர் பணி. நாட்டின்பால் ஏற்பட வேண்டிய ஆழமான, தியாக உணர்வும், பொறுப்புணர்வும் கொண்ட அதிகாரிகளைக் கொண்டது நமது இந்திய காவல்துறை. மக்கள், சட்டத்தை உடைத்துக் குற்றங்கள் செய்வதில் இருந்து அவர்களைத் தடுக்கும் முக்கியத் துறையாகும்.

       இக் காரகங்கள் அனைத்துமே, செவ்வாய் மற்றும் குருவின் முக்கிய காரகங்கள் ஆகும். சட்டம், தியாகம், பொறுப்புணர்ச்சி, காத்தல் ஆகியவை குருவின் காரகங்களாகும். செவ்வாய் தைரியம், வீரம் மற்றும் சீருடைப் பணி ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், அதுவே குற்றச் செயல்களுக்கும் காரணமாகிறது. எனவே இக் காரகங்கள் பலம் பெறும் போது, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கிறது. கொலைகார்ர்கள், கொள்ளையர்கள், கூலிப்படைகள், ஆள்கடத்துபவர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகியவர்களை உருவாக்குவது செவ்வாய் மற்றும் சனியின் தாக்கமே ஆகும்.

       இத்தகைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, குற்றங்களைத் தடுப்பதே காவல்துறை அதிகாரிகளின் தலையாய கடமையாகிறது.

       காவல்துறைப் பணிகளில் இருப்பவர்கள் ஜாதகங்களில், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் தாக்கம்  முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். ஆயினும், சனியின் தாக்கத்தையும் நாம் ஒதுக்கிவிட முடியாது. செவ்வாய் குரு மற்றும் சனியின் ஒன்றிணைந்த தாக்கங்கள் மற்றும் அவற்றின் கர்ம ஸ்தானத்துடனான தொடர்பு ஜாதகரை காவல்துறைப் பணிக்குத் தள்ளிவிடுகிறது எனலாம்.

       இலக்னத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். அதுவே ஜாதகரின் தனித்திறன், உடலமைப்பு மற்றும் அவர் பொறுப்பு மிக்க பதவிக்குப் பொருத்தமானவரா ? – என்பதை உணர்த்துவதே இலக்னமாகும்.

              அடுத்து, 6 ஆம் வீடு சட்டம் மற்றும் வழக்குகளைக் குறிகாட்டுகிறது. எனவே, 6 ஆம் வீடு இதற்குக் கூடுதலாக முக்கியப் பங்கு வகிக்கிறது.

       இரண்டு மற்றும் 11 ஆம் வீடுகள் செல்வநிலை மற்றும் வருமானத்தைக் குறிகாட்டுகிறது. 10 ஆம் வீடு, 10 ஆம் அதிபதி, 10 இல் உள்ள கிரகம் மற்றும் நவாம்சத்தில் 10 ஆம் வீட்டில் உள்ள கிரகம், 10 ஆம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் ஆகிய அனைத்தின் தாக்கங்களும் அறியப்பட வேண்டும்.

       சிம்மம் இலக்னமாகி, செவ்வாய், குரு இணைந்து இருக்க, மேற்சொன்ன மற்ற வீடுகளும் அனுகூலமாக அமைய ஜாதகர் புகழ் பெற்ற, வெற்றிகரமான, பிரபலமான, கடமை உணர்வுள்ள, கம்பீரமான மற்றும் கடினமான காவல்துறை அதிகாரியாகத் திகழ்வார்.

       இதில், சனியும் சமமான முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், சனி பொதுஜனங்களைக் குறிக்கும், நாட்டு மக்களையும் குறிக்கும். அரசுப்பணியைக் குறிப்பதுவும் அதுவே ஆகும். நாட்டின் அமைதி காக்கும் அரசின் முக்கிய அங்கமே காவல்துறை ஆகும்.

       இவ்வாறாக, 10 ஆம் இடத்தோடு 2 மற்றும் 11 ஆம் வீடுகளும், செவ்வாய், குரு மற்றும் சனியின் தொடர்புற வேண்டும்.

       இராசி மற்றும் நவாம்சத்தில் நெருப்பு இராசிகளின் தொடர்பும் அவசியம் ஆகிறது. 2, 10 மற்றும் 11 ஆம் அதிபதிகளின், இராசி அல்லது நவாம்சத்தில் மேஷ, சிம்ம, தனுசு ஆகிய இராசிகளில் இடம் பெறுவது, காவல்துறை அதிகாரிகளின் ஜாதகத்தில் பலமாகக் குறிகாட்டுப்படுகிறது, விருச்சிக இராசியான நெருப்பு இராசி இல்லை எனினும், அதன் அதிபதி செவ்வாய், வெப்ப கிரகம் ஆதலால் அதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

       உண்மையில் அரசைக் குறிக்கும் சூரியனும் காவல்துறைப் பணிக்கு உதவும் காரகர் ஆகிறார். காவல்துறை, அரசின் முழு அதிகாரத்திற்கு உரியது மற்றும் பலம் மிக்க  சக்தியையும் உடைத்ததாய் இருக்கிறது.

       ஆத்ம காரகன், ஆத்ம காரகனின் சாரம் ஆகியவையும் முக்கிய பொறுப்பாகின்றன.

       மேலே சொல்லப்பட்ட காரணிகளைத் தொகுத்துக் காணலாம்
1.   இலக்னம்தனித்திறன், உயர்வுநிலை அல்லது ஏற்றநிலை, உடல் தகுதி மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

2.   
() 10 ஆம் வீடுதொழில் வீடு.
(). 2 ஆம் வீடுவருமான வழி.
(). 11 ஆம் வீடுவாழ்வாதாரம்.
(). 9 ஆம் பாவம்தொழிலுக்கு உதவும் அதிர்ஷ்டம்.(பாக்கியம்) தொழில்      மற்றும் சொத்து வருமானங்கள்.

   3.  6 ஆம் பாவம்வழக்கு, குற்றம், சண்டை. விபத்துக்கள், திருட்டுக் குற்றங்கள், கடன்கள், பாக்கிகள், சேவைகள், பதவி உயர்வுகள், பதவி இறக்கங்கள், பதவி       நீடித்தல், பதவி மாற்றங்கள் மற்றும் நீக்கங்கள்.

   4.  குறிகாட்டிகள்செவ்வாய், குரு, சனி ஆகியோர்.

   5.  கை கொடுப்பவர்சூரியன்.

   6. இராசி மற்றும் நவாம்சத்தில் மேஷ, சிம்ம, விருச்சிக மற்றும் தனுசு    இராசிகள்.

   7. நட்சத்திரங்கள்கிருத்திகை, மிருக சிரீடம், புனர்பூசம், பூசம், உத்திரம்,    சித்திரை, விசாகம், அனுஷம், உத்திராடம், அவிட்டம் மற்றும் பூரட்டாதி.

   8. அரசுவேலை  -- சூரியன்சந்திரன் தாக்கம், 1 மற்றும் 6 அல்லது 10 ஆம் வீடு ஒன்று அல்லது வேறு வழிகளில் தொடர்பு கொள்ளுதல்.

  9.  ஆத்ம காரகன் – (). ஆத்மகாரகன் இடம் பெறும் இராசி, நவாம்சம் மற்றும்     நட்சத்திரங்கள்.   (). ஆத்ம காரகனின்  சுய வீடுகள். () . ஆத்ம காரகன்   இடம் பெற்ற வீடு.

      மேற்கண்ட முறையில் ஆராய இரு புகழ் பெற்ற காவல்துறை அதிகாரிகளின் ஜாதகத்தைப் பார்ப்போம்.

      கே. பி. எஸ். கில். .பி.எஸ்நாம் நன்கு அறிந்த காவல்துறை உயர் அதிகாரியான இவர் 29 டிசம்பர் 1934 அன்று பாக்கிஸ்தானிலுள்ள லாகூரில் பகல் 2 மணிக்குப் பிறந்தார். மேஷ இலக்னம். இலக்னாதிபதி செவ்வாய் 6 இல் இருந்து இலக்னத்தைப் பார்க்கிறார். 6 ஆம் வீடு சேவையைக் குறிக்கிறது. குற்றங்களைத் தடுப்பது காவலர் பணிதானே ? இலக்னத்துடனான அல்லது 10 ஆம் இடத்துடனான  மற்றும் அதன் அதிபதிகளுடனான ஒளிக்கிரகங்களின் தொடர்பு காவல் துறை அதிகாரிகளின் ஜாதகத்தில் காணலாம். அதுவே அரசுப் பணியைத்தருவதாகும். இங்கு இலக்ன அதிபதி 6 இல் சந்திரனுடன் இணைந்து, அவரின் ஹஸ்த நட்சத்திரத்திலேயே உள்ளார். இது அவருக்குக் காவல் துறையில் உயர் அதிகாரப் பதவியைத் தந்தது.


லக்///



இராகு

குரு
செவ்
சந்
சனி


இராசி
கேது



நவாம்சம்
லக்///
புத
இராகு


சூரி
சுக்
சூரி
புத

குரு
செவ்
சந்

   சுக்
சனி
கேது

சந்திர திசா இருப்பு – 4 9 மா 4 நாள்.

       மூன்று மற்றும் ஆறாம் அதிபதி புதன் ஒன்பதில் உள்ளார். காவல்துறைக்கு செவ்வாய், சனி, குரு மற்றும் சூரியன் ஆகியோர் காவல் துறைக்குக் காரகர் ஆவர்.   6 ஆம் அதிபதி புதன் கடக நவாம்சம் பெற்றுள்ளது அவரின் அரசுவேலைக்குக் காரணமானது. 6 ஆம் அதிபதி புதன், சூரியன் மற்றும் சுக்கிரனுடன் இணைந்து 9 இல் உள்ளார். சுக்கிரன் ஆட்சிப் பணியைக் குறிக்கும் கிரகமாகும்.

       ஆத்ம காரகன் சுக்கிரன் 2 மற்றும் 7 ஆம் வீட்டுக்கு அதிபதியாகி தனுசு சுக்கிரன், செவ்வாயின் நவாம்சத்திலும், இலக்னாதிபதி செவ்வாய் சுக்கிரனின் நவாம்சத்திலுமாக பரிவர்த்தனை பெற்று இருப்பது பலம் மிக்க காவல்துறை உயர் அதிகாரியின் நிலையை உணர்த்துகிறது.

       இவரின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் சனி பலம் மிக்க கிரகங்காளாகும்.      2 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன், குருவின் இராசியான 9 ஆம் வீட்டில் உள்ளார். அவர் செவ்வாயின் நவாம்சம் பெற்றுள்ளார்.

       10 ஆம் அதிபதி சனி 11 இல் தனது சுய வீட்டில் உள்ளார். செவ்வாயின் அவிட்ட நட்சத்திர சாரம் பெற்று, நவாம்சத்தில் தனது உச்ச வீட்டில் உள்ளார். அவரின் பார்வை 5 மற்றும் 8 ஆம் வீட்டின் மீது விழுகிறது. இலக்னாதிபதி செவ்வாய், 10 ஆம் அதிபதி சனியின் பார்வையைப் பெறுகிறது. இதன் காரணமாகவும் இலக்னம் பலம் பெறுவதால் செவ்வாய், சனியின் தாக்கம் உயர் காவல் துறைப் பணியை உறுதி செய்கிறது.

       சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின் நெருப்பு இராசியுடனான தொடர்பும் இதை உறுதி செய்கிறது எனலாம்.

       இவை தவிர சூரியன் 9 இல் இருப்பது ஒருவருக்கு தைரியத்தையும், புகழையும், தலைமைக்கான ஆளுமையையும், மிக உயர்ந்த பதவிகளையும் தருகிறது. பொதுவாக சூரியன் நெருப்பு இராசிகளில் இருப்பது ஜாதகரை ஒரு பொறியாளராகவோ அல்லது சீருடைப் பணிகளில் உயர் பதவியையோ (இராணுவம், காவல்துறை) தருகிறது.

       ஆறில் சந்திரன் இருப்பது சமூகத்தாலும், அரசாலும் பாராட்டுக்களைப் பெறுவர். அதிக வலிமை உள்ள எதிரியையும் வெல்வர். அரசுப்பணியில் வெற்றி பெற்றுத் திகழ்வர். மேலும், செவ்வாய் இணைவு காவல்துறை அதிகாரி என்பதை உறுதி செய்கிறது,

       ஏழில் இருக்கும் குரு விரைவாக உயர் பதவிகள் பெறும் நிலையைக் காட்டுகிறது. இராகு 10 இல் இருப்பதுவும் சீருடைப் பணிக்குக் குறிகாட்டி ஆகும்,

கிரண் பேடி ஐ.பி. எஸ்

       இந்திய நாட்டின் முதல் பெண் போலீஸ் உயர் அதிகாரி ஆவார். இவர் தனது தைரியம் மிக்க, கடமை தவறாத குணங்களால் புகழ் பெற்றவர். இவர் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்ஸில், 9 ஜூன் 1949 ஆம் வருடம் மதியம் 2 – 10 மணிக்குப் பிறந்தார்.

       இவரின் ஜாதகத்தில் 10 ஆம் வீட்டில் சுக்கிரன், தொழிலுக்கான முதல் குறிகாட்டி ஆகிறார். இரண்டாவது குறிகாட்டி பத்தாம் அதிபதி புதன் ஆவார்.  அவர் சுய நவாம்சத்தில் உள்ளார். இது இந்த ஜாதகியின் தொழிலானது கலை, நடிப்பு, நடனம், இசை, எழுத்து ஆகியவை தொடர்புடைய தொழிலாக இருக்கலாம் என்பதைக் குறிகாட்டுகிறது.

       இப்போது நாம் ஆத்ம காரக கிரகமான சூரியனின் நிலையைக் காணலாம். சூரியன் 9 ஆம் வீட்டில், செவ்வாயின் மிருக சிரீட நட்சத்திரத்தில் உள்ளார். இந்த ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் மிக்க பலம் உள்ள கிரகங்களாக உள்ளனர். சூரியன் தனது சுய நவாம்சத்தில் உள்ளார். மேலும், சுக்கிரன், புதன் பரிவர்த்தனை ஆகியவை வெற்றிகரமான ஆட்சிப்பணிக்கு உரிய ஜாதகமாகக் குறிகாட்டுகிறது. செவ்வாய் மற்றும் சூரியன் 10 ஆம் அதிபதி புதனுடன் 9 ஆம் வீட்டில் இருப்பது வெற்றிகரமான காவல்துறைப் பணியைக் குறிகாட்டுகிறது.


இராகு
செவ்
புத()
சூரி
சுக்

குரு()
இராகு

லக்///
புத()
சனி



இராசி

செவ்


நவாம்சம்


குரு()
சனி

சூரி
சந்

சந்
கேது
லக்///
சுக்
 
கேது


சனி தசா இருப்பு – 17 1 மா 27 நாள்.

       அடுத்து நமது ஆய்வின் மூன்றாவது படியாக, இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இருக்கிறான். குருவின் தனுசு நவாம்சத்தில் இருக்கும் சுக்கிரன், இராகுவின் சாரத்தில் உள்ளார். இராகு வர்க்கோத்தமம் பெற்று, செவ்வாயின் மேஷ இராசியில் இடம் பெற்றுள்ளார். எனவே சுக்கிரன்புதன், குரு, இராகு மற்றும் செவ்வாய் ஆகியோரின் தாக்கம் பெற்றுள்ளார். இந்த நிலை தொழிலைப் பொறுத்தவரை பொறியாளர் அல்லது காவல்துறை அதிகார பதவிகளைக் குறிகாட்டுகிறது.

       அதன் பிறகு 11 ஆம் இடம் ஆராயப்பட வேண்டும். 11 ஆம் அதிபதி சந்திரன் சனியின் அனுஷ நட்சத்திரத்தில், செவ்வாய் ஆட்சி செய்யும், விருச்சிக இராசியில் இடம் பெற்றுள்ளார். சந்திரன், சூரியனின், சிம்ம நவாம்சம் பெறுகிறார். இது காவல் துறையில் உயரிய அதிகார பதவியைக் குறிகாட்டுகிறது.

       முடிவாக, 9 ஆம் வீட்டை ஆராய வேண்டும். 9 ஆம் வீட்டில் புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியோர் இருக்கின்றனர். இவை, ஆட்சிப்பணி மற்றும் காவல் துறை உயர்பணியைக் குறிகாட்டுகிறது.

       சூரியனும், செவ்வாயும் சார பரிவர்த்தனை பெற்றுள்ளனர். சூரியன் மிருகசீரிடத்திலும், செவ்வாய் கார்த்திகை நட்சத்திரத்திலும் உள்ளனர். புதன் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் உள்ளார். சந்திரன் விருச்சிகத்தில் உள்ளார். இதுவும் ஆட்சிப்பணி அல்லது காவல்துறை உயர் பணியைக் குறிகாட்டுகிறது. சூரியன் சுய நவாம்சமும், செவ்வாய் கும்ப நவாம்சமும் மற்றும் புதன் சுய நவாம்சமும் பெற்றுள்ளனர். 9 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இடம் பெற்றுள்ளார். அவர் மீன நவாம்சம் பெற்று, இராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளார். சனி 6 ஆம் வீட்டான தனது சுயவீட்டைப் பார்க்கிறார்.

       இவ்வாறாக, சூரியன், செவ்வாய், குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் இந்த ஜாதகியின் தொழிலுக்கு ஆழ்ந்த தொடர்பு ஏற்படுத்துகின்றன. ஆட்சிப் பணிக்கு சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோரே குறிகாட்டிகள் என முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் 10 இல், சூரியன் 9 இல் உள்ளனர். சந்திரன், சூரியனையும், 10 ஆம் அதிபதி புதனையும் பார்வை புரிகிறார். 9 ஆம் அதிபதியான சுக்கிரன் மற்றும் 10 ஆம் அதிபதியான புதனின் பரிவர்த்தனை மகாயோகம் அல்லது மகாராஜயோகத்தை அளிக்கிறது. இந்த நிலைகள் ஆட்சிப்பணிக்கு ஒரு அசைக்க முடியாத மற்றும் பலம் மிக்க கிரக நிலைகள் ஆகிறது.

       ஒன்றுக்குள் ஒன்றாக உறவான சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் தாக்கங்கள் காவல்துறை உயர் பணிக்கான முக்கிய இணைவாக உள்ளன. இந்த நிலைகள் காரணமாக இவர் ஒரு கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு மிக்க அதிகாரியாகப் பணியாற்றி உலகப் புகழ் பெற்றார்.

       ஜோதிடகலாநிதி.எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி (அப்ளைடு அஸ்ட்ராலஜி)