நாடி ஜோதிட ஜாதக ஆய்வு
ஜாதகம் – 33
கீழ்க்
கண்ட கோசார
கிரக நிலைப்படி ஒரு ஜாதகரின் நிலையைப் பார்ப்போம். ஜாதகரின் 29 வயது முதல் 30 ½ வயதுவரை கோசார சனி
மகரத்தில் ஜன்மச் சனியாக அமைந்தது. ஜனன ஜாதகத்தில் கேதுவும் மகரத்திலேயே இருந்தது.
இதன் காரணமாக ஜாதகரின் தொழிலில் தடைகள் பல ஏற்பட்டன. மன அமைதியின்மையும் ஏற்பட்டது.
செவ்வாய் மகரத்தில் இருந்த போது அந்த நேரத்தில் ஜாதகருக்கு மனதில் சஞ்சலங்களும், பணக்
கஷ்டங்களும், தன்னம்பிக்கை இன்மையும், அதன் காரணமாக ஏற்படும் எதிர்பாராத, திடீர் தொழில்
பாதிப்புகளும் ஆகிய நிகழ்வுகளால் ஏற்படும் கவலைகளும் உருவாகின. சுக்கிரன் மகரத்தில்
நுழைந்த போது அவரது குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகின. அப்போது
ஜாதகருக்கு பொறுமையைக் கடைப்பிடிக்கவும், எப்போதும் இறை சிந்தனையில் இருந்து வேண்ட
அனைத்தும் நன்மையாக நடக்கும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
செவ்
|
|
சூரி,சுக்
புத
|
|
|
உ.
ஜா. 33.
கோசாரம்
|
இராகு
|
|
சனி,
கேது
|
|
||
|
|
|
சந்
|
அதன் பிறகு 1992 ஆம் வருடம் கோசார சனி ஜனன ஜாதக கேதுவின் பாகையுக் கடந்து, பிறகு குருவின்
பாகையைக் கடந்த போது ஜாதகர் கண்டிப்பாக மிக நல்ல பலன்களையே அனுபவிப்பார். தொழில் விருத்தியும்,
முன்னேற்றங்களும் சிறப்பாக இருக்கும்.
ஜாதகம் - 34
மற்றுமொரு ஜாதகர் வந்து கேட்ட கேள்வி நேரத்தின் போது உள்ள கோசார ஜாதகத்தைப்
பார்ப்போம்.
கோசார சனி, ஜனன ஜாதகத்தில் உள்ள செவ்வாய், கேது, சந்திரனைக் கடந்து விட்டது.
ஆகையால் ஜாதகர் மீது தேவையற்ற குற்றங்கள் மற்றவர்களால் சுமத்தப்பட்டு பல கஷ்டங்களை
அனுபவிக்க நேர்ந்தது. அத்துடன் அவர் மனதில் தன்னம்பிக்கைஇன்மையையும், வாழ்வில் அவநம்பிக்கையையும்
தோற்றுவித்தது. கோசார குரு ஜனன ஜாதகத்தில் சிம்மத்தில் உள்ள புதனை கடக்கும் போது ஜாதகர்
கல்வி நிலையிலும், அறிவுத்திறன் மேம்பாட்டிலும் வெற்றி பெறுவார். கோசார சூரியன் சிம்மத்தைக்
கடக்கும் போது, ஜனன ஜாதக்த்தில் புதனும், சூரியனும் பரிவர்த்தனையில் உள்ளதால் ஜாதகரின் தந்தை வீட்டில் இவரது நங்கைக்கு திருமணம்
போன்ற சுப மங்கள காரியங்கள் நடைபெறும். அதாவது ஜாதகரின் 30, 31, 32 வது வயதுகளில் கோசார
குரு சிம்மம், கன்னி ஆகிய இராசிகளைக் கடக்கும் போது வீடு, பூமி, சொத்துக்கள் வாங்குதல்
போன்ற சந்தோஷ தருணங்களும், குடும்பத்திலும்
மகிழ்ச்சி நிலவும்.
குரு
|
|
|
இராகு
|
|
உ.
ஜா. 34.
கோசாரம்
|
|
|
சனி
|
புத(வ)
|
||
சந்,கேது
|
|
செவ்
|
சூரி,சுக்
|
ஜாதகம் – 35 அ & ஆ.
இந்த ஜாதகங்களில் அ. ஜாதகரின் ஜனன ஜாதகம் மற்றும் ஆ. கோசார பிரசன்ன ஜாதகம் ஆகும். ஜனன ஜாதகத்தில் புதன்
மற்றும் கேது மகரத்தில் உள்ளது. அவர் வந்த நேரத்தில் கோசாரத்தில் சனி மற்றும் சூரியனும்
மகரத்தில். இதில் சனி கேது தொடர்பு ஜாதகரின் தொழிலில் தடைகளைத் தந்தது. புதன்,கேது
இணைவு பூமி மற்றும் சொத்துகளில் வழக்கு விவகாரங்களைத் தந்தது. இதன் காரணமாக தொழிலில்
முன்னேற்றம் இல்லை, மற்றவர்கள் இவரின் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டார்கள். அங்கு
சூரியன் இருந்தாலும் பகைவீடு ஆனதால் அரசாங்க உதவிகளும் கிடைக்கவில்லை. கோசார இராகு
ஜனன சூரியனை தொட்டபோது ஜாதகரின் தந்தைக்கோ அல்லது மகனுக்கோ ஆபத்து / கண்டம் ஏற்படலாம்.
|
|
லக்//
சனி
செவ்
|
|
சந்
|
உ.
ஜா. 35. அ
இராசி
|
இராகு
|
|
கேது,புத
|
குரு(வ)
|
||
சூரி
|
சுக்
|
|
|
ஜனன ஜாதகத்தில் உள்ள கேதுவை கோசார சனி கடக்கும் காலம் வரை ஜாதகருக்கு வாழ்க்கையில்
முன்னேற்றத்திலும், சம்பாத்தியத்திலும் தடைகள் இருந்து கொண்டே இருக்கும்.
ஜா.35 ஆ வில் கோசார லக்னாதிபதி சந்திரன் மேதாவித்தனத்துக்கு உரிய கன்னி இராசியில்
உள்ளார். சிம்மத்தில் உள்ள வக்ர குரு தனது
பின் நகர்வால் சந்திரனைக் பார்க்க முடியாது.
சந்திரனில் இருந்து 5 ஆம் இடத்தில் உள்ள பரஸ்பர பகை கிரகங்களான சூரியன் சனியும்
உள்ளனர். சந்திரனுக்கு 9 இல் எந்த கிரகமும் இல்லை. எனவே, இன்னும் 1 ½ வருடத்திற்கு
ஜாதகர் எவருடைய உதவியும் இன்றி இப்படியே காலத்தைக் கடத்த வேண்டிய சூழ்நிலையே எழும். அதன் பிறகே அவர் வாழ்வில் இன்பக் காற்றை சுவாசிக்க
முடியும்.
|
|
|
கேது
|
|
உ.
ஜா. 35. ஆ
கோசாரம்
|
லக்///
|
|
சூரி
சனி
|
குரு(வ)
|
||
புத,செவ்
ராகு,சுக்
|
|
|
சந்
|