Sunday, May 20, 2018

ஜாதகம் 12 & 13

ஜாதகம் 12 & 13

ஜாதகம் – 12
         இந்த ஜாதகத்தில் (12) சனி நீசம். சனியின் செவ்வாயுடனான பரிவர்த்தனையால் சனி தன் சொந்த வீட்டில் இருப்பதாகிறது. அங்கு குருவும் இணைந்துள்ளது.  இதனால் ஜாதகர் தன் பணியில் வேறு இடத்திற்கு மாற்றம் பெற்று அங்கே அவருக்கு சிறந்த வரவேற்பும், கௌரவமும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரம்ப காலத்தில் வரும் கஷ்டங்களை சமாளித்து சுமாரான வேலையை அடையும் இவர் பின்னர் வேறு இடத்திற்கு மாற்றம் பெறும் போது புதிய இடத்தில் அவர் போற்றப்படுவார். இதற்குக் காரணம் பரிவர்த்தனையே ஆகும். கர்மகாரகன் சனி கௌரவம், மதிப்பு மரியாதைக்கு உரிய கிரகமான குவுடன் தொடர்பு கொள்ளும் போது இது சாத்தியப்படுகிறது.

சனி
சந்

செவ்
குரு
உ. ஜா. 12
சுக்
இராகு

கேது

 ரிஷபத்தில் உள்ள சந்திரன் உச்சம். அவர் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் அங்கு தனது பரம வைரியான இராகுவுடன் சந்திரனுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அதனால், இந்த ஜாதகருடைய தாய் பயத்தாலும், சளி மற்றும் மூட்டுவலியாலும் கஷ்டப்படுகிறார். ஜாதகரும் மனதில் ஒரு மாயத் தோற்றத்துடனும், பிரமையுடனும், ஏமாற்றத்துடனும் துன்பப்படுகிறார்.
         இதுவரை, உச்ச கிரகம் எங்ஙனம் தனது பலத்தை இழக்கிறது, நீச கிரகம் எப்படி பங்கம் அடைகிறது என்பதற்கான முழு விவரங்களையும் அறிந்தீர்கள் அல்லவா ?
         ஜாதகம் - 13

இராகு

சூரி,புத
செவ்,சந்
சுக்.

உ. ஜா. 13
குரு

கேது
சனி

இந்த ஜாதகத்தில் (13) குரு உச்சம் பெற்றிருந்தாலும், அதற்கு  2, 12 மற்றும் 7 ஆம் இடங்களில் ஒருகிரகமும் இல்லாததால் , உச்ச குருவால் ஜாதகருக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படாது.
         சனி உச்சமாகி, அதற்கு அடுத்துள்ள 2 ஆம் வீட்டில் செவ்வாய்க்கு நண்பரும், சனிக்கு பரம வைரியுமான கேது உள்ளார். சனிக்கு 12 ஆம் வீட்டிலும், 7 ஆம் வீட்டிலும் கிரகங்கள் இல்லை. இதன் காரணமாக உச்ச சனியால் ஜாதகருக்கு எந்தவித பயனும் இல்லை. எனவே, ஜாதகருக்கு தொடர்ந்து வேலைகள் இன்றி விட்டு விட்டே வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன் உலக பந்தங்களில் இருந்து விடுபடும் எண்ணமே இருந்தது. அத்துடன் இராகு – கேதுக்களுக்கு ஒருபுறம் குருவும், சனியும் இருக்க, மறுபுறம் மற்ற கிரகங்கள் இருப்பதால் ஜாதகர் தான் இருக்கும் இடத்தைவிட்டு வெகுதூரத்தில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. அங்கு அவர் வேலையில் பல கஷ்டங்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
ஜாதகம் - 14
சுக். சந்
சூரி

கேது

உ. ஜா. 14
குரு
சனி

இராகு

         இந்த ஜாதகத்தில் (14) குரு உச்சமாகி, அவருக்கு 12 ஆம் இடத்தில் கேது உள்ளார். 7 ஆம் இடத்தில் சனி உள்ளார். இராகு தனது கடிகார சுற்றுக்கு மறு சுற்றாக நகரும்போது முதலில் குருவை தொடுகிறார். ஆனால், கேது வெளியில் இருக்கிறது. இராகு முதலில் ஜீவன் காரகன் குருவைத் தொடுவதால் ஜாதகர் குழந்தைப் பருவத்திலேயே பாலாரிஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், குரு, சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் அங்கு ஆத்ம காரகன் சூரியனைத் தொடர்பு கொள்கிறார். இதன் காரணமாக மரணத்தின் பிடியிலிருந்து கடவுளின் அருளால் ( சூரியன் = தெய்வீகத் தன்மை ) விடுபட்டுவிடுகிறார். இந்த கிரக நிலைகளால் தீய பலன்கள் மாறி நன்மை ஏற்படுகிறது. இது பக்த மார்க்கண்டேயனின் ஜாதகமாகும்.

Friday, May 18, 2018

horoscope 10 and 11 - NADI

                        horoscope 10 and 11 - NADI
                                                  
ஜாதகம் – 10
         இந்த ஜாதகத்தில் (10) குரு நீசம். ஆனாலும் சனியுடனான கிரக பரிவர்த்தனை காரணமாக குருவின் பாதிப்பு பாதியாகக் குறைவதோடு, நீசமும் பங்கமாகிறது. சூரியன் நீசம் பெற்றுள்ளான். சூரியனுக்கு சுக்கிரனுடனான கிரக பரிவர்த்தனை சூரியனின் பாதிப்பை குறைப்பதோடு, நீசமும் பங்கமாகிறது. இதே போன்று சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை நீச சந்திரன், நீச செவ்வாய் ஆகிய இருவரின் பாதிப்பைக் குறைத்து, நீசமும் பங்கமாகிறது. இது ஒரு சிறப்பு நிலை. இங்கு இவ்விரு கிரகங்களுமே தங்கள் சுயவீடுகளிலேயே இருப்பதாகக் கொள்ளலாம்.

உ. ஜா. 10
செவ்
குரு
சுக்

சனி
சந்
சூரி
புத

ஜாதகம் - 11
புத

உ. ஜா. 11
இராகு
செவ்,சுக்
கேது

சனி

      இந்த ஜாதகத்தில் (11) நீச புதன் குருவின் பரிவர்த்தனையால் உச்ச பலனைப் பெறுகிறது. பரஸ்பர பரிவர்த்தனையால் நீச கிரகம் உச்ச நிலை பெறுவது ஒரு சிறப்பு நிலையாகும். சனி உச்சம் பெற்றுள்ளது. சுக்கிரனுடனனா பரிவர்த்தனை முன்னர் குறிப்பிட்ட பரிவர்த்தனையான கிரகங்களைப் போல் உச்சம் அடைவதில்லை. மாறாக ஆட்சி பலம் மட்டுமே அடைகிறது. ஏனெனில், சனி தனது தீவிர பகை கிரகங்களான செவ்வாய் மற்றும் இராகு உடன் இருப்பதே காரணமாகும். இதன் காரணமாக சனி பலம் இழக்கிறது. அதுவும் நீச நிலைக்கும் கீழாக பலம் இழக்கிறது. இந்த கிரக நிலைகளின் காரணமாக ஜாதகர் மதிப்புமிக்க வேலையில் சேர்ந்து, அங்கே தனது செல்வாக்கை பயன்படுத்தி நினைத்த போதெல்லாம் தனக்கு சாதகமான இடத்திற்கு பணிமாற்றம் பெற்றுக் கொள்வார். அதுவும் தன் இருப்பிடத்திற்கு மிக அருகிலுள்ள இடத்திற்கோ அல்லது மாமனார் வீட்டுக்கு அருகிலோ மாற்றல் வாங்கிக் கொள்வார். மாற்றல் காரணமாக தங்கள் உறவுகளுடன் மகிழலாம், சொத்துக்களுக்கு மிக அருகில் இருக்கலாம், குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோருடன் சந்தோஷமாக காலத்தைக் களிக்கலாம் என்று நினைத்துக்கொள்வர். ஆனால், பல நேரங்களில் மாற்றலாகி ஏன் வந்தோம் ? – என்று வருத்தப்படும் அளவுக்கு அங்கே கஷ்டப்பட வேண்டியதிருக்கும். கர்மகாரகன் சனியின் பலம் இழந்த நிலையே இதற்குக் காரணம்.  உச்ச சனி மதிப்பு மிக்க பணியைத் தந்தாலும் பரிவர்த்தனை பலன் தராத நிலை, பகை கிரக தொடர்பு என்ற நிலையால் வேலையில் அதிக கஷ்டங்களை அனுபவிப்பார். அவர் நினைத்தபடி சுகமாயிருக்கும் என நினைத்த இடமாற்றம் தொல்லையாகிவிடும். எனவே, உச்சம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றாலும், அது தனது சொந்த வீட்டில் பகை கிரகங்களுடன் இணையும் போது பலன் மாறும் அசாதாரண நிலை ஏற்படுகிறது.

Tuesday, May 15, 2018

நாடியில் ஜாதக ஆய்வு -3

நாடியில் ஜாதக ஆய்வு -3

ஜாதகம் – 8
         இந்த ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் இராகுவின் பிடியில் பரிவர்த்தனை பெற்றுள்ளன. இதன் காரணமாக ஜாதகரின் பெற்றோர் நீர் மற்றும் வாகன விபத்தை எதிர்கொண்டு மீண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், சுக்கிரன் வக்ரமாகி உள்ளதால், ஜாதகரின் சகோதரி, பெற்றோர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் கடைசி (நீச சுக்கிரன்) மூச்சை இழுத்தாள்.  இந்த நீச சுக்கிரனால் ஜாதகர் தனக்கு சேர வேண்டிய பரம்பரை சொத்துக்கள் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டார். மேலும், இவரது மனைவி முறையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபட்டார்.
         முதலில், சனிக்கு 2 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் மலை போன்ற துன்பங்களை மனிதருக்கு தந்தது. செவ்வாய் கும்பத்திற்கு சென்று திரும்ப வந்த போது மீண்டும் எதிரிகளின் தொந்திரவு ஆரம்பமானது.
        
செவ்(வ)
உ. ஜா. 8
சூரி
சனி
இராகு
சந்திரன்

சுக் (வ)

         இது நமக்கு வக்ர கிரக நிலையில் உள்ள கிரகங்களின் மீதான துல்லிய ஆராய்ச்சியின் மூலமாகவே ஜாதக நிலைகள் ஆராயப்படவேண்டும் என்பதை அருதியிட்டுக் கூறுகிறது.
சோதனை அடிப்படையில், உச்ச கிரகங்களால் ஏற்படும் விசேஷமான தாக்கங்கள்.
         பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவின் அவதார ஜாதகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகத்தில், (9) ஜோதிடத்தில் நாடி விதிப்படி குரு இருக்கும் இடத்திற்கு 12 இல் குருவை வைத்தோமானால் இங்கு மிதுன இராசி ஜாதகரின் முந்தைய அவதாரத்தை குறிகாட்டும். புதனின் ஆட்சி வீடான மிதுனம், ஜீவன் காரகன் குரு விஷ்ணவின் அடையாளத்தைப் பெறுகிறார். ஏனெனில், புதன் விஷ்ணுவைக் குறிகாட்டுகிறது. இந்து பாரம்பரிய கதைகள் மூலமாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக இருக்கிறார். குருவை மிதுனத்தில் வைக்கும் போது மீனத்திலுள்ள புதனுடன் கிரக பரிவர்த்தனை பெறுகிறது. அங்கு சுக்கிரன் உச்சமாதலால் அங்கு மகாலட்சுமி வடிவில் ஶ்ரீ தேவியை அடைகிறார். புதன் பூமியைக் குறிகாட்டுவதால் பூதேவியை இணைகிறார்.

புத,சுக்

சூரி

கேது
உ. ஜா. 9
லக்// சந்
குரு
செவ்
இராகு

சனி

         ஶ்ரீதேவியைக் குறிப்பதாக சுக்கிரனை எங்ஙனம் கருதுவது ? கும்பத்திலுள்ள கேது கிரகங்களுக்கு உரிய வேராகக் கருதப்படுகிறது. மீனமும், கடகமும் வடக்கு திசையையும், கடக சந்திரன் நீரையும், மீன புதன் இலையையும், சுக்கிரன் தாமரையையும் குறிகாட்டுகின்றன. இந்த சின்னங்களை ஒருங்கிணைக்கும் போது கேது (வேர்கள்)+ சந்திரன்(நீர்)+ மீனம்(திருமகளின் இருப்பிடம் அல்லது தேவலோகம்)+ மீன புதன் (இலை) + சுக்கிரன் (மலரக் கூடிய தாமரை மொட்டு)  எனக் கொள்ளலாம்.
         மற்றுமொரு பூராண கதைப்படி மேஷம் காலபுருஷ தத்துவத்தின்- படைப்புக் கடவுளின் தலைப் பகுதி ஆகும். மீனம் பாதப் பகுதியாகும். மகாலட்சுமி விஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்து சேவை செய்வதை இது குறிகாட்டுகிறது. இலட்சுமியும் ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆகிறார். அதனாலேயே, மகாலட்சுமியை உச்ச சுக்கிரன் குறிகாட்டுகிறார். குரு ஜீவன் காரகர் ஆகிறார். கிழக்கே உதிக்கும் சூரியன்  தலைமையைக் குறிக்கிறார்.
          இராமா அவதாரத்தில் இராமன் மும்மூர்த்திகளின் ஸ்வருபமாக விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்கின்றனர். பிரம்மாவை குரு, கேது மற்றும் சுக்கிரன் குறிகாட்டுகின்றனர். படைப்பவன் பிரம்மா வலது கரத்தில் வேதப் புத்தகத்துடன் தாமரை மலரில் வீற்று, தியான ஜெபமாலையுடனும், அழிவற்ற அமுத நீரூற்றுடனும் காட்சி அளிக்கிறார்.
         இதையே வேறுவிதமாக பார்க்கும் போது கடகம் மற்றும் மீனம் வடக்கு திசையயை ஆள்கின்றனர். மீனம் தேவலோகம் ஆகும். குரு மீன இராசியின் பார்வையை பெறுகிறார். அங்கே புதன் தியான அறிவுக்கான புத்தகத்தை குறிகாட்டுகிறார். அதற்கு 12 ஆம் பாவமான கும்பத்தில் கேது தியானத்தையும், வாழ்க்கையில் இருந்து விடுபடுதலையும் குறிகாட்டுகிறார். சுக்கிரன் தெய்வீக தாமரை மலரைக் குறிகாட்டி, பிரம்மாவை நினைவுறுத்துகிறார்.
          புதனுடன் இணைந்த ஜீவன் குரு வட திசை இராசிக்கு உரியவர் பூதேவியை குறிகாட்டுகிறார். இது பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவையும் குறிபாட்டுகிறது.
          கடகத்தில் உள்ள குரு சந்திரனுடன் இணைந்து பார்வதியை குறிகாட்டுகிறார். அதற்கு 7 ஆம் பாவமான மகரத்தில் உள்ள செவ்வாய் ருத்திரன் ஆகிய மகேஸ்வரனைக் குறிகாட்டுகிறார்.
         இராமாவதாரத்தில் இராகு ஆகிய அரக்கர்களின் தலைவன் மகா துவாராதிபதியை (தலைவாசல் காவலன்) குரு, செவ்வாயின் (ஈஸ்வரன்) உதவியுடன் அழித்தான்.  இங்கு, இராமரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள், அவர் தனது வாழ்க்கையின் குறிக்கோள்களை அடைய எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருந்தது என்பதைக் காட்டுகின்றன.
         தொழிலுக்கான குறிகாட்டி சனி துலாத்தில் உச்சம் பெற்று, தந்தைக்கு காரகம் பெற்ற சூரியன் அதற்கு 7 ஆம் இடமான மேஷத்தில் உச்சம் பெற்று உள்ளார். சனிக்கு திரிகோணத்தில் கும்பத்தில் கேது ( மேற்கு திசை இராசிகள் துலாம் மற்றும் கும்பம்) இது வாழ்க்கையின் குறிக்கோளான பிறப்பிலிருந்து இறப்புவரையான வட்டத்தில் மனித விடுதலையைக் குறிகாட்டுகிறது. சனிக்கு அடுத்து உள்ள உச்ச செவ்வாய் உச்ச குருவால் பார்க்கப்படுகிறது. இங்கு செவ்வாய் பகவான் இராவணன், கும்பகர்ணன் போன்ற அரக்கர்களிடம் இருந்தும் சுக்ரீவன் போன்ற நல்லவர்களைக் காக்கவும் இராமனால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதங்களான வில்லும் அம்பையும் குறிகாட்டுகிறது. அடுத்து உச்ச சுக்கிரன் இராவணனிடம் இருந்து சீதாதேவியை விடுதலை செய்து காத்ததையும் குறிக்கிறது. முடிவில் உச்ச சூரியன் இராமனுக்கு அயோத்தி சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்துவைத்ததை குறிகாட்டுகிறது.
         இராவணன் சீதாதேவியை இலங்கைக்குக் கடத்திச் சென்று, சிறை வைத்ததற்கு அவளையே குற்றம்சாட்ட வேண்டும் எனக் குறிப்பிடபட்டு உள்ளது. இராமாயணத்தில், இராவணன் சீதையை பலவந்தமாக கடத்தி சென்று இலங்கையில் சிறைவைத்தததாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் சீதாதேவி, மகாலட்சுமியின் மனிதப்பிறப்பே ஆகும்.  இராவணன் பலவந்தமாகக் கடத்தியது மகாலட்சுமியின் மறு அவதாரமான மனிதப் பிறவி சீதாவையே கடவுள் மகாலட்சுமியை அல்ல  என்பது சில மிக புலமை வாய்ந்த நூல் ஆசிரியர்களின் கருத்து ஆகும்.
         இதற்கான விளக்கம் – சிம்ம இராசி அரசர்களின் மாளிகை ஆகும் இந்த மாளிகை வாசலின் வாயில் காப்போன் இராகு ஆவான். இந்த நிழல் கிரகம் அரக்கன் இராவணனையும் குறிகாட்டுகிறது. இடப் புறமாகச் சுற்றும் இராகுவுக்கு இரண்டாவது இராசி கடகம் ஆகும். இதன் அதிபதி சந்திரன் களங்கத்திற்கும், தோஷத்திற்கும், கெட்ட பெயர் எடுப்பதற்கும் காரகம் பெறுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி கடகமும், மீனமும் ஒரே வடதிசை இராசிகளாகும். எனவே, சந்திரன் ஒருதிசை கிரகங்களான மீனத்திலுள்ள சுக்கிரன், புதனுடன் தொடர்பு கொள்கிறது. இந்த சந்திரன், சுக்கிரன் தொடர்பே சீதா தேவிக்கு(சுக்கிரன்) ஏற்பட்ட களங்கத்திற்கு, கெட்ட பெயருக்கு (சந்திரன்) காரணமாகிறது.
         இராமனின் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன், புதன், சந்திரன் இணைவு இராகுவின் பாதிப்பு மற்றும் பார்வையால் இராமன் சந்தேகப்பட்டு சீதாவை குற்றம் சாட்டியதற்குக் காரணமானதோடு மட்டுமல்லாமல், அரக்கர்களால் சீதாவுக்கு ஏற்பட்ட தொல்லைகள், துயரங்களுக்கும் காரணமாயிற்று. குரு உச்சமாகி சந்திரனுடன் இணைந்து, பரிவர்த்தனை காரணமாக சுக்கிரன், புதன் தொடர்பால் மூன்று பெண் கிரகங்கள் குருவின் பலத்தைக் குறைத்துவிடுகின்றன. இராமனின் ஜாதகத்தை அலசினால் இன்னொரு இதிகாசம் எழுத வேண்டியதிருக்கும் ஆதலால் நாடியில் சில விதிகளுக்கு விளக்கத்தை மட்டுமே சொல்லியுள்ளோம்.