Saturday, June 18, 2016

  

அம்மாவும்ஆட்சியும்………… ?



       அம்மா என்று அனைவராலும் அழைக்கப்படும், மக்கள் முதல்வர் அம்மாவின் ஜாதகத்தை சென்ற பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அலசிய போது, அவருக்கு நடப்பு குரு திசை பலன்களைக் குறிப்பிட்டபோது, கீழ்கண்டபடி குறிப்பிட்டிருந்தேன்.

     அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் விரும்பியபடி, கனிகளைப் பறிப்பர். யாகங்கள், வேதத்தைப்பற்றிய அறிவு, கடவுள் பக்தி, சாத்திர அறிவு ஆகியவற்றைப் பெறுவார். நல்லவர், ஞானிகளின் நட்பு கிடைக்கும். மதிப்பு, மரியாதை உயரும். தலைமைப்பதவி தேடி வரும். கடந்த கால மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவு பெருகும். அரசாட்சி கைக்கு வந்து சேரும். அனைத்து வசதிகளும் பெருகும். மக்களால் போற்றி வணங்கப்படும் நிலை உருவாகும்.

             யாகங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற அனுகூலமான நிகழ்ச்சிகள் மூலமாக சந்தோஷம் பெருகும். மக்கள் பணிபுரிபவர்களுக்குத் தலைமைப்பதவி ஏற்கும் நிலை உருவாகும். தர்க்கங்களிலும், போட்டிகளிலும் வெற்றிகிட்டும். உயர்பதவிகள் வந்து சேரும். உயர்பதவிகளுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்று உயர்பதவியைப் பிடிக்கும் நிலை உருவாகும்.

          தற்போதைய சனி  –  புத்தியில் பொறாமை குணம்உடல் பலம் குறைவுஉள்ளூற மன சந்தோஷமின்மை ஆகியவை ஏற்படும்.அரசாட்சியைக் கைப்பிடித்தல்,  அரசாங்கத்தில் உயர் பதவியை அடைதல் ஆகியவை ஏற்படும்அதிக செலவுகள் ஏற்படும்ஆடைஆபரணங்கள்,செல்வநிலை உயருதல்வாகன வசதிகள் பெருகுதல் என எட்டாத உயரத்துக்குச் செல்லும் நிலையும் ஏற்படும்புகழ் மற்றும் உயர்நிலை ஏற்படும். அரசாள்பவரின் அனுகூலங்கள் கிடைக்கும். முன்னேற்றம், மதிப்பு, அதிர்ஷ்டம் யாவும் பெருகும். பல அரசர்களுக்கும் அரசராகத் திகழ்வார். சில இன்னல்களும் ஏற்படலாம்அதற்கு ருத்ர ஜபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் ஆகிய பரிகாரங்கள் செய்வது நலம்
          இனி, அம்மாவின் எதிர்காலம் என்ன ? – என்பது பற்றி தாஜிக முறைப்படி அவரது  68 - 69  வயதுக்கான  ( 2016-17 ) வருட பலன் பற்றி பண்டைய முனிவர்களின் கூற்றுப்படி ஆராய்வோம்.

          இது ஜனன ஜாதகத்தில் உள்ள சூரியன் இருக்கும் இடத்திற்கு, அடுத்த வருடம் சூரியன் வரும் காலத்தைக் கொண்டு கணித்து பலன் காண்பது வருட ஜாதகமாகும். வடமொழியில் இதை வருஷ பல்” – என அழைப்பர்.

         24 பிப்ரவரியில் பிறந்த அம்மா அவர்களின் முடிந்த வயது 68 – நடப்பு வயது 69 க்கான வருட ஜாதகம் 25 – 2 – 2016 அன்று பகல் 02 – 57 – 10  மணிக்கு வரும் சூரியனின் நிலை கணக்கின்படி உருவான ஜாதகம் கீழே ;

சுக்
கேது
சூரி,முந்தா
கேது
68- 69 வயது
2016 – 17
25-2-2016 முதல்    24–2-2017 வரை.
இராசி
சந்,முந்தா


நவாம்சம்
புத
செவ்
புதன்
சுக்
குரு()
இராகு
சூரி
சனி
லக்//
லக்//
செவ்
சனி
சந்
இராகு
குரு()

       பண்டைய நூலான, “நீலகண்ட தெய்வஞர் எழுதிய தாஜிக நீலகண்டீயம் என்னும் நூலின்படி வருட பலன்களைக் காண்போம்.

       இந்த வருட ஜாதகத்தில்  “வருசேஷா அல்லது வருடாதிபதி தேவகுருவான குரு’  ஆவார்.  சுமாரான பலமுடைய வருடாதிபதி குருதரும் பலன்கள் ஆவன.

      பல்வேறு புத்தகங்களை  படித்து வெற்றி பெறுவார்கள்பணியிடத்தில் அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் எதிர்ப்புகள் நிலவும்ஜீரண உறுப்புக்களில் எழும் உபாதைகளால் தொல்லைகள் ஏற்படலாம்.

       அரசு சம்பந்தமான விவகாரங்களில் மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகே வெற்றி கிடைக்கும்.

              அடுத்து இந்த வருடத்திற்கான முந்தா வின் நிலை. “முந்தா என்பது வருட ஜாதகத்தின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

        ஒருவர் பிறந்த காலத்தில், ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருக்கும் முந்தா ஒவ்வொரு வயதுக்கும் ஒரு இராசியாக முன்னேறும். ( இரண்டாவது வயதில் இரண்டாம் இராசிக்கட்டம் என ). இந்த 68 வது வயது ஜாதகத்தில் முந்தா வின் நிலையைப் பார்ப்போம்.

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா  வருட இராசிக் கட்டத்தில் இலக்னத்துக்கு 3ஆம் பாவத்தில் அமைகிறது.

இந்த வருட வருடாதிபதி (வருசேஷா) மற்றும் முந்தாவின் நிலைகள்.

வருசேஷா
குரு
முந்தா இருக்கும் இராசி
கும்பம்  – 20-43- 01
முந்தா இருக்கும் வீடு
3
முந்தேஷ் எனும் முந்தாதிபதி
சனி
முந்தாதிபதி இருக்கும் வீடு.
12

 மூன்றாம் பாவத்தில் உள்ள முந்தா தரும் பலன்கள் ;

தாஜிக நீலகண்டீயம் கூறும் பலன்.

       மூன்றாம் பாவத்தில் உள்ள  முந்தா வானது வாழ்க்கையில் மிக்க சந்தோஷ நிலையை தருகிறது செல்வ நிலை உயர்வையும்,துணிவுமிக்க செயல்பாடுகளால் மிக்க புகழையும் அளிக்கும்நல்ல நண்பர்களின் நட்பும் ஏற்படும்நற்குணம் மிக்க பெரியோர்கள் மற்றும் கடவுளை வணங்குவதிலும் ஈடுபாடு அதிகரிக்கும்ஆரோக்கியம் மிக்கவராகவும்கருணை உள்ளம் கொண்டு மக்கள் மத்தியில் புகழ் மிக்கவராகவும்மத்திய அரசின் ஆதரவு பெற்றவராகவும் இருப்பார்,என்கிறது.

ஹயான் பாஸ்கர் என்ற அறிஞரின் கூற்று என்ன ?

       “முந்தா” 3 இல் இருக்க வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்எதிரிகளை வென்று ஜெயம் கொள்வார்மதிப்புமரியாதை மேலும் உயரும்.ஆரோக்கியமும் சீராக இருக்கும்மத ஆர்வங்கள் கூடும்.அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் கூடும்என்று குறிப்பிடுகிறார்.
       3 ஆம் பாவத்தில் உள்ள முந்தா”   ஜாதகரை தனது புதிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாகவும்உயர் குறிக்கோள்களின் மூலமாகவும் உயரிய குறிக்கோள்களை சுலபமாக எய்துவார்ஜாதகரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சமூகத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தும்.கௌரவமும் கூடும்சக்தி மிக்க பெண்மணியாக விளங்குவதால் செல்வம்சுகம் மற்றும் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும்.எதிர்ப்பவர்கள் சிதறி ஓடுவர்வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்மத்திய அரசின் அனுகூலமும்முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்அருகிலுள்ளவர்கள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புக்கள் நன்மை பயக்கும்கடவுள் பக்திமத ஆர்வம் ஆன்மீகவாதிகளின் மீதான நம்பிக்கை கூடும்தீர்த்த யாத்திரைகள் ஏற்படலாம்சந்தோஷ சூழ்நிலைகளுக்கு மனம் இட்டுச் செல்லும்.


முந்தா உள்ள இராசி தரும் பலன் 

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா  சனியின் ஆதிபத்தியம் பெற்ற கும்ப இராசியில்  இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் சில அனுகூலமற்ற பலன்களும் நடக்கும்.  தடைகள்உடல் உபாதைகள் ஏற்படும். பயணங்களில் தொல்லைகள்இடமாற்றங்கள் ஏற்படலாம்வழக்குகளில் இழுபறி நிலை தொடரும்.
       “தாஜிக நீலகண்டி யில் – “முந்தா மீதான குருவின் பார்வை  ஜாதகி அரசியலில் சக்தி மிக்க பதவிக்கு வருவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, முந்தேஷ்  முந்தாதிபதி சனிவிரய பாவம் அமர்ந்து தரும் பலன்கள்.

        பொருளாதார முன்னேற்றங்கள் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.  எதிரிகளின் மூலமான தொல்லைகள் அதிகரிக்கும். மன உழைச்சல்உடல் உழைச்சல்கள் ஏற்படும்அரசாங்கம் மற்றும் அதிகாரிகளால் மனதில் படபடப்புடென்ஷன்கள் அதிகரிக்கும் உணர்ச்சி வசப்பட்ட மனநிலை, எரிச்சலூட்டும் தொடர்புகள், கால் தூசுக்குப் பெறாத எதிரிகளின் எதிர்ப்பு மற்றும் பயமுறுத்தல்கள், பணியில் அஜாக்கிரதை நிலை மற்றும் மன இறுக்கம் ஆகியவை ஏற்படும்.

சனியின்  இராசியில் உள்ள முந்தா தரும் பலன் 

        தடைகள் மற்றும் ஆசைகள் நிறைவேறாத நிலை, ஆரோக்கியக் குறைவு, இடமாற்றம் மற்றும் தேவையற்ற பயணங்கள் ஆகியவை ஏற்படும். வழக்குகளில் வெற்றியின்மை. முந்தா - சனியின் இராசியில் இருக்க அல்லது சனியால் பார்க்கப்பட அவமானங்கள் மற்றும் சொத்து இழப்பு ஏற்படும். குரு பார்க்க நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

       
         தற்போது - 69 வயது நடக்கும் போது, ( 24-2-2016 முதல் )  குரு மிகவும் சக்தி வாய்ந்த வருடாதிபதியாக வரும் போது மிக்க அனுகூலமான பலன்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.  நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும்அதன் காரணமாக வெற்றி மேல் வெற்றி கிட்டும்குடும்ப சந்தோஷம்புகழ்செல்வம்சாதகமான விழாக்கள்மிகவும் மதிப்பு மிக்க உயர் பதவிகள் கிடைக்கும்புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும்.திட்டங்களை முடுக்கிவிட்டு முடித்து வைப்பதில் அதிகாரிகளின் ஆதரவுமுழுவதுமாகக் கிடைக்கும்,  சமூக அந்தஸ்து மேலும் உயரும் மக்களின் நம்பிக்கை மற்றும் அரசியல் சேவைகள் கண்டிப்பாக வெற்றிக் கனியைப் பறித்துத்தரும்அதிகாரம் மற்றும் பொறுப்பு மிக்க பதவி கிடைக்கும் பதவி உயர்வு தவிர்க்க முடியாதது வெற்றிகள் மற்றும் போட்டிகளால்பணவரவு, வழக்குகளில் வெற்றிமதிப்புமரியாதைபுகழ்,பலம் பணியிடத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றல் என அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என எதிர்பார்க்கலாம்எதிரிகள் தானாகவே வந்து அடிபணிவர்மதிப்பு மரியாதைகௌரவம் அனைத்தும் கூடும்உடல் ஆரோக்கியம் சீராகும்மத ஆர்வம் கூடும்ஏற்கனவே குறிப்பிட்டபடி,புதிய திட்டங்களாலும்கொள்கைகளாலும் உயர்ந்த குறிக்கோள்கள் எட்டப்படும்.
       எனவே, தாஜிக வருடபலன் காணும் முறைப்படி சூழ்நிலை அம்மாவுக்கு கண்டிப்பாக சாதகமாகவே உள்ளது. இதுவே அம்மாவின் ஆட்சிக்கு அச்சாரம் - அறிதியிட்டுக் காட்டிடும் முத்தாரம்.

( இக் கட்டுரை ஏப்ரல் 2016 முதல் வாரத்தில் எழுதப்பட்டு, கடைசிவாரத்தில் குருவருள் ஜோதிடம் மே 2016 மாத இதழில் வெளியானது )

Tuesday, April 19, 2016

துர்முகி வருட உலகியல் பலன்கள்

             

                           உ
           துர்முகி வருட உலகியல் பலன்கள்





     துர்முகி வருடம் ஏப்ரல், 13 ஆம் நாள் 2016 அன்று இரவு 07 – 48 மணிக்குத் துவங்குகிறது.
      சப்தமி - திதியில் பிறப்பதால், வருட ஆரம்பத்தில் போதுமான மழை  அளவு குறைவாக இருந்தாலும் பின்னர் நல்ல மழை பெய்யும். அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படும்.
      புதன் - கிழமையில் பிறப்பதால் இரவு நேரங்களில் அதிக மழை பெய்யும்.
      புனர்பூசம் - நட்சத்திரத்தில் பிறப்பதால் வருட ஆரம்பத்தில் மழை இருக்கும். விலங்குகளுக்கும், மனித இனத்திற்கும் நோய்கள் அதிகரிக்கும்.
      சுகர்ம - யோகத்தில் பிறப்பதால் அதிக மழை பெய்வதோடு நாட்டில் சந்தோஷம் நிலவும்.
      விஷ்டி - கரணத்தில் ஆண்டு பிறப்பதால் மோசமான சூழ்நிலைகள், தடைபெறும் மழை. சந்தோஷம் நிலவும்.
      துலா இலக்னத்தில் பிறந்ததால் பயங்கர மழை இருக்கும். போர் சூழல் ஏற்படும். அரசாங்கத்துக்கு இடையே சண்டைகள். நல்ல அறுவடை ஏற்படுதல். நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும் பசுக்கள் நோய்வாய்ப்படும்.
துன்முகி வருட கிரக பதவிகள்
      இராஜாசுக்கிரன்நல்ல மழை பெய்து, பயிர்கள் விழைச்சல் அதிகரிக்கும். பசுக்கள் நிறைய பால் சுரக்கும். காதலர்களும், தம்பதிகளும் காதல் உணர்வோடு மகிழ்ச்சியாகத் திகழ்வார்கள்.
      மந்திரிபுதன் - கலப்பு பலன்கள் ஏற்படும். காற்று மேகங்களைக் கலைத்துவிடும். மக்களும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
      தளபதிசெவ்வாய்ஆட்சியாளர்களுக்கிடையே சண்டை. பயிர்கள் அழிதல். மக்களுக்குக் கஷ்டங்கள், காய்ச்சல் மற்றும் பாதிப்புகள் ஏற்படும்.
      சஸ்யாதிபதிசனிகடுகு, கருப்பு உளுந்து, கொள்ளு மற்றும் இதர கருப்பு தானியங்கள் ஆகியவற்றின் விளைச்சல் அதிகரிக்கும்.
      தானியாதிபதிகுருநல்ல மழை பொழிந்து நவதானிய உற்பத்தி அதிகரிக்கும். அன்னதானங்கள் பெருகும்.
இராசிகளுக்கான பலன்கள்
ஜென்ம இராசி
வருமானம்
செலவு
அரசு அனுகூலம்
மரியாதைக்
குறைவு
மேஷம்
2
8
1
7
ரிஷபம்
11
14
4
7
மிதுனம்
14
11
7
7
கடகம்
8
11
3
3
சிம்மம்
11
5
6
3
கன்னி
14
11
2
6
துலாம்
11
14
5
6
விருச்சிகம்
2
8
1
2
தனுசு
5
14
4
2
மகரம்
8
8
7
2
கும்பம்
8
8
3
5
மீனம்
5
14
6
5
முக்கிய கிரக நகர்வுகள் மற்றும் கிரகணங்கள்
      சௌரமான வருடம் துர்முகியில் சனி ஜூலை 9, 2016 வரை கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அதற்குப் பின் அனுஷ நட்சத்திரத்தில் செப்டம்பர் 17 -2016 வரையும் பிறகு செப்டம்பர் 18 - 2016 முதல் 26 – ஜனவரி – 2017 வரை மீண்டும் கேட்டையில் இருக்கிறார. விருச்சிகத்தை விட்டு தனுசு இராசிக்கு சனி 26 – ஜனவரி 2016 அன்று இரவு 7 – 30 க்கு பெயர்ச்சி அடைகிறார்.
      அனுஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் காஷ்மீரிகள், மந்திரிகள், குயவர்கள், வாணியர்கள், மணி தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு பாதிப்புக்கள் ஏற்படும். கேட்டையில் சஞ்சரிக்கும் போது ஆட்சியாளர்கள், அவர்களின் குருமார்கள், அரசிடம் சாதகமான பலன்களை எதிர்பார்ப்பவர்கள், இராணுவ வீரர்கள், கருத்தரங்கு நடத்துபவர்கள், வணிக சங்கங்கள் ஆகியோருக்கு சிக்கல்கள் எழும். மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது கோசாலா, காசி, பாஞ்சாலத்திலுள்ள மக்கள், பழவகைகள், மூலிகைகள் மற்றும் வீரர்களுக்குப் பிரச்சனைகள் எழும் என பிருஹத் சம்கிதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
      விருச்சிகச் சனி கால்நடைகளுக்கு நோய்கள் பாதித்து சாவு எண்ணிக்கை கூடும். ஆட்சியாளர்களுக்குள் சண்டைகள், மனிதாபிமானமற்ற நிகழ்வுகள் மற்றும் மேன்மக்களுக்கு அபாயங்களும் ஏற்படும். ஒரு வருடத்திற்கும் மேலாக கஷ்டங்கள் தொடரும்
      தனுசுவில் சனி அமரும் போதுமேகங்கள் திரண்டாலும் மழை ஏமாற்றும். ஆள்பவர்களுக்கு அச்சத்தையும், பூகம்பம். குஜராத்தில் கஷ்டங்கள், குழப்பங்கள் மத்தியப் பிரதேசத்தில் கொள்ளைகள், இடையூறுகள், தீ விபத்துக்கள், அரசியலில் புயல் வீசுதல் ஆகியவை ஏற்படும். மார்வாரில் கஷ்டங்கள், போர் போன்ற சூழல்கள், மக்களுக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் ஏற்படும்.
      குரு ஆகஸ்டு 11 – 2016 இரவு 9 – 27 க்கு கன்னிக்குப் பெயர்ச்சி அடைகிறார். நல்ல மழை தரும் அவர், மக்களுக்கு நல் ஆரோக்கியத்தையும், தானிய விருத்தியையும் அளிக்கிறார்.
      செவ்வாய் ஏப்ரல் 13 – 2016 முதல் ஜூன் – 4 – 2016 மற்றும் ஜூலை 12 – 2016 முதல் செப்டம்பர் 12 – 2016 வரை விருச்சிகத்தில், சனியோடு சமாகமத்தில் உள்ளார். சனியுடனான சரியான செவ்வாயின் இணைவு ஆகஸ்டு 24 – 2016 அன்று மாலை 04 – 56 மணிக்கு ஏற்படுகிறது. செவ்வாய் ஏப்ரல் 18 – 2016 ல் வக்கிரம் அடைந்து, ஜூன் 30 – 2016 அன்று நேர்கதி அடைகிறது. இந்த வக்கிர நிலை குஜ ஸ்தம்பனம் என அழைக்கப்படுகிறது. செவ்வாயின் ஆட்சி வீடான விருச்சிகத்தில் ஏற்படும் சனி, செவ்வாயின் சமாகம நிலை, குஜ ஸ்தம்பன நிலை உலக நாடுகளில் பல பேரழிவுகளை, இயற்கை சீற்றங்களை ஏற்படுத்தும்.
      இந்த இரு வானியல் நிகழ்வுகள் உலகின் சில பகுதிகளில் இயற்கை சீற்றங்களால் அழிவுகள், வெப்ப அலைகளால் பாதிப்பு, தீவிர பூகம்பம், வெள்ள பாதிப்புகள், சுனாமி, நிலச்சரிவுகள், எரிமலை கொந்தளிப்பு, தீவிரவாத தாக்குதல்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள், தீ விபத்துக்கள், வெடி விபத்துக்கள், குண்டு வீச்சு, போர் சூழல்கள் அல்லது படைகளைத்தயார் நிலையில் வைத்தல், போராட்டங்கள், கொலைகள், அரசியல் குழப்பங்கள், ஆட்சி மாற்றங்கள், ஜனநாயகப் படுகொலைகள் ஆகிய அனைத்துவித அழிவுகளையும் பல நாடுகள் சந்திக்கும். துருக்கி, சிரியா, இராக், ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், அரேபியன் பெனின்சுலா, ரஷ்யா, பிரான்ஸ், ஹங்கேரி, சிலி, பெரு, கொலம்பியா, அமெரிக்கா, கனடா, நேபால், பங்களாதேஷ், தாய்லண்ட், சைனா, சிங்கப்பூர், மலேசியா, வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேலான கெடுதல்கள் ஏற்படும்.

      துர்முகி வருடத்தில் 2 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணம் என 4 கிரகணங்கள் ஏற்படும். முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. 2 வது சந்திர கிரகணம் பகுதி தெரியும், 3 வது சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். அடுத்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இவை இந்தியா, பாகிஸ்தான், ஶ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா ஆகியவற்றில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும்.