உ
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
செப்டம்பர் -- 2014 மாத ராசிபலன்;;;;
கேது
| |||
1-செப்டம்பர் – 2014
ஆவணி-16
திங்கள்
|
குரு
சுக்
| ||
சூரி
| |||
சந்
|
செவ்
சனி (வ)
|
புத
இராகு
|
கிரக மாற்றங்கள்
செவ்வாய் – விருச்சிகம் – 2 – 9 – 2014.
சூரியன் – கன்னி – 17 – 9 – 2014.
சுக்கிரன் – சிம்மம் – 1 – 9 – 2014 ( இரவு - 10 மணி ) மற்றும் கன்னி 26 – 9 - 2014
சனி – வக்ர நிவர்த்தி – 9 – 9 - 2014
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, ல, லெ, லு, லே, லோ,அ )
ஆசை, தைரியம், பிடிவாதம், சாமர்த்தியம் உடைய மேஷராசி வாசகர்களே!
உங்கள் இராசிநாதன் செவ்வாய் நல்ஆரோக்கியத்தையும், மனமகிழ்ச்சியையும், பகைகளை வெல்லும் திறனையும், அளிக்க வல்லவன் அல்லன் அதுவே ருண பாவ புதனால். செல்வச் செழிப்பையும், முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் தருகிறான். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சூரியனால் முற்பகுதியில், நண்பர்களால் தொல்லையும் பிற்பகுதியில் தன விருத்தியும் ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு குருவால் மனநிம்மதி கெடலாம். சுக்கிரன் வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்களை அளிக்கும் நிலையில் இல்லை. சனி பயணங்களைத் தருவார். அப்போது விபத்து பயம் ஏற்படும். எச்சரிக்கை தேவை. பல வகையிலும் செல்வத்தையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், இராகு அளிக்கிறார், வியபாவ கேது, ஞான மார்க்கத்தில் ஆர்வத்தையும், ஆன்மிக சிந்தனைகளையும் அளிப்பார். பொதுவாக மேஷ இராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பர். குழந்தைகளின் முன்னேற்றங் கண்டு வாழ்க்கையில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வப் பிரார்த்தனைகளால் வேண்டியது நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் ; புதிய திட்டங்கள், புதிய நுணுக்கங்களைக் கைக் கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். சிலருக்கு வங்கி சம்பந்தமான கடன் விவகாரங்களில் அனுகூலம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு ஆதாயம் பெருகும். உண்மையான உழைப்பே உயர்வுதரும். விவசாய விளைபொருட்களால் நல்ல ஆதாயம் கிட்டும். வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
பெண்கள் ;- திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும். பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றிட உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர், செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும். சுயதொழில் புரியும் பெண்கள் தங்கள் தொழிலில் புதிய பரிமாணங்களை சுலபமாக எட்டுவர்.
மாணவர்கள்;- மாணவ, மாணவிகள் பள்ளியில் படிக்கும் பாடங்களை வீட்டில் திரும்பத் திரும்பப் படித்து மனதில் பதியவைத்து, விளையாட்டுத்தனமாக இருக்காமல் கவனமாகப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 1 – 9 –2014 காலை 09 – 02 மணி முதல், 03 – 9 – 2014 பகல் 1 – 55 மற்றும் 28 – 9 – 2014 மாலை 4 – 39 மணி முதல் 30- 9 - 2014 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 1 மற்றும் 9 ஆகும். கவரும் எண்கள் 4 மற்றும் 8 ஆகும். சாதகமான எண்கள் 2, 3, 5 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 6 மற்றும் 7 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- சிகப்பு, மஞ்சள், செம்பு மற்றும் தங்க நிறமாகும் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் கருப்பு ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- செம்பவழம் செம்பில் அல்லது வெள்ளியில் பதித்து வியாழக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – விருச்சிகம், மாதம் – கார்த்திகை, கிழமை – ஞாயிறு, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள் – பிரதமை, சஷ்டி மற்றும் ஏகாதசி ஆகும். யோகம் -- விஷ்கம்பம், கரணம் -- பவம் ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – இ, உ, எ, ஒ, வ, வி, வு, வே, வோ )
உறுதியான செயலும், உயர்பதவிக்கான ஆளுமைத் தகுதிகளும் உடைய ரிஷபராசி வாசகர்களே !
தங்கள் இராசிநாதன் தங்களை நற்செயல்களில் ஈடுபடுத்தி, மனமகிழ்ச்சியையும், அனைத்து வசதிகளையும் தந்து, நல்ல அறிவையும், நல்ல நண்பர்களையும் அளிப்பான். சூரியனால் சிந்தனா சக்தி மற்றும் நிர்ணயத் திறன்கள் குறையும். 6 இல் உள்ள செவ்வாய், மிக முக்கியமாக ஈடுபடும் செயல்பாடுகளில் வெற்றிகரமான நல்ல முடிவுகளை மற்றும் இலாபங்களை அளிக்கிறான். சந்தோஷம், நோயினின்று விடுதலை மற்றும் அதிகாரத்திலுள்ள நல்ல மனிதர்களின் தொடர்பையும் ஏற்படுத்துகிறான். சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்களைத் தருவான் புதன், குருவோ தன் பங்குக்குத் தடைகளையும், பணி மாற்றங்களையும் தரலாம். தனக்கென ஒரு தனி வீடு தருவான் சுக்கிரன். திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவற்றையும் அளிக்கிறான். எதிலும் வெற்றியையும், எல்லாவற்றிலும் முன்னேற்றத்தையும் தரும் சனி, தசா, புத்தி சாதகமானால், இராஜயோகத்தையும் அளிக்கிறான். பஞ்சம இராகு குழந்தைகளால் தொல்லைகளை ஏற்படுத்துவான். இலாப பாவக் கேதுவால் பயிர் விளைச்சல் அதிகரிக்கும், நீதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான காலம். உத்தியோக உயர்வு மற்றும் வருமான உயர்வு உண்டு. மூத்த சகோதரருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். மொத்தத்தில் ரிஷபராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்பட, உங்கள் காட்டில் மழைதான்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம்; இறைபக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். கோவில் திருப்பணிகள் செய்வர். வாகனயோகம் ஏற்படும். பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும்.
தொழில் மற்றும் வியாபாரம்; பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுயதொழில் புரிபவர்கள், பணியாட்களின் பூரண ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையடையும். எதிரிகளின் செல்வம் வந்து சேரும்.
பெண்கள்; உறவுகளிடையே நல்லுறவு அதிகரிக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்குப் புதிய ஆர்டர்கள் மூலமாக ஆதாயம் பெருகும். பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உயர் பதவிகள், பாராட்டுக்கள் கிடைக்கும்.
மாணவர்கள்; மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகிட்டும் வாய்ப்புகள் உருவாகும். வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். பணிக்காக போட்டித்தேர்வு எழுதுபவர்கள், வெற்றி பெற்று முன்னேற்றமடைவர்.
சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 03 – 9 – 2014 பகல் 1 - 56 மணி முதல், 05 – 9 – 2014 மாலை 05 – 09 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 2 மற்றும் 8 ஆகும். கவரும் எண்கள் 7 மற்றும் 9 ஆகும். சாதகமான எண்கள் 1, 3, 4 மற்றும் 6 ஆகும். அனுகூலமற்ற எண் 5 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- பிங்க், பச்சை, வெள்ளை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் சிகப்பு ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- வைரத்தைத் தங்கத்தில் பதித்து வெள்ளிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – சிம்மம், மாதம் – மார்கழி, கிழமை – சனி, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள் – பஞ்சமி, தசமி மற்றும் பெளர்ணமி ஆகும். யோகம் -- சுக்கிலம், கரணம் -- சகுனி ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – கா, கி, கு, க, ஞ, ச, கே, கோ, ஹ )
வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், மாற்றங்களை விரும்புவர்களுமான மிதுனராசி வாசகர்களே !
அனுகூலமான நிலையில் அமர்ந்திருக்கும் இராசிநாதன் புதனால் புத்தி தெளிவு பெறும். கல்வியில் வெற்றி கிட்டும். கௌரவம், சாமர்த்தியம் ஆகியவை உயரும். தன பாவ குருவால் அழகிய மனைவி அமைவாள். செல்வம் சேரும். வெற்றிகளால் மகிழ்ச்சியும், புத்திர பாக்கியமும் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். முற்பகுதியில் சுய சம்பாத்தியத்தால் செல்வத்தைத் தருகிறான், சூரியன். பிற்பகுதியில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தலாம். அதிகாரம் செய்யும் முக்கிய பதவி, அந்தஸ்து, மரியாதை ஆகியவை சுக்கிரனின் தயவால் கூடும். நல்ல நண்பர்களையும் அளிக்கிறான். சனியோ, வீண் செலவுகளையும், குழப்பங்களையும் தருகிறான். இராகு, உறவுகளுக்கிடையே இடியாப்பச் சிக்கல்களை உருவாக்கிவிடுகிறான். புண்ணியத்தல யாத்திரைகள், மடாதிபதிகள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் ஆகியவற்றைக் கேது அளிப்பார். மொத்தத்தில் மிதுன இராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம்; ஆரோக்கியம் பெருகும். எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைச் செய்து முடிப்பர். திருக்கோவில் திருப்பணிகள் செய்வர். வீட்டில் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நிகழும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். திருமணம் மற்றும் வம்ச விருத்தி ஏற்படும்.
தொழில் மற்றும் வியாபாரம்; தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்களும், அரசு உதவிகளும் மிகுந்த சிரமத்துக்கிடையே கிடைக்கும். விவசாயப் பணிகள் சுமாராக நடந்து, ஓரளவு ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். தீவிர பரிசீலனைக்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடுகள் செய்யலாம். பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். கலைத் துறையினருக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
பெண்கள்; பணிபுரியும் பெண்களுக்குப் புதிய வாகனயோகம் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவு பணி உயர்வுக்கு வழிவகுக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்குப் பணியாளர்களின் ஒத்துழைப்புப் பெருகி, உற்பத்திப் பெருக்கத்தால், ஆதாயமும் பெருகும். கணவன் மற்றும் உறவுகளின் உதவிகளும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்
மாணவர்கள்; கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமும் ஏற்பட்டு, வெற்றிகளும் குவியும். நல்ல முன்னேற்றங்கண்டு பெற்றோர்க்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் பெருமை தேடித்தருவர். தேர்வுகள் மாணவர்கள் தேவையற்ற வேலைகளில் ஈடுபடாமல், படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 05 – 9 – 2014 மாலை 05-10 மணி முதல், 07 – 9 – 2014 இரவு 07 – 34 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 7 மற்றும் 3 ஆகும். கவரும் எண்கள் 5 , 6 மற்றும் 9 ஆகும். சாதகமான எண்கள் 1 மற்றும் 2 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 4 மற்றும் 8 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், பர்ப்பிள், பச்சை, நீலம் மற்றும் பிங்க் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் கருப்பு மற்றும் சிகப்பு ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- மரகதம், மஞ்சள் புஷ்பராகம் 3, 5, 7 அல்லது 10 கிராம் தங்கத்தில் பதித்து புதன் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – மகரம், மாதம் – ஆடி, கிழமை – திங்கள், நட்சத்திரம் -- ஸ்வாதி, திதிகள் – பிரதமை, சப்தமி மற்றும் துவாதசி ஆகும். யோகம் -- பரிகம், கரணம் -- கெளலவம் ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். பச்சைப் பட்டாடையும், மரகதமும் அணிந்தாலும், ஸ்வர்ணதானம் அல்லது பாசிப்பயிறு தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலனறிய – ஹி, ஹூ, ஹே, ஹோ, ட, டி, டு, டே, டோ )
வல்லவரும். அடிக்கடி மாற்றங்களையும் பயணங்களையும் விரும்பக் கூடிய கடக இராசி வாசகர்களே!
இம் மாதம் நல்ஆரோக்கியம், சந்தோஷம், தனலாபம், அனைத்திலும் வெற்றி, பலம், உயர்பதவிகள், அதிகாரங்கள், மதிப்பு மரியாதை மற்றும் குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சி என நற்பலன்கள் ஏற்படும் முற்பகுதியில் கோபம் அதிகரிக்கும். பிற்பகுதியில் சொத்துக்கள் சேரும், தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலமாக கஷ்டமும், சுகமும் மாறிமாறி வரும். சிலருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். தைரியக் குறைவு ஏற்படும். கலைத் துறையில் உள்ளவர்களுக்குப் பரிசுகளும், பாராட்டுக்களும் குவியும். சிலருக்கு அரசாங்கக் கெடுபிடிகள் அதிகரிக்கும். நிம்மதி இன்மையால் தூக்கம் கெடும். புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயங்கள் கிட்டும். புதிய செயல்கள் எதுவும் தொடங்காது இருப்பது நல்லது. இருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிக்காமல், இருப்பதைக் காப்பதே பயனளிக்கும். இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பெண்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். சிலருக்கு மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மொத்தத்தில் கடகராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; திறமை மிக்கவராக விளங்குவார். பயணங்களும் அதனால் லாபமும் ஏற்படும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானம், கடின உழைப்புக்குப் பின் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். சிலர் பிறரால் ஏமாற்றப்படலாம். கவனம் தேவை
தொழில் மற்றும் வியாபாரம்; அரசுப்பணி புரிபவர்களுக்கு எதிர்பாராதவிதமாக திடீரென இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். விவசாயிகள் விவசாயத்தில் புதிய முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முனைவர். பஞ்சு, கம்பளி, துணிவகைகள், எண்ணவகைகள், அவரை, பார்லி ஆகிய பொருட்களின் விளைச்சல் ஆதாயம் தரும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய தொழில்கள் மூலமாக பணவரத்து அதிகரித்து உயர்வும் ஏற்படும்.
பெண்கள்; பணியிடங்களில் அனுகூலமான சூழல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தார் ஒத்துழைப்பால் வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டொடும். கடின பிரயாசைக்குப் பிறகே அரசின் உதவிகள் கைக்குக் கிடைக்கும் எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தல் வேண்டும், இல்லையெனில் கவனக்குறைவால் காரியங்களில் தடைகள் ஏற்படும். அரசில் பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து, ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் நன்மைபயக்கும்.
மாணவர்கள்; மாணவர்களுக்கு அறிவுத்திறனும், கல்வியிற் தேர்ச்சியும் அதிகரிக்க படிப்பில் அதிக கவனம் தேவை. வாகனங்களில் வேகத்தைக் குறைத்து விவேகமாகச் சென்றால் விபத்தைத் தவிர்க்கலாம். கவனம் தேவை. தேர்வுகள் நெருங்குவதால் மிகுந்த அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். மாணவர்கள் தங்கள் நினைவாற்றல் பெருகவும், கல்வித்திறன் அதிகரிக்கவும் ‘ ஹைக்ரீவர் ஸ்லோகத்தை தினமும் சொல்லுதல் வேண்டும்.
சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 07 – 9 - 2014 இரவு 7 – 35 மணிமுதல் 09 – 09 – 2014 இரவு 10 – 04 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 4 மற்றும் 6 ஆகும். கவரும் எண்கள் 8 மற்றும் 1 ஆகும். சாதகமான எண்கள் 2, 7 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 3 மற்றும் 5 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- வெள்ளை, க்ரீம், சிகப்பு, மற்றும் மஞ்சள் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம் மற்றும் பச்சை ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- வெள்ளியில் பதிக்கப்பட்ட முத்து மோதிரத்தைத் தங்கத்தில் பதித்து திங்கள் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – சிம்மம், மாதம் – மாசி, கிழமை – புதன், நட்சத்திரம் -- அனுஷம், திதிகள் – துவிதியை, சப்தமி மற்றும் துவாதசி ஆகும். யோகம் -- வியாகதம், கரணம் -- நாகவம் ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து சிவபெருமானுக்கு நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெண்மையான ஆடையணியவும், வெண்மையான மலர்களை அர்ச்சித்தலும், சங்குதானம் அல்லது பச்சரிசி தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள், பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – ம, மி, மு, மெ, மோ, டி, டு, டே, டோ )
திறமை மிக்கவரும் மற்றும் அறிவுத்திறன் மிக்கவருமான சிம்மராசி வாசகர்களே !
தங்கள் இராசிநாதன் சூரியன் முற்பகுதியில் தனு பாவத்தில் அமர்ந்து மகிழ்ச்சிக் குறைவைத் தந்தாலும் பிற்பகுதியில் செல்வச் சேர்க்கை, புத்திரபாக்கியம், வெற்றி, புகழ், பேச்சால் ஆதாயத்தையும், அனைவராலும் விரும்பப்படும் நிலையையும் தருவார். புதன், சிலருக்குக் குடும்பத்தில் குழப்பம், அவப்பெயர் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். விரய பாவ குருவால் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சுக்கிரன். புதிய பதவி, புதிய பொறுப்பு, நவீன பொருட்களின் சேர்க்கை, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றைத் தருவார். சகோதர பாவச் செவ்வாய், திருமணம். பயிர், மனை, சகோதரரால் நன்மை ஆகியவற்றைத் தருவார். இனிய விழாக்களும், பதவிகளும், எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றியும் சனியால் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமும், இளைய சகோதரர்களால் மற்றும் சிறுபயணங்களால் ஆதாயமும் கிடைக்கும். எழுத்து மற்றும் பதிப்பித்தல் துறையில் முன்னேற்றமும் ஏற்படும். மொத்தத்தில் சிம்மராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம்; ஆரோக்கியமும், அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் பெருகும். நல்ல பணியாளர்கள் அமைவர். மனைவியின் ஒத்துழைப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்திற்காகச் செல்லும் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நல்ல சந்ததிகள் உருவாகும்.
தொழில் மற்றும் வியாபாரம்; தொழிலில் இருந்தவந்த மந்த நிலைகள் மாறி தொழில் சூடுபிடிக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைப் புகுத்தி அதன் மூலமாக அதிக லாபமடையலாம். தாதுப் பொருட்கள், உதிரிப்பாகங்கள் அல்லது மென்பொருள் துறைகளில் விற்பனை சூடுபிடிக்கும். அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்கு இலாபம் அதிகரிக்கும். தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகி இலாபம் பெருகும்.
பெண்கள் ; பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளால் நல்ல எதிர்காலம் அமையும். திட்டமிடப்படி புனிதப் பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் அமையும். பொறுப்பற்ற பிள்ளைகளால் மனஅமைதி குறையும். சிலர் தங்கள் பணிகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தங்கள் சாமர்த்தியத்தால் முறியடித்து முன்னேறுவர்.
மாணவர்கள் ; மாணவர்கள் நன்கு படித்து தேர்வுகளில் வெற்றிபெற முடியும். கருத்துடன், கவனமாகப் படித்தல் அவசியம். எந்தக் ஒரு காரியத்தையும் நாளைக்கென்று ஒத்திப் போடாமல் இன்றே செய்து முன்னேற முயலவேண்டும். விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் வெற்றிகளைக் குவிப்பர்.
சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 09 – 09 - 2014 இரவு 10 – 05 மணிமுதல் 11 – 09 - 2014 இரவு 1 – 30 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்டக் எண்கள்;- 1, 4, 5, 6 மற்றும் 9 ஆகும். சாதகமான எண் 3 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 2, 7 மற்றும் 8 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்சு, சிகப்பு மற்றும் பச்சை, க்ரீம், ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- தங்கத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கம் அல்லது மரகத மோதிரத்தைத் தங்கத்தில் பதித்து ஞாயிற்றுக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – மீனம், மாதம் – ஆடி, கிழமை – புதன், நட்சத்திரம் -- மூலம், திதிகள் – திருதியை, அஷ்டமி மற்றும் திரயோதசி ஆகும். யோகம் -- திருதி, கரணம் -- பவம் ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து அர்த்தநாரீஸ்வர்ரை நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல்,சிகப்பு ஆடையணியவும், சிகப்பு மலர்களால் அர்ச்சித்தலும், கோதுமைதானம் அல்லது சிகப்புப் பசு தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – டோ, ப, பி, பூ, ஷ, ந, ட, பே, போ )
மாறக்கூடிய மனமுடையவரும், எதையும் ஒழுங்காகத் திட்டமிட்டுச் செய்பவருமான கன்னிராசி வாசகர்களே!
தங்கள் இராசியதிபதி புதன் கல்வியில் தடையும், சகோதர விரோதமும் ஏற்படும். ஆயினும் இலாபத்தில் குரு இருப்பதால் செல்வம் சேரும், அரசியல் அதிகாரம் உண்டாகும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பெரும் புள்ளிகளின் நட்பின் காரணமாக முன்னேற்றம் அடைவர். நல்ல சந்ததி ஏற்படும். பணம் பல வழியிலும் பணம் குவியும். வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். சிலருக்கு வீண் செலவுகளும், தந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்படும். சுக்கிரன், மணவாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செல்வாக்கையும், கௌரவத்தையும் தருவார். தங்களுக்கு உதவிகரமான நண்பர்களையும், நல்ல செயல்பாடுகளைச் செய்யும் நிலையையும், புகழையும் தருவார். எடுத்த காரியங்களில் வெற்றிகளையும் தருகிறான். செவ்வாய் சிலருக்கு மனநிம்மதியைக் குறைக்கலாம். கேதுவின் அமர்வு சிலருக்கு முறைமீறிய காதலைத் தந்து, கட்டாயத் திருமணத்தில் முடியலாம். வேண்டாத விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. மொத்தத்தில் கன்னிராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; குடும்பத்தில் சுகசௌகரியங்கள் பெருகும். பணவரவு அதிகரிக்கும், புதிய நண்பர்களால் சந்தோஷம் கூடும். இனிய பயணங்களால் இன்பம் சேரும். நல்ல செய்திகள் வந்து சேரும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரம் ; கடன் தொல்லைகள் தலைதூக்கினாலும், பிற்பகுதியில் நிலைமை சீரடையும். அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு பதவிமாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தை அதிகரிக்கப் புதிய யுக்திகளைக் கையாள்தல் அவசியம்.
பெண்கள் ;- பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் முழுத் திருப்தி ஏற்படும். உயர் அதிகாரிகளின் உதவியால் மன உழைச்சல்கள் குறையும். தேவையற்ற செலவுகளைக் குறைத்தால், கடன்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம். அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துப் பத்திரப் பதிவு செய்தால் ஏமாறும் வாய்ப்பு குறையும்.
மாணவர்கள் ;- மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். சுயமுயற்சியும், தன்நம்பிக்கையுமே மாணவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தங்களின் கடின உழைப்பால், விளையாட்டுத் துறையில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் இதுவரை எட்டியிராத உயரத்தினை எட்டுவர்.
சந்திராஷட்டமம்; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 11 – 09 - 2014 இரவு 1 - 31 மணிமுதல் 14 – 09 - 2014 காலை 6 – 44 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 2, 3, 5, 6 மற்றும் 7 ஆகும். சாதகமான எண்கள் 4 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1 மற்றும் 8 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகம், முத்து, பச்சை, வைரம், மரகதம் இவற்றிலொன்றை தங்கத்தில் பதித்த மோதிரத்தைத் புதன் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – சிம்மம், மாதம் – புரட்டாசி, கிழமை – சனி, நட்சத்திரம் -- திருவோணம், திதிகள் – பஞ்சமி, தசமி மற்றும் பௌர்ணமி அல்லது அமாவாசை ஆகும். யோகம் -- சுக்கிலம், கரணம் -- கௌலவம் ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ மஹாலட்சுமியை நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், பச்சை வண்ண ஆடையணியவும், மலர்களால் அர்ச்சித்தலும், ஸ்வர்ணதானம் அல்லது துவரைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – ர, ரி, ரு, ரே, ரோ, த, தி, து, தே )
துலாக்கோல் போல் சமமான நிலையுடையவரும், சமுதாயத்தை சீர்திருத்தப் பிறந்தவருமான துலாராசி வாசகர்களே !
தங்கள் இராசிநாதன் இலாப பாவத்தில் அமர்ந்து சுகத்தையும், தனலாபத்தையும், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷத்தையும் தருவார். இனிய பயணங்களால் இன்பம் சேரும். நல்ல செய்திகள் வந்து சேரும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. உறவுகளுக்கு உயர்வைத்தரும் புதன், பலரின் நட்பு மற்றும் உதவி இருந்தும் காரியத் தடைகளைத் தருவான். முற்பகுதியில் சூரியன், பலவழிகளிலும் பணவரவையும், அரசு மூலம் ஆதாயத்தையும், மகிழ்ச்சி, உயர்கின்ற அந்தஸ்து, பிறர் காட்டும் மரியாதை அனைத்தும் கூடும். பிற்பகுதியில் குடும்ப ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பை ஏற்படுத்தலாம். சிலருக்குச் செவ்வாய் மனவருத்தத்தையும், சனி பிரிவையும், குரு இடமாற்றத்தையும் தந்தாலும், கேது வித்வத்துவத்தையும், வாக்கு வன்மையையும் தருவார். ஞான முயற்சியும், நற்சிந்தனையும் உயர்வைத்தரும். உங்கள் திறமைகளைக் காட்டும் சுயமுயற்சிகளை, தன்னம்பிக்கையைக் கூட்டி தைரியத்தையும் அளிப்பார். ஒருவர் நன்மை தந்தால் மற்றவர் தீமை செய்வதுதானே கிரகங்களின் இயல்பு, எனவே, கவலை வேண்டாம். மொத்தத்தில் துலாராசி அன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- அன்பாலும், பாசத்தாலும் குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் சீராகும். பொறுமையுடன் வாழ்ந்தால் பெருமை சேரும். எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே வீட்டுத் தேவைகளுக்குப் பணவரவு போதுமானதாக அமையும். எதிரிகள் அடங்குவர். கஷ்டங்களும், கவலைகளும் மறைந்து, தெளிவும், தெம்பும் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் ;- புதிய தொழில் நுட்பங்களால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழில் அபிவிருத்தியடையும். விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவிகள் விரைந்து கிடைக்கும். விளைச்சல் பெருகி இலாபமும் அதிகரிக்கும். கடுகு, உளுந்து மற்றும் கோதுமை ஆகியவற்றின் விற்பனை அதிகரிக்கும். பிறருக்குக் கொடுக்கப்பட்ட, நெடுநாளையக் கடன்கள் வசூலாகும்.
பெண்கள் ;- மேலதிகாரிகளின் மேன்மையான ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மேன்மையைத் தரும். சிலரின் காதல் விவகாரங்களில் ஏமாற்றங்கள் தலை தூக்கலாம். விரும்பியபடி வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்பட்டு அதனால் ஆதாயம் பெருகும். வீட்டில் விருந்தினர் வருகையால் வீட்டுப் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.
மாணவர்கள் ;- காலம் பொன் போன்றது எனவே, மாணவர்கள் முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற முயலவேண்டும். பெற்றோர்களின் கஷ்டங்களை உணர்ந்தாலன்றி வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் அடையமுடியாது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர் சிலர்.
சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 14 – 09 - 2014 காலை 6 - 45 மணிமுதல் 16 – 09 - 2014 பகல் 2 – 23 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 1, 2, 4, மற்றும் 7 ஆகும். சாதகமான எண் 8 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 5, 6, 3 மற்றும் 9 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், வெள்ளை மற்றும் சிகப்பு ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- வைரத்தை, தங்கத்தில் அல்லது பிளாட்டினத்தில் பதித்த மோதிரத்தைத் வெள்ளிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – கன்னி, மாதம் – தை, கிழமை – வியாழன், நட்சத்திரம் -- சதயம், திதிகள் – சதுர்த்தி, நவமி மற்றும் சதுர்த்தசி அல்லது அமாவாசை ஆகும். யோகம் -- சுக்கிலம், கரணம் -- தைதுலம் ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ இராமபிரானை வணங்கி, நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், வெள்ளை வண்ண ஆடையணியவும், வெள்ளை மலர்களால் அர்ச்சித்தலும், வெள்ளிதானம் அல்லது மொச்சையைத் தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – தோ, ந, நி, நு, நே, நோ, ய, இ, யு )
உண்மையான, நம்பத்தகுந்த, விருச்சிகராசி வாசகர்களே !
தங்கள் இராசிநாதன் செவ்வாய் பொருளாதார முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அளிக்கிறார். பூமிலாபம், ஆண்வாரிசு உருவாகுதல், இன்பம், சந்தோஷம், மணவாழ்வில் மகிழ்ச்சி, நவீன மற்றும் சுகபோகத்திற்கான சாதனங்கள் கிடைத்தல் ஆகிய நன்மைகளையும் தருகிறார். புதன் சிறு சங்கடங்களைந் தந்தாலும், சுக்கிரன் நண்பர்களின் மூலமாக உதவிகளையும், ஆதாயங்களையும், பதவிகளையும் அளிக்கிறார். அலைசல்கள் அதிகரிக்கும். சிலருக்குப் பயணத்தின்போது விபத்துக்கள் ஏற்படலாம். பணியாட்களால் உதவி கிடைக்கும். சிலர் ரகசிய வேலைகளில் ஈடுபடுவர். மொத்தத்தில் விருச்சிகராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- மணவாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பகைகள் நட்பாக மலரும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். சந்ததி விருத்தி ஏற்படும். செயல்திறன் கூடும். அதிகப் புகழும், மனை மூலம் இலாபமும் ஏற்படும். தெய்வபக்தி பெருகும். பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கொள்வர்.
தொழில் மற்றும் வியாபாரம் ;- தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். கூட்டாளிகளை நம்பி புதிய திட்டங்களில் முதலீடு செய்யாதிருப்பது நல்லது. கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வர். கரும்பு, உலோகங்கள் மற்றும் கம்பளிப் பொருட்கள் வியாபாரம் அதிக ஆதாயம் தரும்.
பொருளாதாரத்தில் திருப்தியற்ற நிலை ஏற்படும். வங்கி மூலம் எதிர்பார்த்த வியாபாரத்திற்கான கடன்கள் தடை தாமதிற்குப் பிறகு கிடைக்கும். பங்குச்சந்தையில் யோசித்து முதலீடு செய்வது நல்லது. நிரந்தர சேமிப்புக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் பயன் தரும். தேவையற்ற சாதனங்களை வாங்க சேமிப்புப் பணத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் முழுமனதோடு பணியில் ஈடுபட்ட முடியாதபடி இடைஞ்சல்கள் ஏற்படும். அதன் காரணமாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் மற்றும் முன்னேற்றங்களில் தடைகள் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மனமகிழ்ச்சியை அளிக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் தங்கள் பணியாளர்களிடம் சுமுகமாக இருப்பது உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். இலாபமும் அதிகரிக்கும்.
மாணவர்கள் ;- ஆராய்ச்சி அல்லது விளையாட்டு சம்பந்தமான சுற்றுலாப் பயணங்கள் பயனுள்ளதாக அமையும். மாணவர்கள் கவனமாகப் படித்து முன்னேறும் ஆர்வம் கூடும். போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சில தடைகளை எதிர்கொள்வர். காதல் விவகாரங்கள் ஆரம்பத்தில் சில சிக்கல்களைத் தந்தாலும், முடிவில் சாதகமாக அமையும்.
சந்திராஷ்டமம்; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 16 – 09 - 2014 பகல் 6 - 24 மணிமுதல் 18 – 09 - 2014 இரவு 12 – 22 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 3, 9, 2, 4, 1 மற்றும் 7 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 5, 6, மற்றும் 8 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், மஞ்சள், க்ரீம் மற்றும் சிகப்பு ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம், வெள்ளை மற்றும் பச்சை ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- மஞ்சள் புஷ்பராகத்தை அல்லது செம்பவளத்தை தங்கத்தில் அல்லது செம்பில் பதித்த மோதிரத்தை செவ்வாய்க் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நாலாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – மிதுனம், மாதம் - அய்ப்பசி, கிழமை – வெள்ளி, நட்சத்திரம் -- ரேவதி, திதிகள் – பிரதமை, சஷ்டி மற்றும் ஏகாதசி ஆகும். யோகம் -- வியாதீபாதம், கரணம் -- கரஜை ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து துர்க்கையை வணங்கி, நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், சிவப்பு வண்ண ஆடையணியவும், வெள்ளை மலர்களால் அர்ச்சித்தலும், பவளம் அணியவும் அல்லது சிகப்புக் காளை தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – யே, யோ, ப, பீ, பூ, த, ப, டா, பே )
கடவுளுக்குப் பயந்தவரும், அதிகச் செலவாளியும், நேர்மையானவரும், தனுர் ராசி வாசகர்களே!
தங்கள் இராசிநாதன் குரு, ஆயுள் பாவத்தில் அமர்ந்து அனுகூலமற்ற நிலைகளைத் தந்தாலும், இலாபத்தில் உள்ள செவ்வாய் மற்றும் சனியால் எல்லாமே சுப பலனாகவே நடக்கும் என நம்பலாம். பூமி, வீடு, பயிர் இவற்றால் அதிக தனலாபம் அடைவர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இனிய பயணங்களைத் தருவார். புத்திர பாக்கியம், திருமணம் மற்றும் செல்வ வளத்தைப் பெருக்குவார், மனைவி மூலம் பூர்ண சுகமும் கிடைக்கும். அதனால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும். புண்ணியத்தல யாத்திரைகள் செல்வீர்கள். புதிய பதவிகள், அந்தஸ்து உயர்வு, நல்லாரோக்கியம், அதிகாரிகளின் அங்கீகாரம், நல்லவர்களின் நட்பு, சிறப்பு கௌரவங்கள் அனைத்தும் ஏற்படும். சிலர் தவறான வழிகளில் ஈடுபடுவர். பாக்கிய பாவச் சுக்கிரன், விரும்பிய பொருட்களெல்லாம் கிடைக்கும். கல்வியும் புகழும் ஓங்கும்.முற்பகுதியில் தந்தையுடன் சுமுக உறவு இருக்காது. பிற்பகுதியில் சூரியன் உயர்தர வாகனங்களையும், புகழையும் தருவார். பொன், பொருள் சேரும். சிலருக்கு வழக்குகளில் வெற்றி இன்மை, ஈடுபடும் காரியங்களில் தோல்வி ஆகியவை ஏற்படலாம்.. மொத்தத்தில் தனுசு இராசி அன்பர்களுக்கு 75 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- புதிய ஆபரணங்களை மனதுக்குப் பிடித்தபடி வாங்குவர். மனை, வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சி பெருகும். மனைவியின் மீது பாசம் கூடும். தெய்வபக்தியும், தர்மசிந்தனையும் ஏற்படும். வேண்டுதல்களை நிறைவேற்றப் பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கோள்வர்.
தொழில் மற்றும் வியாபாரம் ;- பொருளாதார உயர்வு காரணமாக சந்தோஷம், பெருகும். அனைத்து வளமும் பெருகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத் தெம்பும், உற்சாகமும் கூடும். அரசு அதிகாரிகள் தங்கள் பதவி உயர்வுக்காகப் போராடும் நிலை ஏற்படும். நகரச் சந்தை நிலவரங்களை அறிந்து செய்யும் வியாபாரம் ஆதாயம் தரும். கடல் வாணிபம் பெருகி இலாபம் கிடைக்கும். இசை மற்றும் சினிமாக் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார உயர்வு அடைவர். சிலருக்கு அரசுப் பணிகள் கிடைக்கும்.
பெண்கள் ;- பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுசரணையால் உற்சாகம் பொங்கி மனநிறைவுடன் பணிபுரிவர். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். குடும்பப் பொறுப்பு காரணமாக வேலையை விடவேண்டிய சூழல் உருவாகும். நண்பர்கள் மூலம் பல உதவிகள் கிடைக்கும். சுயதொழில் புரிவோர் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வர்.
மாணவர்கள் ;- மாணவர்களின் கல்வித்தரம் உயர ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் உதவிகரமாக இருக்கும். வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் முன்னேற ஆர்வம் காட்டவேண்டும். சில வீர, வீராங்கனைகள் தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளையும், பதக்கங்களையும் வெல்வர்.
சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 18 – 09 - 2014 இரவு 12 - 23 மணிமுதல் 21 –19 - 2014 பகல் 11 – 52 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 6, 3, 5, மற்றும் 8 ஆகும். சாதகமான எண்கள் 1 மற்றும் 4 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 2, 7, மற்றும் 9 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், பச்சை, க்ரீம், வெள்ளை மற்றும் வெளிர் நீலமாகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் சிகப்பு மற்றும் கருப்பு ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகத்தை தங்கத்தில் பதித்த மோதிரத்தை வியாழக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – மீனம், மாதம் - ஆடி, கிழமை – வெள்ளி, நட்சத்திரம் -- பரணி, திதிகள் – திருதியை, அஷ்டமி மற்றும் திரயோதசி ஆகும். யோகம் -- வஜ்ரம், கரணம் -- தைதுலை ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ கிருஷ்ணரை வணங்கி, நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், மஞ்சள் வண்ண ஆடையணியவும், மஞ்சள் மலர்களால் அர்ச்சித்தலும், புஷ்பராக்கல் அணியவும் அல்லது கொண்டைக்கடலை தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – போ, ஜ, ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, க, கீ )
தியாக குணம் பொருந்திய, பேரறிவு பெற்ற, மகரராசி வாசகர்களே !
தங்கள் இராசிநாதன் கர்ம பாவத்தில் அமர்ந்து பயனற்ற வேலைகளில் ஈடுபடுத்துவான். வீண்செலவுக்கும் வித்திடுவான். இணைந்திருக்கும் செவ்வாய் காரியத்தடைகளையும், வெளிநாட்டுப் பயணங்களையும், கடின உழைப்பின் பேரில் முயற்சிகளில் வெற்றி தருவான். ஆயினும், களத்திர பாவத்தில் உள்ள குருவால் செல்வம் செழிக்கும். குடும்பத்தில் குதூகலமும், அனைத்துவகை இன்பமும், நல்லுணவும், நிம்மதியான தூக்கமும், வஸ்திர லாபமும் கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். நறுமணப் பொருட்களும், ஆடம்பர சாதனங்களும், திருமணமும், மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும், கல்வியிற் தேர்ச்சியும், புத்திர பாக்கியமும், புதிய பதவிகளும் மற்றும் கௌரவம் ஆகிய அனைத்தையும் தருவான் சுக்கிரன். சிலருக்குக் காயங்கள் ஏற்படலாம். சொத்துச் சேர்க்கையும், எல்லா நிலையிலும் முன்னேற்றங்களும், வியாபாரத்தில் வெற்றியும் ஏற்படும். சிலருக்கு மனக்குழப்பங்களும் ஏற்படலாம். மொத்தத்தில் மகரராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- குடும்ப நிகழ்வுகள் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும். மனைவி சொல் கேட்டுக் கணவன் நடப்பான். குழந்தைகளின் சுகவாழ்வுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். சொல் வாக்கால், செல்வாக்குப் பெறுவீர்கள். பள்ளிக்கான செலவுகள் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் ;- வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி தரும். தொழிலில் முன்னேற்றங்காண புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தும் சூழ்நிலை உருவாகும். கார் போன்ற சொகுசு வகனங்கள் கிடைக்கும். சிலருக்குப் பணியில் அலைச்சல்கள் அதிகமாகும். பதவிப் பிரச்சனைகளும் ஏற்படலாம். ஓயாத உழைப்பு களைப்பை அதிகரிக்கும். பங்குச்சந்தை விவகாரங்களில் யோசித்து இறங்கினால் பொருள் இழப்பைத் தவிர்க்கலாம்.
பெண்கள் ;- அரசுப் பணிபுரியும் பெண்கள், தாங்கள் கேட்ட இடத்திற்க்கு இடமாற்றம் கிடைக்கும். வீட்டு மனைவிகள் தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை கவனிப்பதால் ஓய்வின்றி இருப்பர். குழந்தைகளின் போக்கு கவலையளிக்கும். குடும்பத்துடன் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் செலவீர்கள். மகளிர் குழுக்களில் உள்ள பெண்களுக்குப் புதிய கடன்கள் கிடைக்கும்.
மாணவர்கள் ;- தங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் படிக்க வேண்டிய மிக முக்கியமான காலமாகும். கவனமாகப் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். விளையாட்டு வீரர்கள் பல போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர். நல்ல நண்பர்களோடு பழகுதல் நலம். இல்லையெனில் தீயவழிகளில் சென்று முன்னேற்றம் தடைப்பட நேரும்.
சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 21 – 09 - 2014 பகல் 11 - 53 மணிமுதல் 23 – 09 - 2014 இரவு 11 – 20 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 6, 9 மற்றும் 8 ஆகும். அனுகூலமற்ற எண் 3 ஆகும். மற்ற எண்கள் அனுகூலமானவையாகும்.
அதிர்ஷ்ட நிறம்;- நீலம், சிகப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் மஞ்சள் மற்றும் க்ரீம் ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- நீலக்கல்லை தங்கத்தில் அல்லது பஞ்சலோகத்தில் பதித்து மோதிரத்தை சனிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை இரண்டாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – சிம்மம், மாதம் - ஆவணி, கிழமை – செவ்வாய், நட்சத்திரம் -- ரோஹிணி, திதிகள் – சதுர்த்தி, நவமி மற்றும் சதுர்த்தசி ஆகும். யோகம் -- வைதிருதி, கரணம் -- சகுனி ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயரை வணங்கி, நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், கரிய வண்ண ஆடையணியவும், நீல மலர்களால் அர்ச்சித்தலும், இந்திரநீலக்கல் அணியவும் கருப்புப் பசு அல்லது எள்ளுத்தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – கு, கூ, கோ, ஸ, ஸீ, ஸூ, ஸே,ஸோ, தா )
எதையும் சரியென்று, நியாயம் என்று பட்டால் மட்டுமே செய்யக்கூடிய கும்பராசி வாசகர்களே!
தங்கள் இராசிநாதன் சனியால் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும். செல்வம் சேரும். நல்ல பணியாட்கள் அமைவர். இணைந்திருக்கும் செவ்வாய் திருமணம், மக்கட்பேறு, கால்நடைச் செல்வம் மற்றும் பால்வளம் ஆகியவற்றைத் தருவான். புதன் பிறரைக் கவரும் பொலிவும், அழகும் தருவார். அரசுப் பணி மற்றும் அரசு ஆதரவு கிடைக்கும். சூரியன், காரியத் தடைகளைத் தரலாம். சுக்கிரன், மனதிற்குப் பிடித்தபடி எல்லாம் நடக்க அருள்புரிவான். பலவீடுகளும், பணக்கார மனைவியும் அமைவாள். குருவால் பங்காளிகள் கை ஓங்கும். அட்டம இராகு சிலருக்கு இனம்புரியாத பயத்தைத் தரலாம். பயணங்களையும் அதனால் செலவுகளையும் ஏற்படுத்துவார். சிலருக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படலாம். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். கோவில், குளம் என புனித யாத்திரைகள் மேற்கொள்வர். மதசம்பந்தமான மற்றும் தத்துவ விஷயங்களைப் பற்றிப் பேசுவர். நல்ல நண்பர்கள் கிடைப்பர். அரசால் அனுகூலங்கள் கிடைக்கும். அறிவு விருத்தியாகும். உயர்பதவிகளில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். மொத்தத்தில் கும்பராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்,
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- குடும்பத்தில் உடன்பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நல்ல விதமாக அமையும். நீண்ட காலமாக வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சொன்ன சொல் கேட்காத பிள்ளைகளால் சோர்வு ஏற்படும்.
தொழில் மற்றும் ஆரோக்கியம் ;- தொழில் மூலம் கைநிறையச் சம்பாதிக்கும் பெண்கள் புதிய பொன்நகைகள் வாங்குவார்கள். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள், நண்பர்களால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்க கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பெண்கள் ;- நன்றாக உழைத்துத் தங்கள் பணிகளில் வெற்றி மேல் வெற்றியடைவர். பணியிடங்களில் பிரச்சனை எழாமல் இருக்க தேவையற்ற பேச்சுக்களைக் குறைப்பது நல்லது. வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் தனிக்குடித்தனம் செல்ல முற்படுவர். பெரியவர்களை அனுசரித்து நடந்தால் பெருமை சேரும்.
மாணவர்கள் ;- மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் சிரத்தையுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி நிச்சியம். வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லுவதால் விபத்தைத் தவிர்க்கலாம். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 23 – 09 - 2014 இரவு 11 - 20 மணிமுதல் 26 – 09 - 2014 காலை 09 – 12 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 3, 9, 2 மற்றும் 7 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1, 4, 5, மற்றும் 8 ஆகும். அனுகூலமான எண் 6 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், சிகப்பு, வெள்ளை மற்றும் க்ரீம் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் பச்சை மற்றும் நீலம் ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- நீலக்கல்லை தங்கத்தில் அல்லது பஞ்சலோகத்தில் பதித்து மோதிரத்தை சனிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை இரண்டாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – மகரம், மாதம் - வைகாசி, கிழமை – வியாழன், நட்சத்திரம் -- திருவாதிரை, திதிகள் – திருதியை, அஷ்டமி மற்றும் திரோயதசி ஆகும். யோகம் -- கண்ட, கரணம் -- கிம்ஸ்துக்னம் ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ சாஸ்தாவை வணங்கி, நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், கரிய வண்ண ஆடையணியவும், நீல மலர்களால் அர்ச்சித்தலும், இந்திரநீலக்கல் அணியவும் கருப்புப் பசு அல்லது எள்ளுத்தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
( இராசி அறியாதவர்கள் பலன் அறிய – தீ, து, ஞ, ச, ஶ்ரீ, தே,தோ, ச்ச, சீ )
ஓய்வு அற்றவரும், மனிதாபிமானம் உடையவரும், பிறருக்கு உதவுபவருமான மீன இராசி வாசகர்களே !
தங்கள் இராசிநாதன் குரு மனதில் சந்தோஷத்தையும், நல்ல நண்பர்களின் அருகாமையையும், புத்திர பாக்கியத்தையும், பகை வெல்லுதலையும், அரசு அனுகூலங்களையும், அதிக சொத்து சேர்க்கையையும், அறிவு விருத்தியையும், அதிக இலாபங்களையும், எதிலும் வெற்றியையும், உயர் அதிகாரிகளின் உதவிகளையும் அள்ளித் தருவார். ருண பாவத்தில் உள்ள சுக்கிரன் வயிற்றுவலி போன்ற உபாதைகளைத் தருவார். முற்பகுதியில் சூரியன் தன விருத்தி தருவார். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்பு கூடும். நெடுந்தூரப் பயணங்கள் இலாபம் தரும். பயிர் விளைச்சல்கள் கூடும். இல்லறத்திலும் மகிழ்ச்சியையும், தனலாபத்தையும், அதிக வருமானத்தையும் அள்ளி வழங்குகிறார். பிற்பகுதியில் வீண் பயணங்களும், வீண் அலைச்சல்களும் ஏற்படும். அட்டமச் சனி கடின உழைப்பைத் தரும். ஞானம் அல்லது பக்தி மார்க்கத்தில் மனம் செல்லும். மொத்தத்தில் மீனராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும், மனைவியின் ஒத்துழைப்பின்மை மன அமைதியைக் குறைக்கும் . எனினும் குழந்தைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். கோவில் திருப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம் ;- தொழிலில் புதிய யுக்திகளால் இலாபம் அதிகரிக்கும். தொழிற்சாலையில் புதிய விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப் படுத்தலாம். தீயணைக்கும் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் உயர் அதிகாரிகளின் நெருக்கத்தால் பதவி உயர்வும், இடமாற்றமும் சுலபமாகக் கிடைக்கும்.
பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் சகாயத்தால் துறை ரீதியாகத் தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர். தகுந்த முடிவுகள் எடுத்தால் மட்டுமே புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும். கணவனைப் புரிந்துகொண்டு அவன் போக்கில் விட்டுப்பிடிப்பது நல்லது.
மாணவர்கள் ;- உயர்கல்வி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இதுவே நல்ல மதிப்பெண் பெற சரியான வழியாகும். முகநூல் மற்றும் ட்வீட்டர் போன்ற பொழுதுபோக்குகள் மற்றும் தேவையற்ற இன்பப் பயணங்கள் சிலரின் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி விடக் கூடும். எனவே, வெற்றிகளைக் குவிக்க விழிப்புடன் செயல்பட்டால் இலக்குகளை எளிதில் எட்டலாம்.
சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும். இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 26 – 09 - 2014 காலை 9 - 13 மணிமுதல் 28 – 09 - 2014 மாலை 04 – 38 மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்;- 1, 4, 3 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண் 8 ஆகும். அனுகூலமான எண்கள் 2, 5, 6 ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், சிகப்பு, ரோஸ் மற்றும் ஆரஞ்ச் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் நீலம் ஆகும்.
அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகக்கல்லை தங்கத்தில் பதித்து மோதிரத்தை வியாழக்கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.
ஆகாத – இராசி – கும்பம், மாதம் - பங்குனி, கிழமை – வெள்ளி, நட்சத்திரம் -- ஆயில்யம், திதிகள் – பஞ்சமி, தசமி, அம்மாவசை மற்றும் பௌர்ணமி ஆகும். யோகம் -- வஜ்ரம், கரணம் -- சதுஷ்பாதம் ஆகும்.
பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்கி, நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், மஞ்சள் வண்ண ஆடையணியவும், மஞ்சள் மலர்களால் அர்ச்சித்தலும், புஷ்பராகக்கல் அணியவும் கொண்டைக் கடலைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.