Thursday, May 10, 2018

நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.




உ

நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.



         பொதுவாக கிரகங்கள் தங்கள் நட்பு, ஆட்சி, உச்ச வீடுகளில் இருக்கும் போது பலம் மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
1.   ஆனால், அவை நட்பு, ஆட்சி, உச்ச வீட்டில் இருக்க அதற்குப் பின்போ அல்லது அடுத்தோ பகை கிரகங்கள் இருக்க அந்த கிரகம் தனது முழு சுப பலனை வழங்க இயலாது.
2.   பகை கிரகங்கள் பின்பும், அடுத்தும் இருக்கும் போது இந்த நட்பு, ஆட்சி, உச்ச கிரகம் நடுநிலை அல்லது சமநிலையில் செயல்பட்டு அதன் காரணமாக அவற்றால் நல்ல அல்லது தீய பலன்களை செய்ய முடியாமல் போகிறது. 
3.   ஒரு சுப கிரகத்தின் இரு புறமும் பகை கிரகங்கள் இடம் பெற, சுபக் கிரகம் தரும் சுபலன்கள் தடைப்படுகின்றன.
4.   வக்கிர கிரகம் இருக்கும் இராசிக்கு  அடுத்த இராசியில் அதன்  பகை கிரகம் இருக்க முதல் இராசியில் உள்ள கிரகம் (வ) பாதிப்பு அடைந்து அசுப பலனே தருகிறது.
5.   ஒரு வீட்டினால் ஏற்படப் போகிற நிகழ்வுகள் முதலில் எதிர் பாவம் மூலமாகவும், அதன்பின் அந்த பாவத்திற்கு முன் பின் இராசிகள் மூலமாகவும் நமக்கத் தெரியவருகிறது.  அதே போல் முதலில் 7 ஆம் பார்வை சக்தி மிக்கதாகவும் பிறகு 2 மற்றும் 12 ஆம் பார்வையும் பலம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.
6.   ஒரு கிரகம் உச்சமாகி, தனது உச்ச ஸ்தானத்தில் இருந்தாலும் அதற்கு 7, 2, 12, 5 ஆகிய பாவங்களில் கிரகங்கள் இல்லையெனில் அந்த கிரகம் தனது முழுப் பலனை தராது குறைவான பலனையே தரவல்லது.
7.   கிரகம் உச்சம், ஆட்சி, நட்பு அல்லது எந்த நிலையில் இராசியில் இருந்தாலும் அதற்கு 2, 5, 7, 12 ஆகிய இடங்களில் ஒன்றில் ஒரு கிரகமேனும் இருக்க அந்த கிரகங்கள் பலன்களைத் தரும்.
8.   இரு குறிப்பிட்ட இராசியில் இருக்கும் கிரகத்துக்கு 2, 5, 7, 12 கிரகங்கள் இல்லை எனினும் அது மற்றுமொரு கிரகத்துடன் பரிவர்த்தனை பெற்றால் அது செய்யும் மாயங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
9.   இரு கிரகங்களில் அஸ்தமனம் ஆன கிரகம் கூட பரிவர்த்தனை பெற வியக்கத்தக்க பலன்களை அள்ளி வழங்கும்.
10.   அஸ்தமனமான கிரகத்தொடு உள்ள கிரகம் நட்பு கிரகமானால் அஸ்தமனமான கிரகத்தின்  பாதிப்பு வெளித்தெரியாது.
11.  ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமும் ஆனால் அதன் உச்ச நிலை நீங்கிவிடுகிறது. மேலும், உச்சமாகி, வக்கிரமான கிரகம் தனக்கு 12 இல் ஒரு பகை கிரகத்தைக் கொண்டிருந்தால் பயம் தரக்கூடிய உச்ச, வக்ல கிரகமாய் இருக்கும். அதே போல் உச்ச, வக்கிர கிரகம் தனக்குப் 2, 7, 12 இல் பகைக் கிரகத்தைப் பெற்று இருந்தால் உச்ச கிரகம் தனது உச்ச தன்மையில் முழுமை பெற்று இராது..
12.  12 பாவங்களில் எந்த ஒரு பாவத்தில் இருக்கும் கிரகத்துக்குப் 12 இல் அதன் பகை கிரகம் இருந்தால் இந்த இரு கிரகங்களுமே சுமாரான பலனையே தரும். ஆனால், இந்த 12 இல் இருக்கிற பகை கிரகம் வக்கிர கிரகம் ஆகி இருந்தால் அடுத்து உள்ள கிரகம் சுப பலன்களையே அளிக்கும்.
13.  இரு கிரகங்களில் அதிக பாகையில் நிற்கும்  கிரகம் பகை கிரகமாகி, வக்கிரமும் ஆனால், குறைந்த பாகை கொண்ட கிரகம் மிகச் சுமாரான பலன்களையே அளிக்கும்.
14.  பரிவர்த்தனை பெற்ற இரு கிரகங்களில் ஒன்று நீச கிரகமானால் பரிவர்த்தனை யோகத்தால் நீசம் பங்கமாகிறது.  அல்லது நீச கிரகத்துடன் நட்பு கிரகமோ, சுப கிரகமோ அமர்ந்தாலும் அல்லது அதற்கு 7 மற்றும் 5 ஆம் வீடுகளில்  கிரகம் இருக்கவும் அல்லது பார்வை செய்யவும் அந்த கிரகத்தின் நீசம் பங்கமாகும் என தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட விதிகளுக்கான விளக்கங்களைக் கீழே காணலாம். –

ஜாதகம் - 1

புத, சுக்
செவ்
சூரி,
இராகு



உ. ஜா. 1
குரு



சந்
சனி, கேது

  
       இந்த ஜாதகத்தில் (1) சூரியன் உச்சம் பெற்று இராகுவால் கிரகணமாகி உள்ளதால் தன் சக்திகளை இழந்து தேவையான பலனை தர முடியாதவர் ஆகிறார். (இதை சரிபார்க்க ஜாதகரின் கைரேகையைப் பார்த்தால் சூரிய மேட்டில் பாம்பு போன்று வளைந்த ரேகை தெரியும்)
       சூரியனுக்கு எதிர் பாவமான 7 ஆம் பாவத்தில் அவரின் பகைவன் அமர்ந்துள்ளதால் மேலும் வலுவிழந்தவர் ஆகிறார்.  சூரியன், இராகு இணைவால் ஜாதகரின் தந்தைக்கு கஷ்டங்களும் ஆபத்துக்களும் நிகழ்வதோடு, 5 ஆம் இடமும் இந்த இணைவால் கெடுவதால் புத்திர பாக்கியத்திலும் பிரச்சனை எழுகிறது. சுக்இரனும் சந்தேகத்துக்கு இடம்மின்றி உச்ச நிலையில் உள்ளார். கிரக பாகை வரிசைப்படி கீழ்க்கண்ட நிலைகளில் செவ்வாய், சுக்கிரன், புதன் ( நீசம் ) உள்ளனர். செவ்வாயும் புதனும் அதிக பகை உள்ள கிரகங்களாகி, சுக்கிரன் நடுவில் இடம் பெற்றுள்ளார். இதனால் சுக்கிரனின் உச்ச பலம் பாதியாகக் குறைகிறது. இதன் காரணமாக சகோதரர்களுக்குள் (செவ்வாய்) செல்வம், சொத்துக்கள் காரரணமாக (சுக்கிரன்) அடிக்கடி சண்டைகள் வெடித்து, குடும்பத்தில் வழக்குகளும், மனக் குழப்பங்களும் ஏற்படுகிறது. இரண்டு போராடும் கிரகங்களுக்கு இடையே (செவ்வாய், புதன் ) மாட்டிக்கொண்ட மனைவி, சகோதரிகளைக் குறிகாட்டும் சுக்கிரன் அவர்கள் முன்னேற்றத்தில் அதிக தடைகளைத் தருகிறார்.
         தொழிலைக் குறிக்கும் சனி உச்சம் ஆனால் அவர் பதவி ஏற்பு மற்றும் விடுதலையைக் குறிக்கும் சனிக்கும் பகைவனான கேதுவுடன் இணைந்து, எதிரி சூரியனால் பார்க்கப்படுவது சனியின் பலன் தரும் சக்தியை மிகவும் குறைத்துவிடுகிறது. சந்திரனும் நீசமாகி சனிக்கு இரண்டில் உள்ளதால் ஜாதகருக்கு மிக அருமையான வேலை கிடைத்த போதும், நீழ்த்தரமான, குறுகிய மனம் கொண்டவர்களால் ( நீச சந்திரன் ) அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகி, கெட்ட பெயர் எடுத்து, மனம் நொந்து  அதன் காரணமாக இரண்டு வேலைகளை விட்டுவிட்டார். இவருக்குத் தொழிலில் தொடர்ந்து தொல்லைகளும், அடிக்கடி மன அமைதி இன்மையையும் குறிகாட்டுகிறது.

         உச்ச குருவுக்கு 2, 12, அல்லது 7 இல் கிரகங்கள் இல்லாத காரணத்தால் 

ஜாதகருக்கு சமூக அந்தஸ்து, உடல் ஆரோக்கியம், ஒளிமயமான வாழ்க்கை 

ஆகியவற்றை தந்து அருள்பாலிக்கும் நிலையில் அவரும் இல்லை. குருவுக்கு 5 இல் நீச 

சந்திரன் ( கேதுவுக்கு மிக அருகே துலாத்தில் ) உள்ளார், இதன் காரணமாக குரு 

ஜாதகருக்கு எந்தவித நன்மையையும் தர முடியாத பலம் இழந்த நிலையில் உள்ளார். 

Wednesday, May 9, 2018

நாடியில் இரண்டாம் பாவ பலன்கள்


நாடியில் இரண்டாம் பாவ பலன்கள்


போஜன சுகம்



53.     இலக்னாதிபதியும், சுக்கிரனும் தனபாவத்தில்  இருந்து, 2 ஆம் அதிபதி கேந்திர / கோணத்தில், குரு மற்றும் சந்திரனோடு இருக்க ஜாதகர் வாய்க்கு ருசியான வக்கணையான இராஜ போஜனத்தை உண்டு மகிழ்வார்.
     பலம் மிக்க தன பாவாதிபதி அல்லது ஒரு உச்ச கிரகம் 2 இல் இடம் பெற அல்லது சுபரோடு கூடிய 2 ஆம் வீடு அமைய ஜாதகருக்கு இதே நற்பலன்கள் ஏற்படும் எனலாம். அதே, பலம் மிக்க அசுப கிரகங்கள் 2 ஆம் வீட்டோடு தொடர்புற ஜாதகர் எவ்வளவு பெரிய செல்வந்தராய் இருந்தாலும் நேரத்துக்கு சுவையான ஏன் சுமாரான உணவும் கிடைக்காது.
54.   சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் 2 ஆம் பாவத்தில் இருக்க ஜாதகருக்கு எப்போதும் இராஜ உணவு கிடைக்கும்.
55.    இலக்னத்தில், இலக்னாதிபதி, தனாதிபதி மற்றும் விரயாதிபதி ஆகியோர் இணைந்திருக்கவும் சந்திரன் 9 ஆம் இடத்திலும், குரு  2 ஆம் இடத்தைப் பார்க்கவும் ஜாதகர் பேரரசருக்குப் பரிமாறப்படக் கூடிய உயர்தர உணவுகளை உண்டு மகிழ்வார்.
 56.   கன்னி இலக்னமாகி சுக்கிரன் 4 ஆம் இடத்திலும், புதன் 5 ஆம் இடத்திலும், குரு இலாப பாவத்திலுமாக அமர்ந்திருக்க ஜாதகர் பேரரசருக்குப் பரிமாறப்படக் கூடிய உயர்தர உணவுகளை உண்டு மகிழ்வார்.
57.     சந்திரனும், புதனும் கேந்திரத்தில் அமர்ந்து, 2 ஆம் அதிபதி இலக்னத்தில் இருக்க மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.
58.      சுக்கிரன் 10 ஆம் இடத்திலும், 11 ஆம் இடத்தில் குருவும் அமர ஜாதகர் பால், குளிர் பானம் போன்ற உயர்தர பானங்களைக் அருந்தும் பாக்கியம் உடையவராக இருப்பர்.
பேச்சில் தடங்கல், ஊமை.
59.      2 ஆம் அதிபதி 6, 8, 12 இல் சுக்கிரன் அல்லது புதன் இருக்க தடைப்படும் பேச்சுக்கான பலனை உறுதிப்படுத்துங்கள். (காலபுருஷ தத்துவத்தில் 2 ஆம் இராசிக்கு  அதிபதி சுக்கிரன் ஆவார்).
60.     6 ஆம் அதிபதி, சுக்கிரன் மற்றும் தூமன் இணைந்து 6 ஆம் இடத்தில் அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கவும், 8 ஆம் அதிபதியும், 2 ஆம் அதிபதியும் பலம் இழந்து காணப்பட ஜாதகர் ஊமையாக இருப்பார்.
61.    பலம் இழந்த குரு 2 இல் இருக்க ஜாதகர் திக்கி திக்கி பேசும் திக்குவாய் காரராக இருப்பார். வளர் சந்திரன் 2 இல் இருந்தால் திக்குவாய் சரியாகும். தேய்பிறை சந்திரன் 2 இல் புதனுடன் இருக்க இந்த திக்குவாய் பிரச்சனை தீராது. இராகுவுடன் இணைந்து தேய்பிறைச் சந்திரன் இருக்கும் ஜாதகர்  ஊமையாக இருப்பார்.
62.     2 ஆம் அதிபதி 12 இல் இருக்க, அவருடன் குளிகன் இணைந்து இலக்னத்தில் யமகண்டன் நிற்கவும், தூமன் 2 ஆம் இடத்தைப் பார்க்கவும் ஜாதகருக்கு தீர்க்க முடியாத பேச்சுப் பிரச்சனை இருக்கும் அல்லது நிரந்தர ஊமையாய் இருப்பார்.
63.   2 ஆம் அதிபதி, தூமன் அல்லது எமகண்டனுடன் இணைந்து குருவால் பார்க்கப்பட பேச்சு குறைபாடு இருக்கும்.
64.     இலக்னத்தில் இருந்து முதல் நான்கு வீடுகளின் அதிபதிகள் பலம் இழந்து காணப்பட்டால் ஜாதகர் உண்மையே பேசமாட்டார். கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுவார். பிறரை ஏமாற்றிப் பிழைப்பதிலேயே குறியாய் இருப்பார்.
65.     4, 5 மற்றும் 8 ஆம் அதிபதிகள் இணைந்து 12 இல் இருக்க அல்லது பலம் இழந்து காணப்பட மேற்சொன்ன பலன்களே நடக்கும்.
66.     2 மற்றும் 4 ஆம் அதிபதிகள் வீழ்ச்சி அடைய இவர்களில் ஒருவரை 8 ஆம் அதிபதி பார்க்க மேற்சொன்ன பலன்களே நடக்கும்.
67.    சனி இரண்டிலும் இராகு 5 அல்லது 11 இல் இருக்க ஜாதகரின் பேச்சு அர்த்தமற்றதாகவும், சீரற்றதாகவும் இருக்கும். கொன்னிக் கொன்னி பேசுவார். பொய்யே பேசுவார்.
கண் பாதிப்பு,
 இணைவுகள்
68.        8 ஆம் அதிபதி 2 இல், 4 இல் அசுபக்கிரகங்கள் குருவின் பார்வை பெறாத நிலையில் இருக்க ஜாதகர் பிறவிக் குருடர் ஆவார்.
          குருவின் தாக்கம் கண்ணில்லாதவருக்கு மாற்று மருந்து எனினும், சுக்கிரன் அல்லது சந்திரன் அல்லது சூரியன் ஆகியோர் பலம் பொருந்தியவர்களாக இருக்க கண் பார்வை இன்மை இருக்காது.
69.       12 ஆம் அதிபதி 2 இல் இருந்து, இராகு 4 இல் இருக்க கண்களில் இரணம் காரணமாக கண்கள் பாதிப்பு ஏற்படும். இராகு திசையிலோ அல்லது 4, 2, 12 ஆம் அதிபதிகளின் திசைகளிலோ கண்ணில் ரணம் ஏற்படக் கூடிய பயம் ஏற்படும்.
70.        2 ஆம் வீட்டை சூரியன் பார்க்கவும், 3 ஆம் அதிபதி 6 இல் இருக்கவும் ஜாதகருக்கு இரு கண்களிலும் பிரச்சனை எழலாம்.
71.        8 ஆம் அதிபதி 6 இல் இருந்து சனி பார்க்க அல்லது 2 ஆம் அதிபதி பலம் இழந்து இலக்னாதிபதிக்கும், விரயாதிபதிக்கும் நடுவில் உள்ளதால் கண்பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.
72.   2 ஆம் அதிபதி, சூரியனோடு இணைந்து ருண பாவத்தில் இருக்க இளமையிலேயே பார்வை பாதிப்புகள் ஏற்படும்.
73.      2 ஆம் வீடு மற்றும் சுக்கிரன் இருவரும் சனியால் கெட இளமையிலேயே பார்வை பாதிப்புகள் ஏற்படும்.
74.    கடக இலக்ன ஜாதகருக்கு சனி, செவ்வாய், சூரியன் ஆகியோர் 2 ஆம் பாவமான சிம்மத்தில் இருக்க கண் பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
75.    சுக்கிரனும், குருவும் 6 இல் இருக்க அவர்களுடன் 6 மற்றும் 10 ஆம் அதிபதியும் இணைந்திருந்தால் விபத்தில் கண்களை இழப்பார்.
76.       2 இல் குளிகன், செவ்வாய் மற்றும் 2 ஆம் அதிபதி ஆகியோர் இருந்து, குருவின் பார்வை இல்லையெனில் ஜாதகர் இளமையிலேயே கண் பார்வை அற்றவர் ஆவார். பலம் மிக்க 2 ஆம் அதிபதி மற்றும் குருவின் பார்வை இருக்க இந்த பாதிப்பு இருக்காது.
77.    தங்கள் பகை வீடுகளில் 2 ஆம் அதிபதி, சுக்கிரன், சந்திரன் இருக்க மாலைக்கண் நோய் ஏற்படும். சந்திரனுக்கு பகைவர் இல்லை ஆதாலால் அவளுக்கு பாதகமான வீடுகளை எடுத்துக் கொள்ளலாம்.
78.        இலக்னாதிபதி, 2 ஆம், 7 ஆம் அதிபதிகள், சந்திரன் ஆகியோர் 6 அல்லது  8 ஆம் பாவத்தில் இருக்க   கண்பார்வையைத் திரும்பப் பெற இயலாது.
79.        2 ஆம் இடத்தில் பலம் இழந்த சுக்கிரனும், சூரியனும் இணைந்து குருவின் பார்வையின்றி இருக்க ஜாதகரை மின்னல் தாக்கி கண்ணை இழக்க நேரிடும்.
80.       இலக்னாதிபதி, சனி, சுக்கிரன் ஆகியோர் 2 ஆம் வீட்டில் இருக்க கண்ணில் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.
81.        2 ஆம் வீடு, 3, 12, 6 ஆம் வீடுகளில் முறையே சனி, சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் நிற்க எல்லா விதமான பார்வைக் கோளாறுகளும், பாதிப்புகளும் ஜாதகருக்கு ஏற்படும்.
82.        2 ஆம் அதிபதி 6 இல் சுக்கிரனுடன் இணைந்து இருக்கவும், 2 ஆம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லாவிடில் ஜாதகருக்கு சிறிதளவு பார்வை பாதிப்புகள் இருக்கும்.
83.       இலக்னாதிபதி இலக்னத்திலோ அல்லது 2 ஆம் இடத்திலோ சூரியன் மற்றும் 6 ஆம் அதிபதியோடு இணைந்து இருக்க ஜாதகரின் கண்களின் வண்ணம் வித்தியாசமானதாக இருக்கும்.
84.          2 ஆம் அதிபதி 8 இல் நிற்க, சந்திரனும் சனியும் இணைந்திருக்க, 2 இல் சூரியன் இருக்கவும் ஜாதகரின் கண்களின் வண்ணம் வித்தியாசமானதாக இருக்கும்.
85.        2 ஆம் அதிபதி 12 இல் இருந்து, 2 ஆம் வீடு சனியால் பார்க்கப்பட்டால் கண் பாதிப்புகள் இருக்கும்.
86.     சுக்கிரனுக்கு திரிகோணத்தில் சந்திரன் இருக்க அனைத்துக் கண் பாதிப்புகளும் சரியாகிவிடும்.
தொண்டை, குரல்வளை, பல் பிரச்சனைகள்
87.      இராகு 6 அல்லது 8 ஆம் இடத்தில் 2 ஆம் அதிபதியோடு இருந்து 8 ஆம் அதிபதி மற்றும் செவ்வாயால் பாதிக்கப்பட தொண்டை அல்லது குரல் வளையில் பாதிப்பு ஏற்படும்.
88.      இலக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சந்திரனில் இருந்து 2 மற்றும் 3 ஆம் அதிபதிகள் இணைந்து இருக்க தொண்டை அல்லது குரல் வளையில் பாதிப்பு ஏற்படும்.
89.       4 ஆம் பாவத்தில் இராகு ஒரு சுபரோடு இணைந்து இருக்க ஜாதகருக்கு வெளியில் தெரிகிற அளவுக்கு நீண்ட பற்கள் இருக்கும்.
90.        இதே நிலை ஏற்பட, 2 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டிலும், சூரியன் 8 இல் இருக்க   வேண்டும்.
91.        2 ஆம் வீட்டில் அசுபர், 2, 8 மற்றும் 9 ஆம் அதிபதிகள் இணைந்து இருக்க ஜாதகருக்கு வெளியில் தெரிகிற அளவுக்கு நீண்ட பற்கள் இருக்கும்.
92.    4 ஆம் வீட்டில் இராகு இருந்து, 4 ஆம் அதிபதி சந்திரனோடு இணைந்து 6 அல்லது 8 அல்லது 12 ஆம் வீட்டில் இருக்க பற்கள் சொத்தை ஆகும்.
93.      மிதுன இலக்னத்தில் ஜனித்தவர்களுக்கு சுக்கிரன் நீசமாகி, 6 ஆம் வீட்டில் சந்திரன், செவ்வாய், கேது இருக்க பற்களில் பாதிப்புகள் இருக்கும்.
94.      6 ஆம் வீட்டில் குருவும், 2 இல் இராகுவும், சுக்கிரன் 2 ஆம் அதிபதியோடு இணைந்து 8 ஆம் வீட்டிலும் இருந்தால் ஜாதகருக்கு உடைந்த பற்கள் இருக்கும்.
95.       2 ஆம் அதிபதி , பலம் இழந்த சூரியன், செவ்வாய், குரு, புதன் ஆகியோர் 8 ஆம் வீட்டில் இடம் பெற ஜாதகருக்கு சீக்கிரமே பற்கள் விழுந்துவிடும்.