Showing posts with label தினபூமியில் வெளியானது உங்கள் நட்சத்திர வார பலன்கள்.. Show all posts
Showing posts with label தினபூமியில் வெளியானது உங்கள் நட்சத்திர வார பலன்கள்.. Show all posts

Sunday, April 5, 2015

தினபூமியில் வெளியானது வார பலன்கள். 05 – 04 – 2015 முதல் 11 - 04 – 2015 வரை


தினபூமியில் வெளியானது
உங்கள் நட்சத்திர வார பலன்கள்.
05 – 04 – 2015 முதல் 11 - 04 – 2015 வரை
அஸ்வினி முதல் சித்திரை -2 வரை


மேஷம்
 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --
       இந்த வாரம் ஆரம்பத்தில் உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். தீய நண்பர்களைவிட்டு ஒதுங்கினால் அவமானங்கள் ஏற்படாது தப்பிக்கலாம். ஓய்வின்றி உழைப்பதின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மது, மாமிசம் அருந்துபவர்களுக்குத் அஜீரணத் தொல்லைகள் எழலாம். பின்னர் எதிர்பாராத தனவரவுகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டும், பதவி உயர்வின் மூலமாகப் பணப்பயன்களை அடைவீர்கள். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள்.
பரணி  --
       இந்த வாரம் புதிய வியாபாரத் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் இலாபங்கள் குவியும். வீட்டில் உள்ளவர்கள் மீது வீணான கோபத்தைத் தவிருங்கள்.  வரவைவிடச் செலவுகள் அதிகரிக்குமாதலால், பிறரிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். சிலருக்கு அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். அரசுப் பணிபுரிபவர்களுக்கு உயர்அதிகாரிகளின் உதவியால் பதவி உயர்வுகள் கிடைக்கலாம். சிலருக்குக் கௌரவப் பதவிகள் கிடைத்துப் புகழும், பெருமையும் சேரலாம்சிலருக்குத் தொழிலில் ஏற்படும் பின்னடைவு காரணமாகப் பணவரவுகளில் தாமதம் ஏற்படும். சிலருக்கு மேல்மட்டத்திலுள்ள முக்கிய நபர்களின் உதவியால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில்  முன்னேற்ற வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்.—
      இந்த வாரம் சென்ற வாரம் இருந்த கவலைகளையெல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் சீர்படும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படாது இருக்கப் பிறரிடம் கோபத்தைக் காட்டாது அமைதியைக் கடைப்பிடியுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் சகோதரர்கள் கைகொடுப்பர். செலவுகள் அதிகமாகிப் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்துசேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாயும் ஓரளவு அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்களுக்குத் தங்கள் வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும்.


ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
       இந்த  வாரக் கடைசியில் விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். அரசுப் பணியாளர்கள் அயராத உழைத்து உயர்அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். நெருங்கிய நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, நலம் பெறுவீர்கள். திடீர்ப் பயணங்களின் போது வசதியற்ற நிலைகளால் இடையூறுகள் ஏற்படும். வணிகர்களுக்கு, தர்ணா, கடையடைப்பு போன்ற பிரச்சனைகளால் தொழிலில் தடைகள் ஏற்பட்டு வருமானம் குறையும்.. அதன் காரணமாகக் கடன்கள் வாங்கும் நிலை ஏற்படலாம். சிலருக்கு  வீட்டுச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
ரோகிணி  –
       இந்த வாரம் பணவிஷயமான அலைச்சல்கள் அதிகம் இருக்கும்உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த் தகராறுகள் எழலாம். சமையலறையில் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். சொன்ன பேச்சுக் கேட்காத பிள்ளைகளின் செயல்களால் மன உளைச்சல் ஏற்படலாம். சிலருக்கு தேவதூதர்கள், மகான்களின் சந்திப்புக் கிடைத்து மனதில் அமைதி நிலவும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களீஆல் ஆதாநம் அடைவீர்கள். பொதுச்சேவை  போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
       இந்த வாரம் புதுப்புது தொழில் தொடர்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் ஆதாயங்கள் ஏற்படும். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும் குழந்தைகளால்  தொல்லைகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகலாம். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும்,  கௌரவத்தையும் அடைவீர்கள். சிலர் பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். தீயோர் தொடர்பால் வீண் பிரச்சனைகள் எழலாம்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்
       இந்த வாரம் வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். . பூரண சயன சுகம் ஏற்படும்பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பக்திக் கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். காணாமல்போன பொருட்கள் சேதாரமின்றி கைக்கு வந்து சேரும். சிலருக்குக் காரியத் தடைகள் ஏற்படலாம். நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும்.
திருவாதிரை ---
       இந்த வாரம் மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள்மனதிற்கினிய பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு, டி.வி ஆகியவற்றால் ஏற்படும், கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவேஆழ்ந்து கவனமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
       இந்த வாரம் வீட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம்தங்களுக்குக் கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனப் பொழுது கழிந்து, மகிழ்ச்சி பொங்கும்.  நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. தூரதேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும்சோம்பல் காரணமாகச் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். ஆயினும், எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்
.கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
       இந்த வாரம்  கணவன், மனைவிக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவர். அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். வீட்டில் உறவுகளுக்கு இடையே, எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள்.  செலவுக்கும் குறைவிருக்காது. அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூசம் -- 
      இந்த வாரம் அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். புதிய உறவுகளுடனான உல்லாசப் பொழுதுபோக்குகளாலும், விருந்தினர் வருகையாலும் செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும். சிலருக்குப் பருவமாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். அதன் காரணமாக வைத்தியச் செலவுகள் கூடலாம். வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக கோபமும், உணவின் மீதும் வெறுப்பும் ஏற்படலாம்.
ஆயில்யம்
       இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.
எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அத்தகையோரை விட்டு விலகுவது உத்தமம்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
      இந்த வாரம் மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும்.. சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்வார மத்தியில்  உங்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படும். சிலருக்குப் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். அரசுத் துறையினரால் அச்சம் ஏற்படலாம். திட்டமிடப்பட்ட செயல்களில் பிறரால் தடைகள் ஏற்படலாம். பிறரரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.
பூரம்
       இந்த வாரம் நீங்கள்  விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடனுதவிகள் தாமதத்திற்குப் பின்னரே கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்களில் இடையூறுகள் ஏற்படலாம். அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம். தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
உத்திரம்- 1 பாதம்
       இந்த வாரம் எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். சிலருக்குப் பிள்ளைப் பேறு ஏற்படலாம். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் வரலாம். சிலருக்கு அக்னி பயம், திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
      இந்த வாரம் மாணவர்கள் தங்கள் கடின உழைப்பால் கல்வியில் நல்ல தேர்ச்சி அடைவர். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். தீர்த்த யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா எனச் செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.
 ஹஸ்தம்
       இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும்தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல  பாராட்டும் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் புதுப்புது மாற்றங்களால்  பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நெளிவு சுளிவாக நடக்கும்  வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். விருப்பத்துக்கு இணங்க அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும் 
சித்திரை – 1,2 பாதங்கள்
       இந்த வாரம் தெய்வ தரிசனத்தால்  மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். சிலருக்குத் தீயோரின் செயல் கண்டு ஒருவித அச்ச உணர்வு ஏற்படும்..  கல்வியில் குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மனதில் எல்லையில்லா  மகிழ்ச்சி  ஏற்படும். அவர்கள் வழியே சென்று அவர்களைத் திருத்துவது நல்லது. புதிதாகத் திட்டமிடும் வியாபார முயற்சிகள் வெற்றி அடைந்துஆதாயம் தரும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால்  விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்